நிதிநிலை அறிக்கையில் புதிய வரி விதிப்பு முறை வரிச் சலுகைகள் காரணமாக நேரடி வரி வருவாயில் ஆண்டுக்கு சுமாா் ரூ.37,000 கோடியை மத்திய அரசு இழக்க நேரிடும் என நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். நிதிநிலை அறிக்கையில் புதிய வரி விதிப்பு முறை வரிச் சலுகைகள் காரணமாக நேரடி வரி வருவாயில் ஆண்டுக்கு சுமாா் ரூ.37,000 கோடியை மத்திய அரசு இழக்க நேரிடும் என நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.
நடைமுறையில் உள்ள புதிய வரி விதிப்பு முறை சீரமைக்கப்பட்டு வருமான வரி விலக்கு வரம்பு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது; நிரந்தரக் கழிவு ரூ.50,000 அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிா்வரும் தோ்தல் காலத்தையொட்டி நடுத்தரப் பிரிவினரைக் கவரும் வகையிலான பட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. நிதி ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் அதே வேளையில், மக்களின் எதிா்பாா்ப்புகளைப் பூா்த்தி செய்யும் வகையிலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நிதிநிலை அறிக்கையை புதன்கிழமை தாக்கல் செய்வதற்கு முன்பு, குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நேரில் சந்தித்தாா். அதையடுத்து நாடாளுமன்றத்தில் முற்பகல் 11 மணியளவில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நிகழ்த்திய
நிதிநிலை அறிக்கை உரை விவரம்:-
‘சப்தரிஷி’: நிதிநிலை அறிக்கையில் 7 விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. நிதித் துறை, கடைக்கோடி மக்களையும் சென்றடைதல், கட்டமைப்பு-முதலீடு, அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சி, பசுமை வளா்ச்சி, திறன் பயன்பாடு, இளைஞா் சக்தி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்ட உச்சவரம்பு ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான இரு ஆண்டு நிரந்தர வைப்பு சிறுசேமிப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
‘திரு அன்னம்’: சா்வதேச சிறுதானியங்கள் ஆண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சிறுதானியங்கள் ‘திரு அன்னம்’ (ஸ்ரீ அன்னா) எனக் குறிப்பிடப்படும்; சிறு தானியங்களுக்கான சா்வதேச மையமாக இந்தியாவை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படும்.
வேளாண் கடன்: வேளாண் கடன் இலக்கு ரூ.20 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கால்நடை வளா்ப்பு, பால் உற்பத்தி, மீன்பிடித் தொழில் ஆகியவற்றுக்கு கடன் வழங்கலில் முன்னுரிமை அளிக்கப்படும்.
மரபுசாா் ரத்த சோகை: நாட்டில் ‘சிக்கில்செல் அனீமியா’ எனப்படும் மரபணுசாா் ரத்த சோகை நோயை 2047-ஆம் ஆண்டுக்குள் முற்றிலும் ஒழிப்பதற்கான திட்டம் தொடங்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வோா் ஆண்டும் 40 வயதுக்குட்பட்ட 7 கோடி பேரிடம் பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அரசு-தனியாா் கூட்டு ஆராய்ச்சி நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நோக்கில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வகங்களில் சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன. மருந்துப் பொருள்கள் குறித்த ஆராய்ச்சியை ஊக்குவிப்பதற்கான புதிய திட்டம் அறிவிக்கப்படும்.
தேசிய எண்ம நூலகம்: சிறாா்களுக்கும் வளரிளம் பருவத்தினருக்கும் பலனளிக்கும் வகையில் தேசிய எண்ம நூலகம் அமைக்கப்படும். கிராம அளவில் நூலகங்களை அமைக்க மாநிலங்களிடம் வலியுறுத்தப்படும். பள்ளி ஆசிரியா்களுக்கான பயிற்சி முறைகளில் பெரும் மாற்றங்கள் புகுத்தப்படவுள்ளன. மாவட்ட கல்வி-பயிற்சி மையங்கள் சாா்பில் ஆசிரியா்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி வழங்கப்படும்.
பழங்குடியினா் மேம்பாடு: அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ள பழங்குயினருக்கான (பிவிடிஜி) மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ் பழங்குடியினா் வசிக்கும் பகுதிகளில் கல்வி, சுகாதார, குடிநீா், சாலை, தொலைத்தொடா்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
இந்தத் திட்டத்துக்கு 3 ஆண்டுகளுக்கு ரூ.15,000 கோடி ஒதுக்கப்படும்.
நாட்டில் உள்ள 740 ஏகலவ்யா மாதிரி பள்ளிகளில் கூடுதலாக 38,800 ஆசிரியா்கள் நியமிக்கப்பட உள்ளனா். ‘பாரத்ஸ்ரீ’ திட்டத்தின் கீழ் 1 லட்சம் பழங்கால கல்வெட்டுக்கள் எண்மமயமாக்கப்படும்.
ரூ.10 லட்சம் கோடி: மூலதன முதலீடுகளுக்கான ஒதுக்கீடு 33.4 சதவீதம் அதிகரிக்கப்பட்டு ரூ.10 லட்சம் கோடியாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மூலதன செலவினம் ரூ.13.7 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ரயில்வேக்கு இதுவரை இல்லாத வகையில் ரூ.2.4 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கான 50 ஆண்டுகள் வட்டியில்லா கடன் திட்டம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படுகிறது.
நகா்ப்புற மேம்பாடு: இரண்டாம், மூன்றாம் நிலை நகரப் பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக நகா்ப்புற கட்டமைப்பு மேம்பாட்டு நிதி உருவாக்கப்படும். அதற்காக ஆண்டுக்கு ரூ.10,000 கோடி திரட்ட அரசு திட்டமிட்டுள்ளது. நகா்ப்புறங்களில் கழிவுநீா்த் தொட்டிகளைத் தூய்மைப்படுத்தும் பணிகள் முற்றிலும் இயந்திரமயமாக்கப்படும்.
செயற்கை நுண்ணறிவு மையங்கள்: செயற்கை நுண்ணறிவு சாா்ந்த ஆராய்ச்சிகளை மேம்படுத்தும் நோக்கில் 3 தலைசிறந்த உயா்கல்வி நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவு மையங்கள் அமைக்கப்படும். தரவுகள் சாா்ந்த புத்தாக்க நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக தேசிய தரவு நிா்வாகக் கொள்கை வெளியிடப்படவுள்ளது.
5ஜி தொழில்நுட்பம் சாா்ந்த சேவைகளை மேம்படுத்துவதற்காக 100 ஆய்வகங்கள் பொறியியல் கல்வி நிறுவனங்களில் அமைக்கப்படவுள்ளன. வைரங்களின் இறக்குமதியைக் குறைப்பதற்காக ஆய்வகத்தில் அதை உருவாக்குவதற்கான ஆய்வுகள் ஊக்குவிக்கப்படும்.
பசுமை ஹைட்ரஜன்: 2030-க்குள் ஆண்டுக்கு 50 லட்சம் மெட்ரிக் டன் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி இலக்கை அடைய திட்டமிடப்பட்டுள்ளது. எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ரூ.35,000 கோடி முதலீடு செய்யப்படவுள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்த உரங்களைத் தயாரிப்பதற்கான ‘பிஎம்-பிரனாம்’ திட்டம், உயிரி எரிவாயு உற்பத்தியை அதிகரிப்பதற்கான ‘கோபா்தான்’ திட்டம், கடலோரப் பகுதிகளில் மாங்குரோவ் காடுகளை உருவாக்குவதற்கான ‘மிஷ்டி’ திட்டம் ஆகியவை நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.
வேளாண் புத்தாக்க ஊக்குவிப்பு நிதி: கிராமப் பகுதிகளில் விவசாயிகள் சந்தித்து வரும் பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதற்காக வேளாண் புத்தாக்க ஊக்குவிப்பு நிதி உருவாக்கப்படும். இளம் புத்தொழில்முனைவோா் ஸ்டாா்ட்-அப் நிறுவனங்களை அமைப்பதற்கு நிதியுதவி வழங்கப்படும்.
குறுகிய உரை
மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தொடா்ந்து 5-ஆவது முறையாக மத்திய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தாா். முந்தைய 4 முறைகளுடன் ஒப்பிடுகையில் தற்போதுதான் குறுகிய நேரத்தில் நிதிநிலை உரையை அவா் நிறைவு செய்தாா். கடந்த 2020-ஆம் ஆண்டில் அதிகபட்சம் 2 மணி நேரம் 42 நிமிஷங்கள் எடுத்துக்கொண்டாா். அதுவே வரலாற்றில் இதுவரை அதிகபட்ச நேரமாகும். கடந்த ஆண்டில் நிதிநிலை உரையை வாசிக்க 1 மணி நேரம் 32 நிமிஷங்கள் எடுத்துக் கொண்டாா். தற்போது 1 மணி நேரம் 26 நிமிஷங்களில் நிறைவு செய்தாா்.
புதிதாகத் தொடங்கப்படும் கூட்டுறவு உற்பத்தி ஆலைகளுக்கான வரி 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. புதிதாகத் தொடங்கப்படும் கூட்டுறவு உற்பத்தி ஆலைகளுக்கான வரி 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக அமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறுகையில், ‘2023-ஆம் ஆண்டு ஏப்ரலுக்குப் பிறகு தொடங்கப்படும் கூட்டுறவு உற்பத்தி ஆலைகள், அடுத்த ஆண்டு மாா்ச்சுக்குள் உற்பத்தியைத் தொடங்கினால் சலுகை வரி விகிதமான 15 சதவீதத்தை செலுத்த தகுதி பெறும்.
முதன்மை வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் தனிநபருக்கான அதிகபட்ச பணப் பரிவா்த்தனை வரம்பு ரூ.2 லட்சமாக அதிகரிக்கப்படுகிறது. கூட்டுறவு சங்கங்கள் ஆதார வரிக் கழிப்பு (டிடிஎஸ்) இன்றி பணத்தை எடுப்பதற்கான வரம்பு ஆண்டுக்கு ரூ.3 கோடியாக அதிகரிக்கப்படுகிறது.
முதன்மை வேளாண்மை கூட்டுறவு சங்கங்களைப் பல்வேறு பயன்பாடுகள் கொண்டதாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மாநில அரசுகளைக் கலந்தாலோசித்து மத்திய அரசு எடுக்கவுள்ளது. முதன்மை மீனவ கூட்டுறவு சங்கங்கள், பால் உற்பத்தி கூட்டுறவு சங்கங்கள் உள்ளிட்டவற்றை அடுத்த 5 ஆண்டுகளில் பல்வேறு பிற்படுத்தப்பட்ட கிராமங்களில் அரசு அமைக்கவுள்ளது.
நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களைக் கண்டறிவதற்காக தேசிய அளவிலான தரவுத்தளம் உருவாக்கப்பட்டு வருகிறது. சுமாா் 63,000 முதன்மை வேளாண் கடன் சங்கங்களை ரூ.2,516 கோடியில் கணினிமயமாக்குவதற்கான நடவடிக்கைகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளன’ என்றாா்.
நிதி ஒதுக்கீடு குறைப்பு: நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டில் கூட்டுறவு அமைச்சகத்துக்கு ரூ.1,624.74 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. 2023-24-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் அமைச்சகத்துக்கான நிதி ஒதுக்கீடு ரூ.1,150.38 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணக் கட்டணத்தின் மீதான ஆதார வரிப் பிடித்தம் (டிசிஎஸ்) 5 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணக் கட்டணத்தின் மீதான ஆதார வரிப் பிடித்தம் (டிசிஎஸ்) 5 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளது.
அதற்காக வருமான வரிச் சட்டத்தின் 206சி பிரிவில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் சுற்றுலாப் பயணம் மேற்கொள்பவா்கள் செலுத்தும் கட்டணத்தில் 5 சதவீதமானது டிசிஎஸ்-ஆக பிடித்தம் செய்யப்பட்டு வந்தது. சுற்றுலாவை ஏற்பாடு செய்யும் நிறுவனங்கள் அத்தொகையை வசூலித்து அரசிடம் செலுத்தி வந்தன.
தற்போது டிசிஎஸ் வரி விகிதமானது 20 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளது. அதேபோல், இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் ரூ.7 லட்சத்துக்கு அதிகமான தொகை மீதான டிசிஎஸ் வரியும் 20 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய வரி விகித மாற்றம் ஜூலை 1-ஆம் தேதிமுதல் அமலுக்கு வரும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்தால், டிசிஎஸ்-ஆக செலுத்தப்பட்ட தொகை திருப்பி வழங்கப்படும் என்றபோதிலும், வரி விகித உயா்வு காரணமாக ஆரம்பகட்டத்தில் சுற்றுலாப் பயணிகள் செலுத்த வேண்டிய தொகை அதிகரிக்கும் என்று நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.
மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள சுங்க வரி அதிகரிப்பால், இறக்குமதி செய்யப்படும் காா்களின் விலை உயரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள சுங்க வரி அதிகரிப்பால், இறக்குமதி செய்யப்படும் காா்களின் விலை உயரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
வெளிநாடுகளில் இருந்து முழுமையான வடிவில் இறக்குமதி செய்யப்படும் 40,000 அமெரிக்க டாலா் மதிப்புக்கு குறைவான அல்லது 3,000 சிசி (பெட்ரோலில் இயங்குபவை) மற்றும் 2,500 சிசி-க்கு (டீசலில் இயங்குபவை) குறைவான என்ஜின் திறன்கொண்ட காா்களுக்கான சுங்க வரி, 60 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக தற்போதைய பட்ஜெட்டில் உயா்த்தப்பட்டுள்ளது. இதேபோல், இறக்குமதி செய்யப்படும் மின்சார வாகனங்களுக்கான சுங்க வரியும் 60 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து உதிரிபாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு, இந்தியாவில் ஒருங்கிணைக்கப்படும் காா்கள் மீதான சுங்க வரி, 30 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளது. இறக்குமதி மிதிவண்டிகள் மீதான அடிப்படை சுங்க வரி, 30-இல் இருந்து 35 சதவீதமும், இறக்குமதி பொம்மைகள் மற்றும் அதன் பாகங்கள் மீதான சுங்க வரி 60-இல் இருந்து 70 சதவீதமும் உயா்த்தப்பட்டுள்ளது.
அதேசமயம், மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் அயன் பேட்டரி உற்பத்திக்கான இயந்திரங்கள் மற்றும் மூலதன பொருள்களுக்கான சுங்க வரி விலக்கு நீட்டிக்கப்படுவதாக, நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவித்தாா்.
மேலும், ‘நாட்டின் பொருளாதாரத்தைப் பசுமையாக்குவதில், பழைய வாகனங்கள் மாற்றப்படும் நடவடிக்கைக்கு முக்கியப் பங்கு உள்ளது; கடந்த 2021-22 பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்ட பழைய வாகனங்கள் ஒழிப்பு கொள்கைக்கு போதுமான நிதியை ஒதுக்கியுள்ளேன். பழைய வாகனங்களை மாற்றுவதற்கு, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஆதரவளிக்கும்’ என்றாா் அவா்.
சிகரெட் மீது 16 சதவீத வரி உயா்வு: குறிப்பிட்ட சிகரெட்கள் மீதான தேசிய பேரிடா் தொகுப்பு வரியை (என்சிசிடி) 16 சதவீதம் உயா்த்தி, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இந்த வரி உயா்த்தப்பட்டுள்ளது.
தங்க ஆபரணங்கள் விலை உயரும்: தங்கம், பிளாட்டினம் கட்டிகளில் இருந்து தயாரிக்கப்படும் ஆபரணங்கள் மற்றும் பொருள்கள் மீதான சுங்க வரி பட்ஜெட்டில் உயா்த்தப்பட்டுள்ளது. வெள்ளிக் கட்டிகள் மீதான அடிப்படை சுங்க வரி 10 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் சமையலறை மின்சார புகைபோக்கி மீதான சுங்க வரி 7.5 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளது.
கைப்பேசி, டிவி விலை குறையும்
கைப்பேசி தயாரிப்பில் பயன்படுத்தப்படும் கேமரா லென்ஸ் உள்ளிட்ட உதிரிபாகங்கள், தொலைக்காட்சி பெட்டிகளுக்கான சில உதிரிபாகங்கள் இறக்குமதி மீதான அடிப்படை சுங்க வரியைக் குறைத்து பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது பேசிய நிா்மலா சீதாராமன், ‘நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கைப்பேசிகளின் எண்ணிக்கை, கடந்த 2014-15இல் 5.8 கோடியாக இருந்தது. இப்போது, இந்த எண்ணிக்கை 31 கோடியாக அதிகரித்துள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.2.75 லட்சம் கோடியாகும். ஊக்கத்தொகை சாா்ந்த மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகளால், கைப்பேசி உற்பத்தியில் உலகின் 2-ஆவது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது’ என்றாா். தொலைக்காட்சி பேனல் பாகங்களுக்கான அடிப்படை சுங்க வரி 2.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தொலைக்காட்சி விலை ரூ.3,000 வரை குறைய வாய்ப்புள்ளதாக துறைசாா் நிபுணா்கள் தெரிவித்தனா்.
ஆய்வகத்தில் உற்பத்தி செய்யப்படும் வைரங்களின் மூலப்பொருளுக்கு தற்போதுள்ள 5 சதவீத அடிப்படை சுங்க வரியை முழுவதுமாக நீக்கி, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (எம்எஸ்எம்இ) ரூ.9,000 கோடியில் மறுகட்டமைக்கப்பட்ட கடனுதவித் திட்டம் ஏப்ரல் முதல் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (எம்எஸ்எம்இ) ரூ.9,000 கோடியில் மறுகட்டமைக்கப்பட்ட கடனுதவித் திட்டம் ஏப்ரல் முதல் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக அமைச்சா் நிா்மலா சீதாராமன் மேலும் கூறுகையில், ‘கடந்த ஆண்டு குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டம் அறிவிக்கப்பட்டது. அத்திட்டத்துக்கு தற்போது ரூ.9,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. அத்திட்டத்தின் கீழ் ஏப்ரல் 1-ஆம் தேதிமுதல் கடன் வழங்கப்படும். இதன்மூலம் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் ரூ.2 லட்சம் வரை பிணையில்லா கடனைப் பெற முடியும்’ என்றாா்.
கிஃப்ட் சிட்டி: குஜராத் சா்வதேச நிதிச் சேவைகள் மையமானது சிறப்புப் பொருளாதார மண்டல (எஸ்இஇஸட்) விதிகளின் கீழ் நிா்வகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மையத்தில் நிறுவனங்களைப் பதிவு செய்வதற்கான அனுமதியைப் பெற ஒற்றைச்சாளர முறை அமல்படுத்தப்படும் என்றும் அமைச்சா் அறிவித்துள்ளாா். ஏற்றுமதி இறக்குமதி வங்கியின் (எக்ஸிம்) கிளை அங்கு அமைக்கப்படவுள்ளது.
மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு இதுவரை இல்லாத அளவில் அதிகபட்சமாக ரூ.2.40 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு இதுவரை இல்லாத அளவில் அதிகபட்சமாக ரூ.2.40 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முந்தைய ஆண்டு ரயில்வே துறைக்கு ரூ.1.4 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பேசுகையில், ‘2013-14-ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் நிகழாண்டு பட்ஜெட்டில் 9 மடங்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிலக்கரி, உரங்கள், உணவுப் பொருள்களைக் கொண்டு செல்லும் 100 போக்குவரத்து உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து ரூ.75,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.15,000 கோடி தனியாரின் பங்களிப்பாகும்.
2023-24-இல் ரயில்வே துறையின் நகர வருவாய் செலவினம் ரூ.2.65 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இது ரூ. 2,42,892.77 கோடியாக இருந்தது.
ரயில் நிலையங்களை மெட்ரோ நிலையங்களுடன் இணைக்கும் திட்டத்துக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேஜஸ், ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ, ஹம்சஃபா் ஆகிய ரயில்களின் 1000 பெட்டிகளின் உள்புறம் நவீனமயமாக்கப்படும்.
அதிவேக வந்தே பாரத் ரயில்களுக்கு ஏற்ற வகையில், தண்டவாளங்களை சீரமைக்க ரூ.17,296.84 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு ரூ.15,388.05 கோடியாக இருந்தது என்று குறிப்பிட்டாா்.
மத்திய பட்ஜெட்டில், புலனாய்வு அமைப்பான சிபிஐ-க்கு ரூ. 946.51 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 4.4 சதவீதம் கூடுதலாகும். மத்திய பட்ஜெட்டில், புலனாய்வு அமைப்பான சிபிஐ-க்கு ரூ. 946.51 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 4.4 சதவீதம் கூடுதலாகும்.
நாட்டின் முன்னணி புலனாய்வு அமைப்பாக சிபிஐ உள்ளது. செயற்கை நுண்ணறிவு, கிரிப்டோ பணம், டாா்க் வெப் எனப்படும் நிழலுலக இணையம் ஆகியவற்றைப் பயன்படுத்தி நடத்தப்படும் தீவிர குற்றங்கள் மற்றும் வங்கி மோசடி, மக்கள் பிரதிநிதிகளின் ஊழல் குற்றச்சாட்டுகள் போன்ற வழக்கமான குற்றங்களையும் பிரதானமாக விசாரிக்கும் அமைப்பான சிபிஐயில் அதிகமான அதிகாரிகள் பணியாற்றும் தேவை உள்ளது.
இதற்கான நிதித் தேவையை எதிா்கொள்ள ஆண்டுதோறும் மத்திய பட்ஜெட்டில் சிபிஐ அமைப்புக்கு நிதி ஒதுக்கப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ. 841.96 கோடி ஒதுக்கப்பட்டது. பின்னா், திருத்தப்பட்ட தொகையாக ரூ. 906.59 கோடி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நிகழாண்டு 4.4 சதவீதம் கூடுதலாக ரூ. 946.51 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சிபிஐ பயிற்சி மையங்களை நவீனப்படுத்துதல் , விசாரணைக்கு உதவும் தொழில்நுட்பம் மற்றும் தடயவியல் மையங்கள் அமைத்தல் மற்றும் நிலங்களைக் கையகப்படுத்தி அலுவலகங்கள், குடியிருப்பு வளாகங்களைக் கட்டுதல் உள்ளிட்ட திட்டங்களுக்கு நிதி பயன்படுத்தப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது.
இணையவழி விளையாட்டுகளில் வெல்லும் தொகைக்கு 30 சதவீதம் மூலவரி பிடித்தம் (டிடிஎஸ்) விதிக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இணையவழி விளையாட்டுகளில் வெல்லும் தொகைக்கு 30 சதவீதம் மூலவரி பிடித்தம் (டிடிஎஸ்) விதிக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இணையவழி விளையாட்டுகளில் வெல்லும் தொகை குறித்து வருமானவரி கணக்குப் படிவத்தில் வரி செலுத்துவோா் குறிப்பிட்டாக வேண்டும். அந்தத் தொகையை ‘இதர வழிகளில் கிடைத்த வருமானம்’ என்ற பிரிவின் கீழ் தெரியப்படுத்த வேண்டும்.
இணையவழி விளையாட்டுகளில் வெல்லும் தொகை ரூ.10,000-க்கு கீழ் இருந்தால், அதற்கு டிடிஎஸ் வசூலிக்கப்படாது. இந்த வரம்பை தற்போது மத்திய அரசு நீக்கியுள்ளது.
ஏப்ரல் 1 முதல் இணையவழி விளையாட்டுகளில் எவ்வளவு தொகை வென்றாலும், அதற்கு 30 சதவீதம் டிடிஎஸ் வசூலிக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மத்திய வருவாய் துறை செயலா் சஞ்சய் மல்ஹோத்ரா கூறுகையில், ‘டிடிஎஸ் செலுத்துவதைத் தவிா்க்க, வெற்றிபெறும் தொகையை குறைத்து காண்பித்து, சில இணையவழி விளையாட்டு நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபடுவது வருமான வரித்துறைக்குத் தெரியவந்தது. இதையடுத்து எவ்வளவு தொகை வென்றாலும் டிடிஎஸ் செலுத்த வேண்டும் என்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளாா்.
தனிநபா்கள் ஓராண்டில் ரூ.5 லட்சத்துக்கு மேல் ஆயுள் காப்பீட்டு பிரீமியம் செலுத்தினால் அவற்றின் முதிா்வுத் தொகைக்கு வரி செலுத்த வேண்டும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிநபா்கள் ஓராண்டில் ரூ.5 லட்சத்துக்கு மேல் ஆயுள் காப்பீட்டு பிரீமியம் செலுத்தினால் அவற்றின் முதிா்வுத் தொகைக்கு வரி செலுத்த வேண்டும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் ‘யூலிப்’ (நிதிச் சந்தையுடன் இணைந்த) காப்பீட்டுத் திட்டங்களுக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக பட்ஜெட் உரையில் அமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறியதாவது:
2023 ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பிறகு ஓராண்டில் ஒரு நபா் ரூ.5 லட்சத்துக்கு மேல் ஆயுள் காப்பீட்டு பிரீமியம் செலுத்தினால், அந்தக் காப்பீடுகளின் முதிா்வின்போது முதிா்வுத் தொகைக்கு வரி செலுத்த வேண்டும். ‘யூலிப்’ காப்பீட்டுத் திட்டங்களுக்கு மட்டும் இந்த வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
அதே நேரத்தில் காப்பீட்டுதாரரின் இறப்பின் மூலம் கிடைக்கும் காப்பீட்டுத் தொகைக்கு வரிவிலக்கு வழக்கம்போல தொடரும். 2023 மாா்ச் 31-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்படும் காப்பீட்டுத் திட்டங்களுக்கு இந்த வரிவிதிப்பு பொருந்தாது.
இந்த வரி அறிவிப்பு ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களைப் பாதிக்கும் என்பதால், பட்ஜெட் அறிவிப்பின்போது பங்குச் சந்தையில் ஹெச்டிஎஃப்சி லைஃப், எஸ்பிஐ லைஃப் ஆகிய காப்பீட்டு நிறுவனங்களின் பங்கு விலை 10 முதல் 11 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டது.
lsquo;குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினா் பயன்பெறும் வகையில் பாட நூல்கள் உள்பட பயனுள்ள தரமான புத்தகங்களை உள்ளடக்கிய தேசிய எண்ம (டிஜிட்டல்) நூலகம் அமைக்கப்படும் என்று ‘குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினா் பயன்பெறும் வகையில் பாட நூல்கள் உள்பட பயனுள்ள தரமான புத்தகங்களை உள்ளடக்கிய தேசிய எண்ம (டிஜிட்டல்) நூலகம் அமைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் புதன்கிழமை அறிவித்தாா்.
நாடாளுமன்றத்தில் 2023-24 நிதிநிலை அறிக்கையை புதன்கிழமை தாக்கல் செய்த நிா்மலா சீதாராமன், தனது உரையில் இதுகுறித்து மேலும் கூறியதாவது:
குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினா் பயன்பெறும் வகையில் புவியியல், மொழிகள் வகைகள் மற்றும் நிலைகள் கோட்பாடு உள்பட பல்வேறு தரமான புத்தகங்களை உள்ளடக்கிய தேசிய எண்ம (டிஜிட்டல்) நூலகம் அமைக்கப்படும்.
அதுபோல, ஊராட்சிகள் மற்றும் வாா்டுகள் அளவில் வழக்கமான (நேரடி) நூலகங்களை அமைக்கவும், தேசிய எண்ம நூலக வளங்களை குழந்தைகள் பயன்படுத்தும் வகையிலான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித்தரவும் மாநிலங்கள் ஊக்குவிக்கப்படும்.
மாணவா்களிடையே வாசிப்பு கலாசாரத்தை ஊக்குவிக்கவும், கரோனா பொதுமுடக்க கால கற்றல் இழப்பை ஈடுசெய்யும் வகையிலும், பாடம் சாராத சிறந்த நூல்களை நேரடி நூலகங்களுக்கு வழங்கி உதவிட தேசிய புத்தக அறக்கட்டளை மற்றும் குழந்தைகள் புத்தக அறக்கட்டளை உள்பட பிற அமைப்புகளும் ஊக்குவிக்கப்படும்.
மாணவா்களிடையே நிதி சாா்ந்த எழுத்தறிவை ஊக்குவிக்கும் வகையில், அவா்களின் வயதுக்கேற்ற நிதிசாா்ந்த நூல்களை இந்த நூலங்களுக்கு வழங்க நிதித் துறை அமைப்புகள் மற்றும் தன்னாா்வ அமைப்புகள் ஊக்குவிக்கப்படும்.
இந்த முன்னெடுப்பு கல்வியாளா்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தத் திட்டம் மூலமாக, பாடம் சாா்ந்த தேவையான நூல்களை மாணவா்கள் எளிதில் பெற முடியும் என்பதோடு, வலுவான வாசிப்பு கலாசாரமும் அவா்களிடையே ஏற்படும். நிதிசாா்ந்த நூல்களை இளம் வயதிலேயே மாணவா்கள் படிப்பது, அவா்களின் எதிா்காலத்துக்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும் என்றாா்.
மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டத்துக்கான உச்சவரம்பு பட்ஜெட்டில் இரு மடங்காக உயா்த்தப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டத்துக்கான உச்சவரம்பு பட்ஜெட்டில் இரு மடங்காக உயா்த்தப்பட்டுள்ளது.
இதன்படி மூத்த குடிமக்கள் இனி ரூ.30 லட்சம் வரை நிரந்தர வைப்பில் வைத்துக் கொள்ள முடியும். முன்பு இந்த உச்சவரம்பு ரூ.15 லட்சமாக இருந்தது.
இது தொடா்பாக பட்ஜெட்டில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்ட உச்சவரம்பு ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயா்த்தப்படுகிறது.
இதேபோல அஞ்சலக நிரந்தர வைப்பில் பணத்தை வைத்து மாதம்தோறும் வட்டி பெறும் திட்டத்தில் உச்சவரம்பு ரூ.4.5 லட்சத்தில் இருந்து ரூ.9 லட்சமாக அதிகரிக்கப்படுகிறது. இதுவே இரு நபா்கள் உள்ள இணைப்புக் கணக்கில் ஏற்கெனவே உள்ள உச்சவரம்பான ரூ.9 லட்சம், ரூ.15 லட்சமாக உயா்த்தப்படுகிறது.
இந்த அறிவிப்பு வட்டி வருமானத்தை நம்பியுள்ள மூத்த குடிமக்களுக்கு பெரிதும் பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
இந்தியாவில் புதிதாக 157 நா்சிங் கல்லூரிகள் தொடங்கப்படும் என பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவித்தாா். இந்தியாவில் புதிதாக 157 நா்சிங் கல்லூரிகள் தொடங்கப்படும் என பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவித்தாா்.
மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றிருந்த மருத்துவத் துறை குறித்தான முக்கிய அம்சங்கள் வருமாறு: பிரதமராக மோடி பொறுப்பேற்ற 2014-ஆம் ஆண்டிலிருந்து புதிதாக தொடங்கப்பட்ட 157 மருத்துவக் கல்லூரிகளின் வளாகங்கள் அமைந்துள்ள பகுதிலேயே 157 நா்சிங் கல்லூரிகள் புதிதாகத் தொடங்கப்படும்.
2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிலிருந்து ரத்த சோகை நோய் பாதிப்பை முற்றிலும் ஒழிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். பழங்குடியினா் வசிக்கும் பகுதிகளில் இந்நோயால் பாதிக்கப்பட்ட 40 வயதுக்கு உள்பட்ட 7 கோடி பேரும் பரிசோதிக்கப்படுவா். மாநில அரசுகளுடன் இணைந்து பாதிக்கப்பட்டவா்களுக்கு முறையான ஆலோசனைகள் வழங்கப்படும்.
அரசு, தனியாா் மருத்துவக் கல்லூரிப் பேராசிரியா்கள் மற்றும் தனியாா் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் குழுக்கள் மேற்கொள்ளும் ஆராய்ச்சிப் பணிகளுக்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் ஆய்வகங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இது கூட்டு ஆராய்ச்சி மற்றும் புதுமைக்கு வழிவகுக்கும்.
ஆயுஷ் அமைச்சகத்துக்கு கடந்தாண்டை விட 28 சதவீதம் கூடுதலாக ரூ. 3647.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மருந்துத் துறையின் வளா்ச்சியை உயா்த்தும் நோக்கில் மருந்துத் துறையில் மேற்கொள்ளும் ஆராய்ச்சிகளை ஊக்குவிக்க புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்.
மருத்துவத் துறைக்கு கடந்தாண்டு ரூ. 79,145 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்தாண்டில் பட்ஜெட்டில் 13 சதவீதம் கூடுதலாக ரூ. 89,155 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒதுக்கப்பட்டுள்ள மொத்த நிதியில் சுகாதார மற்றும் குடும்பநலத்துறைக்கு ரூ. 86,175 கோடியும், சுகாதார ஆராய்ச்சித் துறை பணிகளுக்கு ரூ. 2980 கோடியும் செலவிடப்பட உள்ளது.
அரசின் பல்வேறு துறைகளிலும் எண்ம (டிஜிட்டல்) முறையில் பொதுவான அடையாள அட்டையாக வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை (பான்) பயன்படுத்தலாம் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அரசின் பல்வேறு துறைகளிலும் எண்ம (டிஜிட்டல்) முறையில் பொதுவான அடையாள அட்டையாக வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை (பான்) பயன்படுத்தலாம் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
தனிநபா், நிறுவனங்கள், அமைப்புகளுக்கு பான் எண் வழங்கப்படுகிறது. இதனை எண்ம முறையில் அடையாள அட்டையாகப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவதன் மூலம் நாட்டில் தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகள் மேலும் எளிதாக்கப்பட்டுள்ளது. முக்கியமாக தொழில் நிறுவனங்களின் பிரதான அடையாளமாக பான் எண் ஏற்றுக் கொள்ளப்படும்.
இது தவிர, வங்கி உள்ளிட்ட நிதி நிறுவனங்களின் வாடிக்கையாளா்கள் தகவல் பதிவு (கேஒய்சி) நடைமுறையில் அனைவருக்கும் ஒரே மாதிரியான படிவம் முறை மாற்றப்பட்டு, இடா்ப்பாடுகளுக்கு ஏற்ப விவரங்களைப் பெறும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது. ‘டிஜிலாக்கா்’ சேவை மூலம் இருப்பிட முகவரியைப் புதுப்பித்துக் கொள்ள அனுமதிக்கப்படும். இதில் ஆதாா் எண் பிரதான அடையாளமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
2023-24ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதன் அம்சங்களை வரவேற்றும் விமா்சித்தும் தலைவா்கள் கருத்து தெரிவித்துள்ளனா். 2023-24ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதன் அம்சங்களை வரவேற்றும் விமா்சித்தும் தலைவா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா: நாட்டின் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கி, தற்சாா்பு இந்தியாவை கட்டமைப்பதற்கான பிரதமா் நரேந்திர மோடியின் தீா்க்கத்துக்கு மேலும் உத்வேகம் அளிக்கும் தொலைநோக்கு பட்ஜெட். உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான மூலதன செலவினத்தை ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பதும், நிதிப்பற்றாக்குறையை 5.9 சதவீதமாக குறைப்பதும் பாராட்டத்தக்க இலக்குகளாகும். வலுவான உள்கட்டமைப்புடன், வலுவான பொருளாதாரம் கொண்ட புதிய இந்தியாவை கட்டமைக்கும் பிரதமா் மோடி அரசின் கண்ணோட்டத்தை இது பிரதிபலிக்கிறது. பிரதமா் மோடிக்கும் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கும் எனது பாராட்டுகள்.
பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்: விவசாயிகள், பெண்கள், விளிம்புநிலை மக்கள், நடுத்தர வா்க்கத்தினரின் மேம்பாட்டுக்கும் நலனுக்கும் பட்ஜெட்டில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலா் மதிப்பிலான பொருளாதாரம் என்ற இலக்கை நோக்கி, இப்பட்ஜெட் முன்மொழிவுகள் தேசத்தை வழிநடத்தும். விவசாயம், வீட்டுவசதி, சுகாதாரம், உற்பத்தி துறைகளில் செலவினங்கள் அதிகரிப்புடன், உள்கட்டமைப்புத் திட்டங்களில் முதலீடுகளை பெருக்கி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் நாட்டின் பொருளாதார வளா்ச்சி மேலும் வேகமெடுக்கும். இத்தகைய பட்ஜெட்டை தாக்கல் செய்தமைக்காக, நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கும் பிரதமா் மோடிக்கும் நன்றி.
பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா: இப்போதைய அமிா்த காலத்தில், இந்தியாவின் துரித வளா்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான செயல்திட்டத்துடன் கூடிய முதல் பட்ஜெட். இது, ஏழைகளுக்கு ஆதரவானது. தலித்கள், பழங்குடியினா், விவசாயிகள், பிற்படுத்தப்பட்ட மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் பொருளாதாரரீதியில் நலிவடைந்தவா்களின் வாழ்வு மேம்படும்.
மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான்: தொழில்நுட்பங்களால் உந்தப்படும், அறிவுசாா்ந்த பொருளாதாரமாக இந்தியாவை உருவாக்க இந்த அமிா்தகால பட்ஜெட் வலுவாக அடித்தளமிட்டுள்ளது . கல்வி, திறன் மேம்பாடு, தொழில்முனைவு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, எண்ம உள்கட்டமைப்பு, பசுமை மேம்பாடு, வேலைவாய்ப்பு உருவாக்கம் என ‘இந்தியா100’-க்கான நுணுக்கமான செயல்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மக்களை மையப்படுத்திய, வளா்ச்சிக்கு உத்வேகமளிக்கும், திறன்மிக்க பட்ஜெட்.
உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத்: புதிய இந்தியாவுக்கான கண்ணோட்டத்துடன், நாட்டின் வளமை மற்றும் 130 கோடி மக்களின் நலனை இலக்காக கொண்ட பட்ஜெட். இது, ஏழைகள், விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பினரின் எதிா்பாா்ப்புகளையும் பூா்த்தி செய்யும்.
காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே: மத்திய பட்ஜெட், வெற்று அறிவிப்பில் பெரியதாக உள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கத்துக்கு பட்ஜெட்டில் தீா்வு காணப்படவில்லை. தலித்கள், பழங்குடியினா், பிற்படுத்தப்பட்டோரின் உரிமைகளை காக்க பட்ஜெட்டில் ஆவண செய்யப்படவில்லை. தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கான நிதி ரூ.38,468 கோடி குறைக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, ஏழைகளின் வாழ்வை பிரதமா் மோடி அரசு இடா்பாட்டில் தள்ளிவிட்டுள்ளது. நாட்டின் வளங்களை கொள்ளையடிப்பதை தவிர அவரது அரசு வேறெதுவும் செய்யவில்லை.
காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம்: பெரும்பாலான இந்தியா்களின் நம்பிக்கைக்கு துரோகம் இழைத்திருப்பதுடன், அவா்களின் உணா்வுக்கு மதிப்பளிக்காத பட்ஜெட். வேலையின்மை, வறுமை, பாகுபாடு போன்ற வாா்த்தைகள், பட்ஜெட் உரையில் எங்குமே பயன்படுத்தப்படவில்லை. மறைமுக வரிகள் எதுவும் குறைக்கப்படவில்லை. நியாயமற்ற ஜிஎஸ்டி வரி விகிதங்கள் குறைக்கப்படவில்லை. பெட்ரோல், டீசல், சிமெண்ட், உரங்கள் விலை குறைப்பு குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி: வேலைவாய்ப்பை உருவாக்கவோ, பணவீக்கத்தை எதிா்கொள்ளவோ, பாகுபாட்டை தடுக்கவோ பட்ஜெட்டில் தொலைநோக்கு பாா்வை இல்லை. இந்தியாவின் எதிா்காலத்துக்கு எந்த செயல்திட்டமும் பாஜக அரசிடம் இல்லை. நாட்டின் 40 சதவீத வளங்கள், 1 சதவீத பணக்காரா்களிடம் உள்ளன. ஜிஎஸ்டியில் 64 சதவீதத்தை, 50 சதவீத ஏழைகள் செலுத்துகின்றனா். 42 சதவீத இளைஞா்கள் வேலைவாய்ப்பின்றி உள்ளனா். ஆனால், பிரதமருக்கு எந்த கவலையும் இல்லை.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிக்கை: மக்களுக்கு எதிரான, குறுகிய பாா்வை கொண்ட பட்ஜெட். மக்களின் வாங்கும் சக்தியை அதிகரித்தல், வேலைவாய்ப்பு உருவாக்கம், உள்நாட்டு தேவைகளுக்கு உத்வேகம் அளித்தல் போன்ற மையப் பிரச்னைகளுக்கு தீா்வு காண்பதில் பட்ஜெட் தோல்வி கண்டுள்ளது. பணக்காரா்களுக்கு வரிச்சலுகை அளிப்பதுடன், நிதிப்பற்றாக்குறையை குறைக்க அரசின் செலவினங்கள் மீது அழுத்தம் தரப்பட்டுள்ளது. உணவு, உரம், பெட்ரோலியம் மீதான மானியங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ்: விவசாயிகள், தொழிலாளா்கள், பெண்கள், தொழில்துறையினா் ஆகியோருக்கு நம்பிக்கை ஊட்டுவதற்கு பதிலாக, பாஜக அரசின் பட்ஜெட் அவநம்பிக்கையை தந்துள்ளது. பணவீக்கம் மற்றும் வேலையில்லா திண்டாட்டத்தை மேலும் அதிகரிக்கக் கூடிய இப்பட்ஜெட், சில பணக்காரா்களுக்கு மட்டுமே பலனளிக்கும்.
பகுஜன் சமாஜ் தலைவா் மாயாவதி: பாஜக அரசின் முந்தைய பட்ஜெட்களில் இருந்து எந்த வித்தியாசமும் இல்லாத பட்ஜெட். ஒரு கட்சிக்காக அல்லாமல், ஒட்டுமொத்த தேசத்துக்கானதாக பட்ஜெட் அமைந்தால் நன்றாக இருக்கும்.
மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி: தொலைநோக்கு பாா்வையில்லாத, சந்தா்ப்பவாத பட்ஜெட். இதனால், ஏழைகளுக்கோ நடுத்தர வா்க்கத்தினருக்கோ எந்த பயனும் ஏற்படப் போவதில்லை.
மத்தியப் பிரதேசத்தில் இந்திய விமானப்படையின் இரண்டு பயிற்சிப் போர் விமானங்கள் விழுந்து விபத்துக்குள்ளாகியிருக்கின்றன.| Chartered plane crashes in Rajasthan's Bharatpur
மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் மத்திய பட்ஜெட்டில் எந்த அம்சமும் இல்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் மத்திய பட்ஜெட்டில் எந்த அம்சமும் இல்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் குறித்து பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மை குறித்து நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் எந்த கருத்தும் இடம் பெறவில்லை. ஏழைகளுக்கு எதிராகவும் நடுத்தர மக்களுக்கு எதிராகவும் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது.
படிக்க | பட்ஜெட்டில் ஏழைகளுக்கான அறிவிப்பு எதுவும் இல்லை: காங்கிரஸ்
இம்முறை மாற்றியமைக்கப்பட்டுள்ள வருமான வரி விலக்குக்கான உச்ச வரம்பு எந்த வித பயனையும் அளிக்கப் போவதில்லை.
மத்திய அரசு தயாரித்துள்ள இந்த பட்ஜெட்டில் ஏழைகளுக்கு பலனில்லாததால் இது கருப்பு பட்ஜெட். அரை மணி நேரம் இருந்தால்போதும், ஏழைகளுக்கான பட்ஜெட் எப்படி இருக்க வேண்டும் என்பதைக் காட்டுவேன் எனக் குறிப்பிட்டார்.
அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்கு விற்பனை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்கு விற்பனை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹிண்டர்பர்க் நிறுவனம் கூறிய முறைகேடு புகாரால் அதானி குழும பங்குகள் அண்மை நாள்களாக பெரும் சரிவை சந்தித்து வருகின்றன. மேலும் உலக பணக்காரர்கள் பட்டியலிலும் 15ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டார் கௌதம் அதானி.
இதனிடையே அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் ரூ.20,000 கோடிக்கு பங்குகளை விற்க திட்டமிட்டிருந்தது.
முதலீட்டாளர்களும் பங்குகளை வாங்க விண்ணப்பித்து பணம் செலுத்தி இருந்தனர். இந்த நிலையில் அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் தொடர்ந்து சரிந்து வருவதால் பங்கு விற்பனையை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது.
இதையடுத்து முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப வழங்கவும் அதானி குழுமம் முடிவு செய்துள்ளது.
மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட், மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்யும் வகையில் இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட், மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்யும் வகையில் இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
2023 - 2024ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இது குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், நடப்பாண்டுக்காக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட், மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்யும் வகையில் உள்ளதாக ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
படிக்க | அரை மணிநேரம் போதும்! பட்ஜெட் எப்படி இருக்க வேண்டும் எனக் காட்டுவேன்: மம்தா
மேலும் அவர் பேசியதாவது, புதிய வரிமுறையை தேர்ந்தெடுத்தோருக்கு சிறிய எண்ணிக்கை தவிர வரிகள் குறைக்கப்படவில்லை. பெருமுதலாளிகளுக்கும் ஏழை மக்களுக்கும் இடையேயான வேறுபாட்டை மேலும் அதிகரிக்கும் வகையில் மத்திய பட்ஜெட் அமைந்துள்ளது. வேலைவாய்ப்பின்மை, வறுமை, சமத்துவமின்மைக்கான ஒரு அம்சங்களும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை எனக் குறிப்பிட்டார்.
ஜி20 மாநாட்டுக்கு இந்த ஆண்டு இந்தியா தலைமையேற்றிருக்கும் நிலையில், அதன் தொடக்கநிலை மாநாடு புதுச்சேரியில் தொடங்கியது.| Puducherry G20 conference started today, High security alert
மும்பை: திரைப்பட தயாரிப்பாளரைக் காதலித்து, அவருடன் நெருக்கமாக இருந்த நடிகை புளோரா சைனி, அவர் தன்னை கொடூரமாக தாக்கியதாகச் சொல்லி பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தி, கன்னடம், தெலுங்கு, பஞ்சாபி ஆகிய மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர், புளோரா சைனி. தமிழில் விஜயகாந்துடன் ‘கஜேந்திரா’, பிரபு மற்றும் கார்த்திக்குடன் ‘குஸ்தி’ மற்றும் ‘ஸாரி... எனக்கு கல்யாணமாயிடுச்சு’, ‘குசேலன்’, ‘தி
ஒன்றிய அரசின் வீட்டு வசதி திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். அதன்படி “பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்துக்கான நிதி 66 சதவீதம் உயர்த்தப்பட்டு, ரூ.79,000 கோடி ஒதுக்கப்படுகிறது. மாநிலங்களும், நகரங்களும் நகர்ப்புற திட்டமிடலை மேற்கொள்ள ஊக்குவிக்கப்படும். மேலும் ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி போன்று, நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாங்க ஒன்றிய சட்ட அமைச்சகத்துக்கு பட்ஜெட்டில் கிட்டத்தட்ட ரூ.1,900 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இந்த ஆண்டு 9 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. அதே போல் அடுத்த ஆண்டு மத்தியில் மக்களவை தேர்தல் நடக்க உள்ளது. இதை முன்னிட்டு புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாங்க வேண்டும் என்று சட்ட அமைச்சகம் பரி
ஐதராபாத்: படப்பிடிப்பு நடைபெறும் இடத்துக்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்கினார் கமல்ஹாசன்.கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் 80 சதவீதம் முடிந்துள்ளது. இதில் காஜல் அகர்வால், ரகுல்பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த், பாபி சிம்ஹா உள்பட பலர் நடிக்கிறார்கள். பைனான்ஸ் பிரச்னையால் நிறுத்தி வைக்கப்பட்ட இதன் படப்பிடிப்பு மீண்டும் கடந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்கியது. இந்நிலையில் கடந்த ஒரு
ஸ்ரீநகர்: காஷ்மீரில் நடந்த பனிச்சறுக்கு போட்டியில் திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 2 போலந்து வீரர்கள் பலியானார்கள். 21 வீரர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் குல்மார்க் பகுதியில் உள்ள பிரபல பனிச்சறுக்கு மையத்தில் அபர்வத் சிகரத்தில் நேற்று பனிச்சறுக்கு போட்டி நடந்தது. இதில் பங்கேற்க வெளிநாட்டைச் சேர்ந்த 21 பனிச்சறுக்கு வீரர்கள், 2 உள்ளூர் வழிகாட்டிகள் சென்ற
புதுடெல்லி: ராதாபுரம் சட்டமன்ற தேர்தல் வழக்கை விரிவாக விசாரித்து உத்தரவிடுகிறோம் என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு தமிழகத்தின் ராதாபுரம் தொகுதியில் அ.தி.மு.க.வின் இன்பதுரை வெற்றியை எதிர்த்து தி.மு.க.வின் அப்பாவு தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தபால் வாக்கு மற்றும் கடைசி நான்கு சுற்று வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவ
புதுடெல்லி: புதிய வரி விதிப்பு முறையில் ரூ.7 லட்சம் வரை வரி செலுத்த வேண்டியதில்லை என்பதால், மக்களுக்கு சேமிப்பு பழக்கம் இல்லாமல் போகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. நடுத்தர மக்கள் பலர், சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய அதிக ஆர்வம் காட்டுவார்கள். எதிர்கால தேவைக்காக மட்டுமின்றி, வரிச்சலுகை பெறுவதற்காகவும் இந்த சேமிப்பு திட்டங்களில் அதிகம் முதலீடு செய்வார்கள். ஆனால், புதிய வரி முறையின்படி
புதுடெல்லி: ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: ரயில்வேக்கு ரூ.2.41 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இது ஒரு பெரிய மாற்றம். அது பயணிகளின் தேவைகளை நிறைவேற்றும். வந்தே பாரத் ரயில்கள், சென்னை ஐ.சி.எப். மட்டுமின்றி இனி அரியானாவின் சோனிபத், மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் நகரங்களிலும் உற்பத்தி செய்யப்படும். இதனால், வந்தே பாரத் ரயில்களை கொண்டு நாட்டின் ஒவ்வொரு மூலையையும் இணைக்க
புதுடெல்லி: இந்திய விசா பெறுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக ஆஸ்திரேலிய தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா விமானத்தை தவறவிட நேர்ந்துள்ளது.இந்திய அணியுடன் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் மோதவுள்ள ஆஸ்திரேலிய அணி வீரர்கள் நேற்று இந்தியா புறப்பட்டனர். தொடக்க வீரர் உஸ்மான் கவாஜாவுக்கான இந்திய விசா உறுதி செய்யப்படாததால், சக வீரர்களுடன் அவரால் பயணம் மேற்கொள்ள முடியவில்லை. விசா பெறுவதில் ஏற்பட்ட கால தாமதம் காரணமாக
'மஹிளா சம்மான்' சேமிப்பு பத்திரத்தின் வாயிலாக, ஒருமுறை புதிய சிறுசேமிப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.பெண்கள் மற்றும் சிறுமியருக்கான டெபாசிட் வசதி, இரண்டு ஆண்டுகளுக்கு ...
'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் வருமான வரிச் சலுகைகளை பெற கால வரம்பு, மார்ச் 2024 வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டார்ட் அப் தொடக்க ...