பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் சூரத் நீதிமன்றத்தால் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற ராகுல் காந்தி நாடாளுமன்ற பதவியை இழந்துள்ளார் ஒரு மக்கள் பிரதிநிதி என்னென்ன காரணங்களுக்காக பதவி இழப்பை சந்திப்பார்கள் இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி முன்னாள் உள்ள சட்ட வாய்ப்புகள் என்ன உள்ளிட்டவற்றை விரிவாக காணலாம்.மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951இல் தான் நாடாளுமன்றத்தின் இரு அவைகள்
பெண்களுக்கு தனி பட்ஜெட் என்பது பூர்வாங்க பணியில் உள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் பேசிய பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், கோவையில் உள்ள சாலைகள் பழுதடைந்துள்ளதாகவும் அதை மேம்படுத்தி தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதற்கு பதில் அளித்து பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சாலைக
‘அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் அடித்துக் கொண்டிருந்தால் தான், நமக்குள் ஆளுங்கட்சி- எதிர்க்கட்சியாக இருக்க முடியும்’ என கே.பி. முனுசாமி ஆவேசமாக பேசியுள்ளார்.நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் கே.பி.முனுசாமி, தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் 56 வாக்குறுதிகளில் விவசாயிகளுக்காக இடம்பெற்றிருந்ததாகவும், ஆனால் நிதிநிலை அறிக்கைய
சென்னை மாநகராட்சியில் 2022-23 நிதியாண்டுக்கான சொத்து வரி மற்றும் தொழில் வரியினை மார்ச் 31ம் தேதிக்குள் செலுத்த தவறினால் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. நடப்பாண்டில் இதுவரை சுமார் 1400 கோடி வரி வசூல் ஆகியுள்ளதாகவும் தகவல்.சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நிர்வாக ரீதியாக 15 மண்டலங்களும் 200 வார்டுகளும் உள்ளது. இவற்றில், மாநகராட்சிக்கான நிதி ஆதாரமாக பொதுமக்
அமெரிக்க புலனாய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அடுத்து வெளியிட்ட அறிக்கை மூலம், ட்விட்டர் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜேக் டார்சி நடத்தி வரும் மொபைல் பேமென்ட் நிறுவனமான பிளாக் (BLOCK) ஒரேநாளில் சரிவைச் சந்தித்துள்ளது.அமெரிக்க புலனாய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம், இந்தியாவின் அதானி குழும நிறுவனத்தைத் தொடர்ந்து அடுத்து ஒரு முக்கிய விவகாரத்தை விரைவில் அம்பலப்படுத்தவுள்ளதாக கடந்த மார்ச் 22
அவதூறு வழக்கில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது எம்.பி. பதவியை மக்களவை செயலகம் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் எம்.பியும
புதுக்கோட்டையில் நடிகர் வடிவேலு திரைப்பட நகைச்சுவை பாணியில் காணாமல் போன சாலையை கண்டுபிடித்துத் தரக்கேரி காவல் நிலையத்தில் புகாரளித்த இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டத்திற்கு உட்பட்ட கீரமங்கலம் பேரூராட்சி 9-வது வார்டு பகுதியில் கீரமங்கலம் பேரூராட்சி மற்றும் செரியலூர் ஊராட்சிகளை இணைக்கும் கிராம சாலை உள்ளது. இந்த கிராம சாலை மிகச்சரியாக கீரமங்கலம் மற்றும் செரியலூர் இன
அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச் செயலாளர் தேர்தல் ஆகியவற்றை எதிர்த்த வழக்குகளில் எழுத்துப்பூர்வமான வாதங்களை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ். தரப்பில் தாக்கல் செய்யப்பட்டன.அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பி.எஸ்., மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி. டி. பிரபாகர் ஆகியோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்
தமிழ்நாட்டில் பல மாவட்ட ஆட்சியர்களின் பெயரைக் கூறி தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்த நபர் கைது செய்யப்பட்டார்.புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்தானம் (எ) சந்தான பாரதி. டாக்ஸி ஓட்டுநரான இவர், பட்டுச்சேலை வாங்குவதற்காக காஞ்சிபுரத்திற்கு சென்றுள்ளார். அப்போது அருகாமையல் இருந்த டீக்கடையில் பேப்பர் பார்த்து கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த பேப்பரில் இருந்த ஒரு செய்தியில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி எ
மத்திய அரசு அலுவலகங்களில் நூறு சதவிகிதம் இந்தி மொழியை அமலாக்கம் செய்வது தொடர்பான சுற்றறிக்கையை திரும்பப்பெற வேண்டுமென தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கோரிக்கை வைத்துள்ளார்.தனது கோரிக்கையில் அவர், “தென்னக ரயில்வேயின் 169 ஆவது அலுவல் மொழி அமலாக்கக் குழு கூட்ட சுற்றறிக்கையில் உடல் நலம் பற்றிய வழிகாட்டி நூல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், அக்கூட்டத்தில் 100 சதவீத இந்தி ம
நாகை அருகே வடக்கு பனையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பசுமையான மற்றும் தூய்மையான பள்ளிக்கான விருது வழங்கும் விழாவிற்கு வந்த விருந்தினர்களுக்கு, டீ வாங்க பள்ளி மாணவர்களை கடைக்கு அனுப்பியதால் சர்ச்சை எற்பட்டுள்ளது.தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க அறக்கட்டளை சார்பில் 10 வகையான நிபந்தனைகளுடன் பசுமையான - தூய்மையான பள்ளி தேர்வுக்கான கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட ப
“என்னை விஷம் வைத்து கொல்ல முயன்றார்கள்” என பாகிஸ்தான் அணியின் முன்னாள் தொடக்க வீரரான இம்ரான் நசீர் தெரிவித்திருப்பது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து இம்ரான் நசீர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ”எனக்கு உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டு, அதற்காகச் சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தபோது, என்னுடைய மருத்துவ அறிக்கையில் எனக்கு விஷம் கொடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிய
ஆஸ்திரேலிய தொடரில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ், ஹாட்ரிக் டக் அவுட்டான நிலையிலும், கேப்டன் ரோகித் சர்மா அவருக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகிறார். இந்நிலையில், சூர்யகுமார் யாதவுக்கு ஆதரவாக 2018இல் பதிவிட்டிருந்த ரோகித் சர்மாவின் ட்விட் தற்போது வைரலாகி வருகிறது.சமீபத்தில் நிறைவடைந்த ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி தொடரில் இடம்பெற்றிருந்த சூர்யகுமார் யாதவ், தொடர்ந்து 3வது ஒருநாள் போட்டியிலும் டக் அவுட்டா
நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 85.‘துணிவு’ படத்துக்குப்பின், அடுத்தப் படத்திற்கான பணிகளுக்கு இடையே தனது குடும்பத்துடன் ஓய்வில் இருந்து வருகிறார் நடிகர் அஜித். இந்நிலையில், வயது மூப்பு மற்றும் நீண்ட நாள் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் இன்று காலை உயிரிழந்
திருவள்ளூரில் கடந்த 20 ஆம் தேதி நகை வியாபாரியிடம் 1.4 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மற்றொரு நகைக்கடை உரிமையாளர் உட்பட 5 பேரை கைது செய்த போலீசார், அவரிகளிடம் இருந்து 1.4 கிலோ தங்கததை மீட்ஷடுள்ளனர்.சென்னை நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த நகை வியாபாரி ராமேஸ்வர லால் என்பரிடம் வேலை பார்க்கும் காலுராம் (35) மற்றும் சோகன் (30), கடந்த 20 ஆம் தேதி தாமரைப்பாக்கம் பகுதியில் உள்ள நகைக்கடையொன்றில்
புதுச்சேரியில் தமிழக காவலர் ஒருவர் உச்சகட்ட மது போதையில் புதுச்சேரி காவலர்களை ஆபாச வார்த்தைகளால் திட்டி ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதைத் தொடர்ந்து புதுச்சேரி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.புதுச்சேரி கடலூர் எல்லையில் புதுச்சேரி மாநிலத்திற்கு உட்பட்ட கன்னியகோயில் எல்லை பகுதி உள்ளது. அங்கு ஏராளமான மதுபான கடைகள் உள்ளன. அங்கு நேற்று மாலை 37 வயது மதிக்கதக்க நபரொருவர் உச்சகட்ட மது போதையில் அவ்வழ
காஞ்சிபுரம் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசின் சார்பில் நிவாரண நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி முதலமைச்சர் அறிவித்த மூன்று லட்ச ரூபாய்க்கான காசோலையை பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வழங்கினார்.காஞ்சிபுரம் அருகே வளத்தோட்டம் பகுதியில் செயல்பட்டு வந்த பட்டாசு தொழிற்சாலையில் கடந்த 18-ம் தேதி திடீர் வெடி விபத்து நடைபெற்றது. இந்
ஆலங்குடியில் 75 வயது முதியவர் உயிரிழந்த நிலையில் அவரது உடலை வீட்டிலிருந்து வெளியே கொண்டு வர பாதை இல்லாததால் 14 மணி நேரத்திற்கு மேலாக அவரது உறவினர்கள் பெரும் தவிப்பிற்கு உள்ளாகினர்.புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் சுந்தரம் (75). இவர், தனது குடும்பத்தோடு அப்பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் இவர்களது வீட்டிற்குச் செல்லும் பாதையை அருகே வசிப்பவர்கள் காம்பவுண்ட் சுவர் எ
குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகையை செப்டம்பர் மாதத்தில் 29 ஆயிரமாக வழங்க வேண்டுமென அண்ணாமலை கூறிய கருத்துக்கு “மோடி ஆளுக்கு 15 லட்சம் போடுவேன் என கூறினார். அதை தற்போது கணக்கிட்டு கொடுத்தால் ஸ்டாலின் அவர்கள் 29 ஆயிரத்தை வழங்குவார்” என ஆர்.எஸ்.பாரதி பேசியுள்ளார்.தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் வி
சென்னை தேசிய போதை பொருள் கட்டுப்பாட்டுத் துறை மண்டல இயக்குனரின் வாகனத்தை அனுமதியின்றி எடுத்துச் சென்று, விபத்தும் ஏற்படுத்திய விவகாரத்தில் கார் சாவி எடுத்து கொடுத்தவர் மற்றும் ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்தியவர் என்ற அடிப்படையில், இரு அதிகாரிகள் மீது திருட்டு வழக்கு பதியப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சென்னை, அயப்பாக்கம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதியில் இந்திய
தருமபுரி அருகே 11 ஆம் வகுப்பு மாணவியை கடத்தி, திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞரொருரை போக்சோ சட்டத்தின் கீழ் மகளிர் காவல் துறையினர் கைது செய்தனர்.தருமபுரியை அடுத்த செந்தில் நகர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர், எலக்ட்ரீஷியனாக வேலை செய்து வருகிறார். இவர் தருமபுரியை சேர்ந்த ஒரு 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்
அதானி குழும விவகாரத்தில் நாடாளுமன்ற குழு அமைத்து விசாரணை நடத்த மத்திய அரசு ஒப்புக் கொள்ளாத நிலையில், ‘பட்ஜெட் ஒதுக்கீடுகள் தொடர்பான விவாதங்களை மாநிலங்களவையில் நடத்தக்கூடாது’ என எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பாகம் தொடர்ந்து முடங்கி வரும் நிலையில், ‘பட்ஜெட் ஒதுக்கீடுகள் தொடர்பான விவாதங்களை நடத்த அவகாசம
இந்த வருட பட்ஜெட்டில் பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதிக்கான ஒப்புதலை மக்களவை அளித்துள்ளது.இன்று மாலை 6 மணிக்கு மக்களவை கூடி குரல் வாக்கெடுப்பு மூலம் பட்ஜெட் ஒதுக்கீடுகளுக்கு ஒப்புதல் அளித்தது. நேரமின்மை காரணமாக விவாதம் இன்றி ஒப்புதல் அளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என சபாநாயகர் ஓம் பிர்லா குறிப்பிட்டார்.பட்ஜெட் கூட்டத்தொடரின் விவாதம் தொடங்கிய நாளிலிருந்து தினமும் பாஜக - எதிர்க்கட்சிகள்
இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதம் தொடங்கியதை முன்னிட்டு உலக புகழ்பெற்ற நாகை மாவட்டம் நாகூர் தர்காவில் சிறப்பு தொழுகை இன்று நடைபெற்றது.சகோதரத்துவத்தையும் ஏழைகளுக்கு உதவி செய்வதையும் வலியுறுத்தும் விதமாக முஸ்லிம்களால் ரமலான் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் வெகுசிறப்பாக கொண்டாடப்படும். இதற்காக ரமலான் மாதத்தில் 30 நாட்கள் அதிகாலை முதல் சூரியன் மறையும் வரை பகலில் நோன்பிருந்து இரவில் தாராவீஹ் என்ற சிறப்பு தொழு
இந்தியாவிலிருந்து 16.80 கோடி பேரின் ரகசிய தகவல்களைத் திருடி விற்பனை செய்திருக்கும் கும்பல் பற்றிய தகவல் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இன்று கை விரல்களுக்குள்ளேயே விஞ்ஞானம் விரிவடைந்திருந்தாலும் அதனால் ஏராளமான ஆபத்துகளும் வளர்ந்திருக்கின்றன. நாம் அடிக்கடி பயன்படுத்தும் செல்போன், கணினி, மடிக்கணினி உள்ளிட்ட சாதனங்களில்தான் நம்முடைய பல்வேறு ரகசியமான தகவல்களைச் சேமித்து வைக்கிறோம். குறிப்பாக
கார் விபத்து வழக்கில் ஆஜராகாமல் இருந்து வந்த நடிகை யாஷிகாவிற்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது செங்கல்பட்டு நீதிமன்றம்.செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே சூலேரிக் காடு பகுதியில் கடந்த 2021ஆண்டு ஜூலை மாதம் நடிகை யாஷிகா ஆனந்த், அவரது தோழி வள்ளிசெட்டி பவனி, ஆண் நண்பர்கள் சையத் (31), ஆமீர் (32) ஆகியோருடன் சென்னையில் இருந்து புதுச்சேரி சென்றார். பின்னர் அங்கிருந்து நள்ளிரவு 12 மணியளவில் கிழக்கு கட
மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி மொழியை 100% நடைமுறைபடுத்துவதை வலியுறுத்தி தெற்கு ரயில்வேயின் மண்டல அலுவல் மொழி அமலாக்கக் குழு கூட்டத்தில் டெமோ செயலி வெளியிடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.தெற்கு ரயில்வேயின் மண்டல அலுவல் மொழி அமலாக்கக் குழுவின் 169வது கூட்டம் இன்று (23.03.2023) தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் ஸ்ரீ கவுஷல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. அதில் முதன்மை தலைமை மெக்கானிக்கல் இன
மின்வேலியில் சிக்கி யானைகள் பலியான விவகாரம் தொடர்பாக, ஏப்ரல் 19ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி, முதன்மை தலைமை வனப் பாதுகாவலருக்கும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனருக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வன விலங்குகள் பாதுகாப்பு, யானைகள் பாதுகாப்பு மற்றும் வேட்டை தடுப்பு, வனத்துறை அதிகாரிகள் நியமனம் தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் என்.சதீஷ
காலி பிளாஸ்டிக் பாட்டிலை கொடுத்தால் ஒரு ரூபாய் வழங்கும் திட்டம் நெல்லை மாநகராட்சியில் சோதனை ஓட்ட முறையில் தொடங்கப்பட்டுள்ளது.காலி தண்ணீர் பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால், ஒரு பாட்டிலுக்கு ஒரு ரூபாய் வழங்கும் திட்டம் இன்று நெல்லை மாநகரத்தில் சோதனை ஓட்டத்தில் தொடங்கப்பட்டது. நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் டவுண் சுகாதார அலுவலகத்தில், சுகாதார அலுவலர் இளங்கோ தலைமைய
தமிழகத்தில் இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான வழக்கு, நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ‘கோயில் அறங்காவலர்களை தேர்வு செய்வதற்கான மாவட்ட குழுக்கள் மே மாதத்துக்குள் நியமிக்கப்படும்’ என இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் நீதிமன்றத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையி