கனடாவை(canada) சேர்ந்த சிலர் மிக அநாகரிகமான விமர்சனங்களை முன்வைக்கின்றனர் என கனடிய பிரதமர் வருத்தம்
வெளியிட்டுள்ளார்.குறிப்பாக தமது குடும்பத்தை இழிவுபடுத்தும் வகையில் சில விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது சில சந்தர்ப்பங்களில் உணர்வுபூர்வமான பாதிப்புக்களை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.விமர்சனங்கள் அநாகரிகமானவை
<...
முதலீட்டு ஆலோசகர் வைஷாலி பரேக் இன்று கேஸ்ட்ரோல் இந்தியா, சிடிஎஸ்எல் மற்றும் சிஎஸ்பி வங்கி ஆகிய மூன்று பங்குகளை வாங்க பரிந்துரைத்துள்ளார். இதுகுறித்து மேலதிக விவரங்களைக் காண்போம்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினார். இந்த விழாவில் இந்திய வம்சவாளிகள் பலர் பங்கேற்றனர். US President Joe Biden celebrated Diwali at the White House. Many people of Indian origin participated in this ceremony.
இஸ்ரேலில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பான UNRWA-வின் செயல்பாடுகளை தடை செய்ய மசோதா நிறைவேற்றி இஸ்ரேல் நாடாளுமன்றம் வாக்களித்துள்ளது. கிழக்கு பாலத்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண முகமை (UNRWA) பாலத்தீன அகதிகளுக்காக செயல்படுகிறது. இதனால் அந்த பகுதியின் நிலைமை எப்படி இருக்கும்?
நடிகை சாய் பல்லவி தற்போது ஒரு சமூக ஊடகச் சர்ச்சையில் சிக்கியுள்ளார். சில சமூக ஊடக பயனர்கள் வலைதளங்களில் ‘சாய் பல்லவியை புறக்கணியுங்கள் (Boycott Sai Pallavi) என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ஏன்? இதன் பின்னணி என்ன?
தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாட்டில் இயக்கப்படும் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்து வருகின்ற சூழலில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் நிறுத்தப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது. இருந்தும் தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்கிறது. ஏன்?
தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தங்கத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு பல வழிகள் உள்ளன. தங்கமாக வாங்கி வைப்பது பாரம்பரிய முறை என்றாலும் தற்போது பல வழிகள் வந்துவிட்டது. தங்கத்தில் முதலீடு செய்யும் பிற வழிகள் என்ன? அதிலிருந்து பணத்தைத் திரும்பப் பெறுவது எப்படி?
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் தய்யம் விழாவின் போது ஏற்பட்ட பட்டாசு விபத்தில் 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இவர்களில் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து நேரிட்டது எப்படி?
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இரானின் ராணுவ தளவாடங்கள் எந்த அளவுக்கு சேதமடைந்துள்ளன என்பதை பிபிசி வெரிஃபை ஆய்வு செய்த செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.
நாடு முழுவதும் மற்றும் உலகம் முழுவதும் இன்று நிகழ்ந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு இங்கு தரப்பட்டுள்ளது. அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் சுருக்கமாக படிக்க மேலும் தொடருங்கள்.
நாளொன்றுக்கு 300 முறை ஆழ்கடலுக்குள் சென்று, அங்கு பல நிமிடங்கள் தங்களின் மூச்சை அடக்கி டைவ் செய்யும் பெண்கள் ஆவார்கள். பல நூற்றாண்டு காலமாக தென்கொரியாவின் ஜெஜூ தீவுகளை சேர்ந்த ஹேன்யோ டைவர்கள் எனப்படும் ஒரு பெண்கள் குழு ஆக்ஸிஜன் உதவி இன்றி கடலுக்குள் டைவ் செய்து கடல் வாழ் உயிரினங்களை பிடித்து வருகிறார்கள்.
இந்த குழுவில் பெரும்பாலானோர் அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களாக உள்ளார்கள். ஏன் என்றால் தற்போது இந்த தொழில் செய்ய சில இளம்பெண்கள் மட்டுமே ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்தியா - கனடா உறவில் சமீப காலமாக நிலவும் விரிசலுக்கு காலிஸ்தான் பிரச்னை முக்கிய காரணமாகும். கனடாவில் சீக்கியர்களிடையே காலிஸ்தான் ஆதரவு எந்த அளவுக்கு உள்ளது? கனடா அரசியலில் அவர்கள் எவ்வளவு தூரம் தாக்கம் செலுத்துகிறார்கள்?
‘யூக்ளிட் விண்வெளி தொலைநோக்கி’ மூலம் எடுக்கப்பட்ட படங்கள் மூலம் உருவாக்கப்பட்ட பிரபஞ்சத்தின் முப்பரிணாம வரைபடம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த வரைபடம் 10 கோடி நட்சத்திரங்களையும் விண்மீன் திரள்களையும் காட்டுகிறது. இந்த யூக்ளிட் விண்வெளி தொலைநோக்கியை உருவாக்கியது ஐரோப்பிய விண்வெளி முகமை (இ.எஸ்.ஏ). இப்போது அந்த அமைப்பு இந்தப் படங்களை வெளியிட்டுள்ளது.
கனடிய(canada) அரசாங்கத்தின்
சார்பில் பழங்குடியின சமூகத்தினரிடம் பழங்குடியின
விவகார அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி(Gary Anandasangaree) பகிரங்க
மன்னிப்பு கோரியுள்ளார்.
ஒன்றாரியோ பழங்கு
டியின சமூக மக்களின்
பணத்தை துஷ்பிரயோகம்
செய்தமைக்காக அவர்
இவ்வாறு மன...
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய விஜய், ““கொள்கை கோட்பாட்டளவில் திராவிடம், தமிழ் தேசியம் ஆகிய இரண்டுக்கும் பிரிவினை இல்லை, இரண்டும் நமது இரண்டு கண்கள்,” என்றார்.
முழுநேர டெஸ்ட் பந்துவீச்சாளராக இல்லாத போதும், சமீபத்தில் புனேவில் நடந்த இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற காரணமாக இருந்தவர்களுள் மிட்செல் சான்ட்னர் முக்கியமானவராக இருந்தார். 69 ஆண்டுகளுக்கு பின் நியூசிலாந்து அணி இந்தியாவில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி உள்ளது.
அரசியலில் தீவிரமாகக் களமிறங்கியிருக்கும் நடிகர் விஜய், தனது சித்தாந்த எதிரியாக பா.ஜ.க-வையும் அரசியல் எதிரியாக தி.மு.க-வையும் முன்னிறுத்தியிருக்கிறார். இதன்மூலம் அவர் யாருடைய வாக்கு வங்கியைக் குறிவைக்கிறார்? அவரால் அ.தி.மு.க-வின் வாக்கு வங்கியைக் கைப்பற்ற முடியுமா?
US Elections 2024: அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான நேரம் நெருங்கி வருகிறது. நவம்பர் 5-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. கடந்த 170 ஆண்டுகால வரலாற்றை நீங்கள் பார்த்தால், அமெரிக்க தேர்தல் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. அது ஏன் என பார்ப்போம்.
இரான் உச்சத் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி இஸ்ரேலின் தாக்குதலுக்கு மிகவும் அளவான மறுமொழி கொடுத்துள்ளார். உடனடியாக பதிலடி கொடுக்கப்படும் என்று சவால் விடுவதைத் தவிர்த்த அவர், அதே சமயம் இஸ்ரேலின் தாக்குதலைக் குறைத்து மதிப்பிடவோ, மிகைப்படுத்தவோ கூடாது என்றும் கூறியிருக்கிறார். உண்மையில் இந்தத் தாக்குதல் இரானில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது?
இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு துபாய் உட்பட ஐக்கிய அரபு அமீரக (UAE - யு.ஏ.இ) நாடுகளுக்கு விசா ஆன் அரைவல் (Visa on Arrival) வசதியை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி இந்திய குடிமக்கள் யு.ஏ.இ விமான நிலையத்தில் விசாவைப் பெற்றுக் கொள்ளலாம்.
அக்டோபர் 18, 2024 பிரேசில் பாடகர் புருனோ மார்ஸுடன் இணைந்து தனது சமீபத்திய பாடலான ‘ஆப்ட்’-ஐ வெளியிட்டார் பிளாக்பிங்கின் ரோஸே. இதன் மூலம் கே-பாப் வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லை அமைத்துள்ளார் ரோஸே.
ஆஸ்திரேலியாவில் பெண் ஒருவர் நடைபயணம் சென்றபோது கீழே விழுந்த தன் செல்போனை எடுக்க முயன்றபோது, இரு பாறைகளுக்கு நடுவே பல மணிநேரம் தலைகீழாக சிக்கிக்கொண்டார்.
லெபனான் (Lebanon) மீது இஸ்ரேல் (Israel) மீண்டும் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த தாக்குதலானது நேற்று (27) இடம்பெற்றுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு ஒக்டோபர் ஏழாம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர்.இஸ்ரேல் தாக்குதல்
இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதுடன் இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக...
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் அதன் தலைவர் விஜயின் பேச்சுக்கு தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்வினையாற்றியுள்ளனர். அவர்கள் என்ன கூறியுள்ளனர்?
புதிய அதிபரை தேர்ந்தெடுக்க அமெரிக்க வாக்காளர்கள் தயாராகி வரும் நிலையில் இந்த அமெரிக்காவில் உள்ள பழமைவாத வலதுசாரி புராட்டஸ்டன்ட் வாக்காளர்கள் இடையே அரசியலும் மதமும் எவ்வாறு பின்னிப் பிணைந்துள்ளன என்பதற்கான தெளிவான அடையாளமாக இந்த துண்டுப்பிரசுரங்கள் உள்ளன
பிபிசி புலனாய்வு செய்தியாளர் ஒருவர் புலம்பெயர்ந்தவர் போன்று நடித்து, ஜெர்மனியில் புலம்பெயர்ந்தோரின் மையமாக விளங்கும் எசென் நகரில் ரகசியமாக படம்பிடித்துள்ளார்.
புலம்பெயர்ந்தோர் சிறிய படகுகளில் பிரிட்டனை அடைவதற்கு உதவிவரும் அபு சாஹரை அவர் சந்தித்தார்.
பண்டிகை நாட்களில் இனிப்புகளுக்கு அதிக கிராக்கி இருப்பதே கலப்படத்திற்கு முக்கிய காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். தேவையை பூர்த்தி செய்ய இந்த உணவுப் பொருட்களில் செயற்கை பொருட்கள் மற்றும் ரசாயனங்கள் அடிக்கடி சேர்க்கப்படுகின்றன.