ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தனித்தனியே வேட்பாளர்களை அறிவித்துள்ளனர்.
Union Budget 2023: இந்திய ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையானது சனாதன நோக்கம் கொண்ட மக்கள் விரோத அறிக்கை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது
ஆற்காடு சாலையில் மெட்ரோ ரயில் கட்டுமான பணி நடைப்பெறுவதால், தற்காலிக முறையில் போக்குவரத்து சீர்செய்ய வேண்டி 03.02.2023 முதல் 11.02.2023 வரை 10 நாட்களுக்கு சில போக்குவரத்து மாற்றங்கள் சோதனை முறையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
ஜி20 மாநாட்டுக்கு இந்த ஆண்டு இந்தியா தலைமையேற்றிருக்கும் நிலையில், அதன் தொடக்கநிலை மாநாடு புதுச்சேரியில் தொடங்கியது.| Puducherry G20 conference started today, High security alert
விவசாயிகள் வருமானத்தை இரண்டு மடங்காக ஆக்குவோம் என்றனர் ஆனால் அதற்கான திட்டங்கள் எதுவும் இதில் இல்லை. மேலும் சிறு,குறு விவசாயிகள் மேம்படுத்துவதற்கான அறிவிப்பும் இல்லை- மத்தியபட்ஜெட் | Indian Budget 2023: ``Disappointing'' Farmers Say!
ஜி 20 மாநாட்டில் பங்கேற்ற பிரதிநிதிகள் மாமல்லபுரத்தில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற பாரம்பரிய சின்னங்களான கடற்கரை கோவில், ஐந்து ரதம், அர்ஜுனன் தவசு, வெண்ணெய் உருண்டை உள்ளிட்ட புராதான சின்னங்களை கண்டு ரசித்தனர்...!!
O Paneer Selvam Erode by-election: மறைந்த திமுக தலைவர் கருணாநிதி தனக்கு பிடிக்கும் என்று கூறிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், பாஜகவுக்காக விட்டுக்கொடுக்கத் தயார் என்றும், எடப்பாடிக்கு அல்ல என்றும் தெரிவித்தார்
தேர்தல் நடைபெறப் போகும் மாநிலங்களை மட்டுமே குறிவைத்து வளர்ச்சித் திட்டங்கள், நிதி உதவிகள் அறிவிக்கப்படுவதும் ஒன்றிய நிதிநிலை அறிக்கை அனைத்து மாநிலத்திற்குமானது என்பதிலிருந்து முற்றிலும் விலகிச் செல்வதைக் காட்டுகிறது என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
நிதிநிலை அறிக்கையின் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு எந்த பயனும் ஏற்படுவதற்கான திட்டமும் இல்லை, நிதி ஒதுக்கீடும் இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இந்த ஆண்டும் எந்தவித நிதியும் ஒதுக்கீடு செய்யவில்லை. தமிழ்நாட்டிற்கு முக்கியமான எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை. தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
அனைத்து மாநகரங்கள், நகரங்களில் கழிவுநீர் குழாய்களின் அடைப்புகளை அகற்றும் பணிகளில் மனிதர்கள் ஈடுபடுத்தப்படுவதை முற்றிலுமாக முடிவுக்கு கொண்டு வர நிதிநிலை அறிக்கையில் திட்டம் அறிவிக்கப்பட்டிருப்பது புரட்சியான செயல் ஆகும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.