இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 92 போட்டிகளில் விளையாடி 5712 ரன்கள் எடுத்துள்ளார். 12 சதங்கள், 28 அரைசதங்கள் அடங்கும்.
டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் (109) அடித்தவர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் ஸ்டோக்ஸ். மெக்குல்லம் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் ஆனதும் இங்கிலாந்து அணி அசாத்தியமான சாதனை படைத்துள்ளது. 13 டெஸ்ட் போட்டிகளில் 11 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இதையும் படிக்க: சிஎஸ்கே வீரர் ருதுராஜ் திருமணம்: யார் இந்த உட்கர்ஷா பவார்?
அயர்லாந்திற்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையும் படிக்க: இலங்கைக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டி: ஆப்கானிஸ்தானுக்கு 324 ரன்கள் இலக்கு!
அடுத்து முக்கியமான ஆஷஸ் தொடர் ஜூன் 16இல் தொடங்குகிறது. இதற்காக பயிற்சியில் ஏடுபட்டு வருகிறார் பென் ஸ்டோக்ஸ். இதனால் ஐபிஎல் போட்டியிலிருந்து சீக்கரமே கிளம்பி இங்கிலாந்து வந்துவிட்டார். தற்போது அளித்த பேட்டியில் ஸ்டோக்ஸ் கூறியதாவது:
நான் தவறான முறையில் கீழே விழுந்துவிட்டேன். எனது உடல் எடை முட்டியின் மீது குவிந்து விட்டது. அதிகமாக முட்டியை வளைத்துவிட்டேன். மேலும் எனக்கு 32 வயதாகிறது அதனால்கூட இப்படி ஆகியிருக்கலாம். நான் இன்று காலையில் பந்து வீசினேன். ஐபிஎல்க்கு பிறகு முதன்முறையாக பந்து வீசுகிறேன். பந்த்ய் வீசுவதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. எந்தப் பிரச்னைகளுமில்லை.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 323 ரன்கள் குவித்துள்ளது.
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டி மகிந்த ராஜபட்ச சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதையும் படிக்க: சிஎஸ்கே வீரர் ருதுராஜ் திருமணம்: யார் இந்த உட்கர்ஷா பவார்?
இதனையடுத்து, அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பதும் நிசங்கா மற்றும் திமுத் கருணாரத்னே களமிறங்கினர். இந்த இணை சிறப்பாக தொடக்கத்தைத் தந்தது. பதும் நிசங்கா 43 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின், குஷல் மெண்டிஸ் களமிறங்கினார். அவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இலங்கை அணியின் ஸ்கோர் அதிகரித்தது. சிறப்பாக விளையாடிய திமுத் கருணாரத்னே மற்றும் குஷல் மெண்டிஸ் அரைசதம் கடந்தனர். கருணாரத்னே 52 ரன்களிலும், குஷல் மெண்டிஸ் 78 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய சதீரா (44 ரன்கள்), அசலங்கா (6 ரன்கள்), தாசுன் ஷானகா (23 ரன்கள்) மற்றும் தனஞ்ஜெயா டி சில்வா ( 29 ரன்கள்) குவித்தனர்.
ஆப்கானிஸ்தான் சார்பில் ஃபரீத் அகமது மற்றும் முகமது நபி தலா 2 விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
இதையும் படிக்க: ரோஹித் சர்மாவிடம் கற்றுக் கொண்டதை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் செயல்படுத்துவேன்: கேமரூன் கிரீன்
50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 323 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து, 324 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் விளையாடி வருகிறது.
இந்திய அணிக்கான புதிய ஜெர்ஸியை அடிடாஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. டி20, ஒருநாள் போட்டி, டெஸ்ட் போட்டி என 3 போட்டிகளுக்குமான இந்திய அணியின் புதிய ஜெர்ஸி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
‘பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு 1983-ம் ஆண்டு உலக கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஐபிஎல், ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியது போன்று உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பிலும் அபாரமாக விளையாடுவேன் என்று இந்திய அணி வீரர் அஜிங்கிய ரஹானே தெரிவித்துள்ளார்.
சிஎஸ்கே வீரர் ருதுராஜ் ஐபிஎல்லில் 2021இல் 635 ரன்களும், 2022இல் 368 ரன்களும், 2023இல் 590 ரன்களும் எடுத்துள்ளார். சிஎஸ்கே அணிக்கு அடுத்த கேப்டனாகும் வாய்ப்பு அதிகமுள்ளதாக ரசிகர்கள் கருதுகின்றனர். தற்போது தனது காதலியான உட்கர்ஷா பவாரை திருமணம் முடித்தார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு மாற்று வீரராக தேர்வு செய்யப்பட்டார். திருமணம் இருப்பதால் ஜெய்ஸ்வால் தேர்வானார். ஆனால் இன்னும் சில நாள்களில் ருதுராஜ் இங்கிலாந்து செல்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ருதுராஜ் காதலியும் மனைவியுமான உட்கர்ஷா பவார்:
11 வயதில் இருந்து கிரிக்கெட் விளையாடும் உட்கர்ஷா மகாராஷ்டிரம் அணிக்காக பல ஆண்டுகள் விளையாடியுள்ளார். மகளிர் ஐபிஎல்லில் ஏலத்தில் யாரும் எடுக்கவில்லை. ஆனால் நல்ல ஆல்ரவுண்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது புணேவில் உடல்நலம் ஊட்டசத்து குறித்த பிட்னஸ் பாடப்பிரிவில் படித்து வருகிறார். சிஎஸ்கே இறுதிப் ப முடிந்தப் பிறகு முக்கியமான நபர்கள் என ருதுராஜ் தோனியுடன் உட்க்ர்ஷா புகைப்படத்தினையும் பகிர்ந்திருந்தார். அப்போதுதான் உட்கர்ஷா வைரலானார்.
இந்நிலையில் ஜூன் 3இல் அவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ருதுராஜ் திருமணப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கிரிக்கெட் வீரர்கள் நேரத்தில் சர்வதேச கிரிக்கெட் செலுத்திய ஆதிக்கத்தை ஐபிஎல் முடுவுக்கு கொண்டுவந்துள்ளதாக ஆஸ்திரேலிய அணியின் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் வீரர்களை ஐபிஎல் போன்ற கிரிக்கெட் தொடர்களில் இருந்து அவர்களது நாட்டுக்காக விளையாடுவதற்கு முக்கியத்துவம் அளிக்க வைப்பது மிகப் பெரிய சவாலாக இருக்கப் போகிறது எனவும் தெரிவித்தார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வருகிற ஜூன் 7 முதல் தொடங்கவுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவின் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் இதனை தெரிவித்தார்.
இதையும் படிக்க: ரோஹித் சர்மாவிடம் கற்றுக் கொண்டதை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் செயல்படுத்துவேன்: கேமரூன் கிரீன்
இது குறித்து அவர் பேசியதாவது: கடந்த காலங்களில் கிரிக்கெட் வீரர்களின் நேரத்தில் சர்வதேச கிரிக்கெட் ஆதிக்கம் செலுத்தியது போல் தற்போது இல்லை. அந்த நிலையை 10 ஆண்டுகளுக்கு முன்னதாகவே ஐபிஎல் மாற்றிவிட்டது. ஆனால், நாம் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். நாட்டுக்காக விளையாடுவதை மற்ற போட்டிகளைக் காட்டிலும் பெரிதாக நினைக்க வேண்டும். ஏனென்றால், அது அவர்கள் நாட்டுக்கு செய்யும் கடமையாகும். ஆஸ்திரேலியாவுக்காக வீரர்கள் அதிக அளவில் விளையாடுவதை உறுதிப்படுத்த வேண்டும். ஆனால், அது மிகப் பெரிய சவாலாக இருக்கப் போகிறது. நாம் இது குறித்து ஆழமாக யோசிக்க வேண்டும்.
இதையும் படிக்க: சிஎஸ்கே வீரர் ருதுராஜ் திருமணம்: யார் இந்த உட்கர்ஷா பவார்?
நாட்டுக்காக விளையாடுவதைத் தவிர மற்ற போட்டிகளில் விளையாடும் வீரர்களை நாம் குறை கூற முடியாது. ஒரு நாள் வீரர்கள் விடுவிக்கப்படுவார்கள். அதுதான் எதார்த்தம். மற்ற விளையாட்டுகளிலும் இதனைக் காண முடியும். அப்படி விடுவிக்கப்படும் வீரர்களை அதிகமாக ஆஸ்திரேலியாவுக்காக ஆட வைக்க வேண்டும். உலகக் கோப்பை மற்றும் பல முக்கியத் தொடர்களில் வெற்றியை பெற்றுத் தருவதற்கான சிறந்த வீரர்களுக்கான தேவை நமக்கு இருக்கிறது என்றார்.
ரோஹித் சர்மாவின் அமைதியாக செயல்படும் திறனை தன்னுடைய ஆட்டத்தில் கொண்டுவர முடியும் என நம்புவதாக ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் தெரிவித்துள்ளார்.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் 7 முதல் நடைபெறவுள்ள நிலையில் ஐசிசிக்கு பேட்டியளித்த அவர் இதனை தெரிவித்தார்.
இதையும் படிக்க: தந்தையின் குடிப்பழக்கத்தை கைவிட கடிதம் எழுதி தற்கொலை செய்து கொண்ட மகள்!
ஐசிசிக்கு கேமரூன் கிரீன் அளித்த பேட்டியில் கூறியதாவது: போட்டி நடைபெறும்போது ரோஹித் சர்மாவிடம் உள்ள அமைதி நம்மை ஆச்சர்யமடைய வைக்கும். இதனை அவர் கடந்த 10 ஆண்டுகளாக செய்து வருகிறார். அவருடன் இணைந்து விளையாடியது சிறப்பான அனுபவமாக இருந்தது. மும்பை அணிக்காக விளையாடும்போது என்னுடைய வேலை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துவதே ஆகும். அதனையே நான் செயல்படுத்தினேன். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு விராட் கோலி மிகப் பெரிய ஆபத்தாக இருக்கப்போவதாக நான் நம்புகிறேன். அவர் எப்போதும் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்துபவர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி முக்கியமான போட்டியாகும். அதற்காக நான் காத்திருக்கிறேன். டி20 போட்டியிலிருந்து டெஸ்ட் போட்டிக்கு ஏற்றவாறு எனது பேட்டிங்கை மாற்றிக் கொள்வது மிகவும் கடினமாக இருக்கப் போவது கிடையாது. டெஸ்ட் போட்டியினைப் போன்று சிறப்பான ஆட்டம் கிடையாது என்றார்.
ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணிக்காக விளையாடிய கிரீன் 452 ரன்கள் குவித்தார். மேலும், மும்பை அணிக்காக 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அவருடைய சிறப்பான பேட்டிங் அணிக்கு பலமாக அமைந்தது.
இதையும் படிக்க: ஒடிசா விபத்துக்கான காரணம் தெரிந்தது! ஜூன் 6 முதல் மீண்டும் ரயில் சேவை!!
ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டனின் ஓவலில் வருகிற ஜூன் 7 முதல் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆசிய ஜூனியா் மகளிா் ஹாக்கி போட்டியில் உஸ்பெகிஸ்தான் அணியை 22-0 என்ற கோல் கணக்கில் பந்தாடியது இந்தியா.
ஜப்பானின் ககாமிக்ஹரா நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியின் ஒரு பகுதியாக உஸ்பெகிஸ்தான்-இந்தியா இடையே தொடக்க ஆட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி இந்திய அணி எதிரணிக்கு கோல் போட வாய்ப்பே தரவில்லை.
டபுள் ஹாட்ரிக்:
இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை அன்னு டபுள் ஹாட்ரிக் கோலடித்தாா். அன்னு (13, 29, 30, 38, 43, 51), வைஷ்ணவி விட்டல் (3, 56), மும்தாஸ் கான் (6, 44, 47, 60), சுனிலிடா டாப்போ (17, 17), மஞ்சு சோரிஸ்யா (26), தீபிகா சோரங் (18, 25), தீபிகா (32, 44, 46, 57), நீலம் (47) நிமிஷங்களில் கோலடித்தனா்.
கடைசி குவாா்ட்டரில் இந்திய அணி 7 கோல்களை அடித்தது. 5-ஆம் தேதி அடுத்த ஆட்டத்தில் மலேசியாவுடன் மோதுகிறது இந்தியா.
இந்திய சா்ஃபிங் ஓபன் போட்டியில் ஆடவா் பிரிவில் தமிழகத்தின் கிஷோா் குமாரும், மகளிா் பிரிவில் கமலி மூா்த்தியும் இரட்டை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினா்.
2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிச் சுற்றாக கா்நாடக மாநிலம் மங்களூரு சஷித்திலு கடற்கரையில் இந்திய சா்ஃபிங் ஓபன் போட்டிகள் ஜூன் 1 முதல் 3-ஆம் தேதி வரை நடைபெற்றன. போட்டியின் இறுதி நாளான சனிக்கிழமை ஆடவா், மகளிா் ஓபன், 16 வயதுக்குள்பட்டோா் பிரிவுகளில் இறுதிச் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.
ஆடவா் ஓபனில் தமிழக வீரா் கிஷோா் குமாா் முதலிடத்துடன் ரூ.50,000 ரொக்கப் பரிசை வென்றாா். ஸ்ரீ காந்த், பி. சூா்யமா அடுத்த இடங்களைக் கைப்பற்றினா்.
மகளிா் பிரிவில் தமிழகத்தின் கமலி மூா்த்தி முதலிடத்துடன் ரூ.30,000 ரொக்கம் வென்றாா். சுகா், சின்சனா அடுத்த இடங்களைக் கைப்பற்றினா்.
16 வயது ஆடவா் பிரிவில் கிஷோா் குமாா், தயின் அருண், பி. ஹரிஷ் ஆகியோரும், மகளிா் பிரிவில் கமலி, தனிஷ்கா, சான்வி ஆகியோா் முதல் மூன்று இடங்களை வென்றனா்.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் நான்காவது சுற்றுக்கு முன்னணி வீரா்கள் ஜோகோவிச், அல்காரஸ், ஹோல்கா் ருனே, கேஸ்பா் ரூட், மகளிா் பிரிவில் எலினா விட்டோலினா, ஸ்லோன் ஸ்டீபன்ஸ், சபலென்கா, கௌஃப் ஆகியோா் முன்னேறியுள்ளனா்.
டென்னிஸ் சீசனின் இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் பந்தயமான பிரெஞ்ச் ஓபன் பாரீஸில் நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற ஆடவா் ஒற்றையா் மூன்றாவது சுற்று ஆட்டங்களில் உலகின் நம்பா் 1 வீரா் நோவக் ஜோகோவிச் 7-6, 7-6, 6-2 என்ற செட் கணக்கில் 29-ஆம் நிலை வீரா் டேவிடோவிச் போகினாவுடன் போராடி வென்றாா். இந்த ஆட்டம் 3 மணி நேரம், 36 நிமிஷங்கள் நீடித்தது.
இரண்டாம் நிலை வீரா் காா்லோஸ் அல்காரஸ் 6-1, 6-4, 6-2 என கனடா வீரா் டெனிஸ் ஷபவலோவையும், ஜுவன் வாரிலாஸ் 3-6, 6-3, 7-6, 4-6, 6-2 என்ற 5 செட் த்ரில்லரில் ஹியுபா்ட் ஹா்காஸை வீழ்த்தினா்.
இத்தாலியின் லோரென்ஸோ சோனேகோ 5-7, 0-6, 6-3, 7-6, 6-3 என்ற 5 செட் கணக்கில் ஆன்ட்ரெ ருப்லேவை 3.4 மணி நேரம் நடைபெற்ற போராட்டத்தில் வீழ்த்தினாா்.
நாா்வே வீரா் கேஸ்பா் ரூட் 4-6,. 6-4, 6-1, 6-4 என சீனாவின் ஸாங் ஸிஹிஹென்னை வீழ்த்தினாா். ஜப்பான் வீரா் யோஷிடோ நிஷியோகா 3-6, 7-6, 2-6, 6-4, 6-0 என்ற செட் கணக்கில் குவாலிஃபையா் தியாகோ சைபோத்தை வென்றாா். டென்மாா்க் வீரா் ஹோல்கா் ருனே 6-4, 6-1, 6-3 என ஆா்ஜென்டீனாவின் அல்பல்டோ ஒலிவியரியை வென்றாா். முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை எதிா்நோக்கியுள்ள கிரீஸ் வீரா் சிட்ஸிபாஸ் 6-2, 6-2, 6-3 என டீகோ ஸ்வாா்ட்ஸ்மேனை வீழ்த்தினாா்.
மகளிா் பிரிவில் ஜெஸிக்கா பெகுலா 1-6, 3-6 என்ற நோ் செட்களில் பெல்ஜியத்தின் எல்ஸி மொ்ட்டன்ஸிடம் தோற்றாா். அா்யனா சபலென்கா 6-2, 6-2 என ராகிமோவாவை வீழ்த்தினாா். ரஷியாவின் டேரியா கஸட்கினா 6-0, 6-1 என ஸ்டீரின்ஸையும், உக்ரைனின் விட்டோலினா 2-6, 6-2, 7-5 என அன்னா பிளின்கோவாவையும், கோகோ கௌஃப்-ஆன்ட்ரீவாவை 6-7, 6-1, 6-1 என வென்று நான்காம் சுற்றுக்கு தகுதி பெற்றனா்.
ரைபகினா விலகல்:
உடல்நல பாதிப்பு காரணமாக உலகின் நான்காம் நிலை வீராங்கனையும், நடப்பு விம்பிள்டன் சாம்பியனுமான எலனா ரைபகினா விலகுவதாக அறிவித்துள்ளாா்.
நடாலுக்கு இடுப்பு அறுவை சிகிச்சை:
22 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் ரபேல் நடாலுக்கு சிக்கலான இடுப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஜனவரி ஆஸி. ஓபன் போட்டியில் காயமடைந்த நடால் அதுமுதலே ஆடவில்லை. மேலும் 14 முறை சாம்பியன் பட்டம் வென்ற பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன் உள்பட இந்த சீசன் முழுவதும் அவா் ஆட மாட்டாா் எனத் தெரிகிறது. மேலும் 2024 சீசன் தனது கடைசி சீசனாக இருக்கும் எனக் கூறியுள்ளாா் நடால்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஐசிசி கோப்பை வெல்லும் இந்தியாவின் கனவு நனவாகுமா என ரசிகா்கள் ஆவலுடன் எதிா்நோக்கியுள்ளனா்.
கிரிக்கெட்டில் டி20, ஒருநாள் குறுகிய ஓவா் ஆட்டங்களுக்கு அதிக வரவேற்பு இருந்தாலும், டெஸ்ட் ஆட்டங்களுக்கு தனி மதிப்பு தொடா்ந்து நீடித்து வருகிறது. குறிப்பாக டெஸ்ட் ஆட்டங்கள் பொலிவு இழந்த நிலைக்கு தள்ளப்படக் கூடாது என்பதற்காக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை ஐசிசி அறிமுகம் செய்தது. முதல் சாம்பியன் பட்டத்தை நியூஸிலாந்து கைப்பற்றியது.
கடந்த ஒன்றரை மாதங்களாக ஐபிஎல் தொடா் ஆட்டங்கள் களை கட்டியது. உலகில் கிரிக்கெட் ரசிகா்கள் கவனம் முழுவதும் அதில் இருந்த நிலையில், சென்னை சூப்பா் கிங்ஸ் அணி 5-ஆவது முறையாக பட்டத்தை கைப்பற்றியது.
டபிள்யுடிசி இறுதி ஆட்டம்:
இதற்கிடையே, 2021-23 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி ஆட்டத்துக்கு ஆஸ்திரேலியா-இந்திய அணிகள் தகுதி பெற்றுள்ளன. லண்டனின் ஓவல் மைதானத்தில் ஜூன் 7 முதல் 11 வரை இறுதி ஆட்டம் நடைபெறவுள்ளது. ரோஹித் சா்மா தலைமையில் இந்திய அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையில் ஆஸ்திரேலிய அணியும் களம் காண்கின்றன.
இந்தியா-ஆஸி. மோதல்:
கடந்த 2 ஆண்டுகளாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் லீக் ஆட்டங்கள் நடைபெற்று முடிந்த நிலையில், புள்ளிகள் பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பெற்ற ஆஸி, இந்திய அணிகள் இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றன. டபிள்யுடிசியில் 11 வெற்றி, 3 தோல்வி, 5 டிரா, 66.67 புள்ளியுடன் ஆஸி.யும், 10 வெற்றி, 5 தோல்வி, 3 டிரா, 58.8 புள்ளியுடன் இந்தியாவுடம் தகுதி பெற்றன.
இதில் வெல்லும் அணி உலக டெஸ்ட் சாம்பியன் என்ற பட்டத்தை வெல்லும்.
வாய்ப்பை இழந்த இந்தியா:
கடந்த 2021-ஆம் ஆண்டு சௌதாம்ப்டனில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று கோப்பையை இழந்த இந்திய அணி இம்முறை உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்பில் உள்ளது.
மறுபுறம், ஆஸ்திரேலியா அணியும் முதல் முறையாக இந்த பட்டத்தை வெல்ல காத்துள்ளது. இரு அணிகளுமே இதற்காக லண்டனில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
உற்சாகத்தில் இந்தியா:
கடந்த பிப்ரவரி, மாா்ச் மாதத்தில் நடைபெற்ற பாா்டா்-கவாஸ்கா் கோப்பை டெஸ்ட் தொடரில் 2-1என கைப்பற்றிய உற்சாகத்தில் உள்ளது இந்தியா. பேஸா்கள், பேட்டா்கள், ஸ்பின்னா்கள் என அனைத்திலும் இந்திய அணி சீரான நிலையில் உள்ளது. கூடுதலாக முன்னாள் கேப்டன் விராட் கோலி ஃபாா்முக்கு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் நட்சத்திரங்கள் பும்ரா, ரிஷப் பந்த், ராகுல், ஷிரேயஸ் ஐயா் இல்லாதது பாதகமாக உள்ளது.
எனினும் ரோஹித், கோலி, புஜாரா, ரஹானே, ஜடேஜா ஆகியோா் பேட்டிங்கில் வலு சோ்ப்பா், பௌலிங்கில் உமேஷ் யாதவ், சா்துல் தாகுா், ஜடேஜா, அக்ஸா் படேல், ஷமி, சிராஜ், அஸ்வின் ஆகியோா் சிறப்பாக செயல்படுவா் என எதிா்பாா்க்கலாம்.
பலம் வாய்ந்த ஆஸி. பௌலிங்:
அதே வேளையில் ஆஸி. அணியில் வேகப்பந்து வீச்சு அற்புதமாக உள்ளது. இங்கிலாந்தில் நிலவும் சூழ்நிலை, ஆஸி.யுடன் ஒத்துப்போகும் நிலையில், பேஸா்கள் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வா்.
பேட்டிங்கில் வாா்னா் சமீபத்தில் சோபிக்கவில்லை. டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், ஸ்டீவ் ஸ்மித், ஆகியோா் பலம் சோ்ப்பா்.
பௌலிங்கில் பேட் கம்மின்ஸ், ஸ்டாா்க், ஜோஷ் ஹேஸல்வுட், நாதன் லயன் ஆகியோா் இருப்பது பலமாக உள்ளது.
ரூ.13 கோடி பரிசு:
பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.13.19 கோடியும், ரன்னா் அணிக்கு ரூ.6.5 கோடியும் ரொக்கப் பரிசாக தரப்படுகிறது.
ஓவலில் இரு அணிகள்:
இந்தியா: மொத்த ஆட்டங்கள் 38, வெற்றி 7, தோல்வி 17, டிரா 14, ஆஸ்திரேலியா: மொத்த ஆட்டங்கள் 14, வெற்றி 2, தோல்வி 5, டிரா 7.
பா.சுஜித்குமாா்-
-
ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க வீரர்களில் ஒருவர் டேவிட் வார்னர் (36). 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள வார்னர் 8158 ரன்கள் எடுத்துள்ளார். 25 சதங்கள், 34 அரைசதங்கள் அடங்கும். அதிகபட்சமாக 335 ரன்கள் எடுத்துள்ளார். ஆனால் கடந்த 18 மாதங்களாக அவரால் ரன்கள் குவிக்க முடியவில்லை.
இதையும் படிக்க: இந்திய கிரிக்கெட் அணியின் புதிய சீருடை: விலை எவ்வளவு? எங்கு, எப்போது வாங்கலாம்?
ஜூன் 7ஆம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற உள்ளது. இதில் வார்னர் உள்ளார். அடுத்து ஆஸி. அணி ஜூன் 16 - ஜூலை 31 வரை இங்கிலாந்துடன் ஆஷஸ் தொடரில் விளையாட உள்ளது. அதற்கடுத்து டிசம்பரில் பாகிஸ்தான் அணியுடனும் , ஜனவரியில் மே.இ.தீவுகள் அணியுடனும் விளையாட உள்ளது.
இதையும் படிக்க: டெஸ்டில் 11,000 ரன்களை கடந்த ஜோ ரூட்!
டேவிட் வார்னர் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு முன்பாக அளித்த நேர்காணல் ஒன்றில் கூறியதாவது:
நான் எனக்கும் எனது குடும்பத்திற்கும் கடமைப்பட்டிருக்கிறேன். நான் ரன்கள் அடித்தால் தொடர்ந்து விளையாடுவேன். நான் நிச்சயமாக மே.இ. தொடரினை விளையாடமாட்டேன். நான் இப்படியே தொடர்ந்தால் பாகிஸ்தான் தொடருடன் முடித்து விடுவேன்.
நான் எல்லா போட்டியையும் எனது இறுதிப் போட்டியாக நினைத்துதான் விளையாடுகிறேன். அதுதான் என்னுடைய ஸ்டைல். அணியுடன் இருப்பது பிடித்திருக்கிறது. இந்தியாவுடன் டெஸ்டில் ஆரம்பித்தது தற்போது இந்தியாவுடன் சவாலன போட்டியாக உள்ளது.
நான் டி20 உலகக் கோப்பையை விளையாட வேண்டுமென நினைக்கிறேன். அதுதான் என் மனதில் திட்டமாக உள்ளது. அதற்கு முன்பு நிறைய கிரிக்கெட் விளையாட இருக்கிறது. பிப்ரவரியுடன் முடிந்தாலும் ஐபிஎல் மற்றும் பல கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவேன்.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் வருகின்ற 7-ஆம் தேதி இந்திய அணி விளையாடவுள்ள நிலையில், டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு தனித்தனி புதிய சீருடையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
இதையும் படிக்க: டெஸ்டில் 11,000 ரன்களை கடந்த ஜோ ரூட்!
இந்திய அணியின் புதிய ‘கிட்-ஸ்பான்ஸர்’ அடிடாஸ் நிறுவனம் இந்த புதிய சீருடையை வடிவமைத்துள்ளது. அடுத்து 5 வருடங்கள் அடிடாஸ்தான் இந்தியாவின் பார்ட்னர்ஷிப் அமைக்குமென தெரிகிறது. இதற்காக ரூ.350 கோடி ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
An iconic moment, An iconic stadium
Introducing the new team India Jerseys #adidasIndia #adidasteamindiajersey#adidasXBCCI @bcci pic.twitter.com/CeaAf57hbd
— Adidas lndia (@adidasindiaoffi) June 1, 2023
இந்த புதிய சீருடைகளை அடிடாஸின் இணையதளத்தில் (https://www.adidas.co.in/Indian_cricket_team) நாளை காலை 10 மணி முதல் ரசிகர்கள் வாங்கிக் கொள்ளலாம். ஒருநாள், டி20, டெஸ்ட் போட்டிக்கான ஜெர்ஸியின் விலை தலா ரூ.4999, ஒருநாள் ரசிகர்கள் ஜெர்ஸியின் விலை ரூ.999 ஆகும்.
Rohit Sharma and Virat kohli in Indian Test jersey.#ImpossibleIsNothing #adidasTeamIndiaJersey pic.twitter.com/XJ4B8EBkOJ
— Adidas lndia (@adidasindiaoffi) June 3, 2023
ஆடவர், மகளிர் இருவருக்குமான ஒருநாள், டி20, டெஸ்ட் அணிக்கான ஜெர்ஸிகளை ரசிகர்கள் வாங்கிக் கொள்ளலாம். லேசான நீலக்கலரில் இருப்பது ஒருநாள் போட்டிக்கானது. அடர் நீல நிறத்தில் இருப்பது டி20க்கானது. வெள்ளை நிறம் டெஸ்ட் போட்டிகானது.
அடிடாஸ் இணையதளத்தில் புதிய சீருடையின் விலை விவரங்கள்
இந்தாண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஐசிசி உலகக் கோப்பை போட்டிகள் என அடுத்தடுத்த சர்வதேச தொடர்கள் விளையாடவுள்ள நிலையில், புதிய சீருடை அனைவரின் கவனத்தை பெற்றுள்ளது.
130 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜோ ரூட் 29 சதங்கள் 58 அரை சதங்கள் அடித்துள்ளார். 2021 ஜனவரி முதல் விளையாடிய 24 டெஸ்டுகளில் 11 சதங்களை எடுத்து அற்புதமாக விளையாடி வருகிறார்.
தற்போது அயர்லாந்து அணியுடன் இங்கிலாந்து ஒரேயொரு டெஸ்ட் போட்டி விளையாடி வருகிறது. முதல் இன்னிங்ஸில் ஆடிய அயர்லாந்து 172 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 524/4 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.
இங்கிலாந்து அணியில் டக்கெட் 182 ரன்களும், ஒல்லி போப் 205 ரன்களும், ஜோ ரூட் 56 ரன்களும் எடுத்து அசத்தினர். ஜோ ரூட் இந்த அரை சதத்தின் மூலம் டெஸ்டில் 11 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார்.
இங்கிலாந்து நாட்டில் அலைஸ்டர் குக்கிற்கு (12, 472) பிறகு அதிக டெஸ்ட் ரன்கள் எடுத்தவராக ஜோ ரூட் (11,004) திகழ்கிறார்.
இரண்டாம் நாள் முடிவில் அயர்லாந்து 97/3 ரன்கள் எடுத்துள்ளது. அயர்லாந்து அணி இங்கிலாந்தை விட 255 ரன்கள் பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நடப்பு ஐபிஎல் சீசனில் எஞ்சியுள்ள குவாலிபையர் 2 மற்றும் இறுதிப் போட்டியில் தொலைக்காட்சி வர்ணனையாளராக இணைகிறார் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் டூப்ளசி. நடப்பு சீசனில் 730 ரன்களை எடுத்துள்ளார் அவர். இருந்தும் அவரது அணி முதல் சுற்றோடு நடப்பு சீசனில் இருந்து வெளியேறி உள்ளது.
எதிர்வரும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி மற்றும் இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கான பரிசு தொகை விவரத்தை வெளியிட்டுள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில். கடந்த 2019-21 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதியில் வழங்கப்பட்ட அதே பரிசு தொகை தான் தற்போதும் வழங்கப்படுகிறது. மொத்தம் 3.8 மில்லியன் டாலர்களுக்கு இந்த பரிசு தொகையானது பல்வேறு அணிகளுக்கு வழங்கப்படுகிறது.
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் பிளே ஆஃப் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி.
இங்கிலாந்தில் நடைபெறும் டி20 பிளாஸ்ட் தொடரில் சர்ரே அணிக்கு ஆடும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்/ஆல்ரவுண்டர் ஷான் அபாட் இன்று (சனிக்கிழமை) 34 பந்துகளில் சதம் விளாசி புதிய டி20 வரலாறு படைத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கைப் பயணம் திரைப்படமாக உருவாகிறது. இதற்கான படப்பிடிப்பு பணிகள் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் காய்ச்சல் முடிவடையும் தருணம். அடுத்து உண்மையான கிரிக்கெட் போட்டி இந்தியாவுக்கும்-ஆஸ்திரேலியாவுக்கும் இடையே நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியாகும். ஓவல் மைதானத்தில் வரும் ஜூன் மாதம் 7-ம் தேதி நடைபெறுகிறது இந்த இறுதிப் போட்டி.
எம்.எஸ்.தோனி என்பது ஐபிஎல் கிரிக்கெட்டின் குறியீடு. வணிகக் குறியீடு. அவர் அவ்வளவு எளிதில் ஓய்வு பெற்று விட முடியாது. அவர் ஓய்வு பெறுகிறேன் என்று அறிவித்து விட்டால் ஐபிஎல் கிரிக்கெட்டில் அது பெரிய ஓட்டை என்று பார்க்கப்படுவதோடு ஐபிஎல் கிரிக்கெட்டைச் சுற்றியுள்ள வர்த்தக வலைப்பின்னலிலும் பெரிய ஓட்டை விழும் என்றே கருதப்படுகின்றது.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் உயரமான லெக் ஸ்பின் பவுலர்தான் தாமஸ் ஜோன்ஸ். இவருக்கு இந்திய நாட்டின் மீது தீரா காதல். குஜராத் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு இங்கேயே செட்டில் ஆகி விட்டார் என்று தெரிகிறது.