ஒடிஷாவின் பாலசோரில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு சனிக்கிழமையன்று நான் சென்றபோது, பிணவறை எங்கு உள்ளது என்று தேடினேன். அங்கிருந்தவர்களிடம் பிணவறை எங்கு உள்ளது என்று கேட்டேன்.
கடந்த 15 ஆண்டுகளில் பல ரயில்வே அமைச்சர்கள் பதவிக்கு வந்த பிறகும் இந்தியாவில் ரயில் விபத்துகள் நிற்கவில்லை. ஜீரோ ரயில் விபத்து என்ற இலக்கை எட்டுவது எப்போது?
விபத்து குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், ரயில்வே அமைப்பை சீரழித்தவர்களை தப்ப விடக்கூடாது என கூறியுள்ளார். சில அரசியல் கட்சிகள் ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று கோரி வருகின்றன.
சிகிச்சைக்காக குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பெற்றோரிடமிருந்து அக்குழந்தையை ஜெர்மனி அரசு பறித்துக்கொண்டது. இது தொடர்பான சட்டப் போராட்டத்தில் அடுத்த வாரம் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு அருகிலிருந்த தண்டவாளத்தில் எப்போது சாய்ந்தது என்றும், அதே தடத்தில் யஷ்வந்த்பூர் - ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் எப்போது வந்தது என்பதற்கான நேர இடைவெளி தெரியவில்லை.
பைபிளில் குழந்தைகளுக்கு பொருத்தமான தகவல்கள் இடம்பெறவில்லை என்றும் ஆபாசம் மற்றும் வன்முறை குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் பெற்றோர்கள் குற்றச்சாட்டு கூறியதால் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் இருந்து பைபிளை அகற்ற உத்தரவு.
வரும் ஜூன் 22ஆம் தேதி பிரதமர் மோடி அமெரிக்கா வரவிருக்கிறார். வெள்ளை மாளிகையில் அவருக்குச் சிறப்பு விருந்து அளிப்பதற்காக ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. எனவே இத்தகைய நேரத்தில் ராகுல் இங்கே வந்திருப்பது, மோடியின் செல்வாக்கோடு ராகுலை ஒப்பிட்டு பல விமர்சனங்களை எழுப்புவதற்கு வழிவகுக்கும்.
"ரயில் தடம் புரண்டதால் பயணிகளின் அலறல் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. ஒவ்வொரு பெட்டியாக தடம் புரள எங்கள் பெட்டிக்கு என்னவாகும் என்கிற பதற்றம், அச்சம் அனைவருக்கும் இருந்தது. சாவோமா பிழைப்போமா என்கிற நிலையில்தான் நான் இருந்தேன்"
உதவி எண்ணுக்கு மொத்தம் 26 அழைப்புகள்தான் வந்திருந்தன. அதிலும் பெரும்பாலான அழைப்புகள் ரயில் ரத்தான விவரங்கள் குறித்த அழைப்புகளாக இருந்ததாக அதிகாரிகள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.
முஸ்லிம் லீக் கட்சி குறித்து அமெரிக்காவில் ராகுல் காந்தி கூறிய கருத்தும், அதற்கு பாஜக ஆற்றியுள்ள எதிர்வினை, அந்த கட்சியின வரலாறு குறித்து விவரிக்கிறது இந்த செய்தி கட்டுரை.
288 உயிர்களை பலிவாங்கிய கோரமான ஒடிஷா ரயில் விபத்து, எப்படி நடந்தது? இந்த விபத்தில் சிக்கி உயிர் பிழைத்து, சென்னை வந்தவர்கள் விவரிக்கும் கண்ணீர் காட்சிகள்.
ஒடிஷாவில் விபத்துக்கு உள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலைப் பற்றிய விவரங்கள்- அதன் வேகம், எங்கிருந்து எங்கு செல்கிறது, எந்தப் பாதையை அது பயன்படுத்துகிறது- உள்ளிட்ட தகவல்களைப் பார்ப்போம்.
கவச் என்ற அமைப்பு மூலம் ரயில் விபத்துகளைத் தடுக்கலாம் என்று கூறப்படுகிறது. ஒரே பாதையில் இரண்டு ரயில்கள் வந்தால், இந்த இரண்டு ரயில்களும் நிறுத்தப்படும் என்று கூறப்பட்டது.
உங்கள் மார்பகங்கள் பெரிதாக இருக்கும் போது, அதன் மீது பலரும் உரிமை எடுத்துக்கொள்ள முயல்கிறார்கள். அதை பொதுமக்களுக்கு சொந்தமான ஒரு பொருளாக பார்க்கிறார்கள். இதனால் அந்த பெண்கள் மிகவும் அவமானமாக உணரும் நிலை ஏற்படுகிறது.
மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ராணுவமும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. ராணுவ மருத்துவர்களும், பொறியாளர்களும் விபத்து நேரிட்ட இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்திய அரசியல் களத்தில் அவ்வப்போது நிகழக்கூடிய பரபரப்பான திருப்பங்களின்போது, சமூக வலைதளங்களில் அடிக்கடி எழுதப்படும் வார்த்தை, "கருணாநிதி இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் தெரியமா?"
கர்நாடக மாநிலத்தில் முந்தைய காலங்களில் பாஜகவுக்கு கிடைத்த வெற்றி மூலம் அது அக்கட்சிக்கு தென்னிந்தியாவின் நுழைவாயில் ஆனது என்று அழைக்கப்பட்டது. ஆனால் அந்த கட்சியால் இம்முறை ஆட்சியை தக்க வைக்கும் அளவுக்கு வாக்கு வங்கியைப் பெறும் போட்டியில் முன்னேற முடியவில்லை. இதற்கு என்ன காரணம்?
பஞ்சாங்கத்தைப் பார்த்துதான் இஸ்ரோ ராக்கெட் ஏவுகிறது என்று ராக்கெட்ரி மாதவன் முதல் கிரகண காலங்களை கணகச்சிதமாக நம் பஞ்சாங்கங்கள் கணிக்கின்றன என்று சமூக ஊடக பதிவுகள் வரை அதைப் புகழ்ந்து பேசுகின்றனர். இது உண்மையா?
பெங்களூருவில் மட்டுமே பிரதமர் மோதியின் பிரசாரத்திற்கு பலன் கிடைத்திருக்கிறது. பா.ஜ.கவின் அரசியலை இப்போதைக்கு மக்கள் நிராகரித்திருக்கிறார்கள். ஆனால், இதை வைத்து மக்களவைத் தேர்தல் முடிவுகள் எப்படியிருக்குமெனச் சொல்ல முடியாது என்கிறார் மூத்த பத்திரிகையாளர் என். ராம்.
நான் வாழ்நாளுக்குமான அழுகையை சில ஆண்டுகளிலேயே அழுது முடித்தவள்... ஆனால் இப்போதெல்லாம் கண்ணீர் சுரப்பது நின்றுவிட்டதோ என்று தோன்றுகிறது. வாழ்வின் அனைத்து கடின நிலைகளையும் நான் கடந்து விட்டதாகவே உணர்கிறேன் என்கிறார் பார்கவி
நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று ஒரு ஒளிப்பதிவாளர் கேட்டதற்கு, எங்கள் சொத்து திருடப்பட்டுள்ளது. அதை நாங்கள் இப்போது திரும்ப எடுத்துச்செல்கிறோம் என்று அப்பாவித்தனமாக பதிலளித்தார்.
போக்ரான் திட்டத்துக்காக, ஏப்ரல் 27 ஆம் தேதி நடக்கவிருந்த மூத்த விஞ்ஞானி டாக்டர் சிதம்பரத்தின் மகளின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டது. காரணம், திருமணத்தில் சிதம்பரம் இல்லாமல் போனால், ஏதோ பெரிய காரியம் நடக்கப்போகிறது என்பதை அது உணர்த்தும் என்பதால் அப்படியொரு முடிவு எடுக்கப்பட்டது. இது மட்டுமின்றி குடியரசு தலைவரின் வெளிநாட்டு பயணமும் தள்ளிவைக்கப்பட்டது.