மணக்குடி அருகே மருத்துவர் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் கண்ணாடியை உடைத்து பணம் மற்றும் கைக்கடிகாரத்தை மர்ம நபர் திருடி சென்றுள்ளார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நெல்லையில் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டு, தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் சிக்கிய தீபா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றாள். மறுபக்கம் நட்சத்திராவின் டூப்ளிகேட் அம்மா அபிராமியிடமிருந்து நகைகளை திருட முயற்சித்து வருகின்றாள். இந்நிலையில் நட்சத்திராவின் காதலனான கதிரை கார்த்திக் பார்த்துவிட அவனை துரத்தி கொண்டு மருத்துவமனைக்குள் நுழைகிறான் கார்த்திக். அப்போது அங்கே தீபாவிற்கு ரத்தம் தேவைப்படுவதாக சிலர் பேசிக்கொள்ள கார்த்தி என் ரத்தமும் அதே குரூப் தான், நான் தருகிறேன் என அடிபட்டது தீபா தான் என்பது தெரியாமலே கார்த்திக் ரத்தம் கொடுக்கின்றான்.இதையடுத்து கதிர் தீபாவை மருத்துவமனையில் பார்த்துவிட்டு உடனே நட்சத்திராவிற்கு போன் போட்டு விஷயத்தை கூற, நட்சத்திரா சந்தோஷமடைகிறாள். உடனே நான் தீபாவை பார்க்கவேண்டும் என புறப்படுகிறாள் நட்சத்திரா. மறுபக்கம் ஜானகி கார்த்திக்கிற்கு போன் செய்து தீபாவை விசாரிக்க கார்த்திக் ஏதோ சொல்லி சமாளிக்கின்றான்
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்திற்கு வெளியூர்களில் இருந்து ஆட்கள் வருவதை தடுப்பதற்காக 36 காவலர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்சி லால்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற எல்லையம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்களுடன் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.