மூன்று மாதங்களுக்கு முன்னரே ரயில் வழித்தட பகுதிகளில் சிக்னல் அமைப்பிலுள்ள குறைப்பாடுகள் குறித்து தென்மேற்கு ரயில்வே மண்டல அதிகாரி எச்சரிக்கை விடுத்தது தெரிய வந்துள்ளது.
ஒடிசா ரயில் விபத்து எதிரொலியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இன்று இரவு 7.20 மணிக்குப் புறப்படும் சென்னை-ஹவுரா ரயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஒடிசாவில் 3 ரயில்கள் விபத்துக்குள்ளானதில் 275 பேர் உயிரிழந்ததாக அம்மாநில அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. முன்பு பலி எண்ணிக்கை 288 என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 275 என்று திருத்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணிக்கான புதிய ஜெர்ஸியை அடிடாஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. டி20, ஒருநாள் போட்டி, டெஸ்ட் போட்டி என 3 போட்டிகளுக்குமான இந்திய அணியின் புதிய ஜெர்ஸி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
காவல்துறை சார் ஆய்வாளர் பணிக்கான பதவி உயர்வை காவலர்களுக்கு மறுக்கக் கூடாது; துறை சார்ந்த சிறிய தண்டனைகளை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
‘பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு 1983-ம் ஆண்டு உலக கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஐபிஎல், ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியது போன்று உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பிலும் அபாரமாக விளையாடுவேன் என்று இந்திய அணி வீரர் அஜிங்கிய ரஹானே தெரிவித்துள்ளார்.
திருச்சுழி அருகே அறுவடை நேரத்தில் வயலுக்குள் தண்ணீர் புகுந்து நெற்பயிர்கள் அழுகியதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். திருச்சுழி அருகே உள்ள கட்டனூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில்
துரைப்பாக்கம்- பல்லாவரம் ரேடியல் சாலையில் மந்தமாக நடைபெற்று வரும் மழை நீர் வடிகால் பணிகளால் அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும் அந்த சாலையில் புழுதி பறப்பதாலும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே நேரிட்ட ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும், மீட்புப் பணிகளுக்கு உதவும் வகையிலும் தமிழக பாஜக சார்பில் உதவிக் குழு அமைக்கப்பட்டுள்ளது
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100-வது பிறந்த நாளையொட்டி, அவரது ஓவியத்தை முதல்வர் மு.க.ஸ்டாலினின் உருவப்படத்தை வைத்து வரைந்து பழநி ஓவிய ஆசிரியர் அசத்தியுள்ளார்.
ரயில் விபத்து நடந்த ஒடிசா மாநிலம், பாலசோரில் இருந்து சென்னை திரும்பிய 137 பயணிகளில் 36 பேருக்கு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மதுரை மாவட்டம், திருமோகூரில் ஆடல், பாடல் நிகழ்ச்சியில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட திடீர் மோதலில் 36 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இது தொடர்பாக 13 பேரை போலீஸார் கைது செய்தனர்
தமிழகத்தில் நேற்று 17 நகரங்களில் வெயில் சதமடித்துள்ளது. அதிகபட்சமாக சென்னை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம் ஆகிய இடங்களில் தலா 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் நேற்று மாலை 5.30 மணி வரை பதிவான வெப்ப நிலை
கோவை கருமத்தம்பட்டியில் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் விளம்பரப் பதாகை அமைக்கும் பணியின்போது சாரம் சரிந்து 3 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து கோவை மாவட்டம் முழுவதும் அனுமதியற்ற, அச்சத்தை ஏற்படுத்தும்
விபத்துகளை தவிர்க்க சென்னை சாலைகளில் போக்குவரத்து விதிகளின்படி இருசக்கர வாகனம், இலகுரக வாகனம், கனரக வாகனங்களுக்கான தனித்தனி வழித்தட பாதைகளை முறையாக அமல்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில்
ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு ஆளுநர்கள் ஆர்.என்.ரவி, தமிழிசை சவுந்தரராஜன், அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் தெரிவித்திருப்பதாவது.
தவறான சிக்னலால்தான் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது என்பது ரயில்வே அதிகாரிகள் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஒடிசா ரயில் விபத்து நடந்த பகுதியிலிருந்து காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லவும், இறந்தவர்களின் உடல்களை அப்புறப்படுத்தவும் எம்.ஐ-17 ரக ஹெலிகாப்டர்களை இந்திய விமானப்படை ஈடுபடுத்தியது.