நீதிபதி ஹேமா குழுவின் அறிக்கையின்படி, திரையுலகில் சில காலம் தடையை எதிர்கொண்ட பெண்களும் இருக்கிறார்கள் என்பதும் உண்மை.
மலையாள திரையுலகில் உள்ள ‘அதிகாரமிக்க குழு’ அல்லது ‘மாஃபியா’ மூலம் சிலருக்கு தடை விதிக்கப்பட்டது. சிலர் பிற மொழித் திரையுலகின் பக்கம் திரும்ப வேண்டியதாயிற்று. பாலியல் அத்துமீறலை எதிர்கொண்ட நடிகைகள் அதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்க தயங்குவது ஏன்?
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, வட இந்தியாவில் கிராமத்து மருத்துவச்சிகளின் குழு ஒன்று அதிர்ச்சியூட்டும் வாக்குமூலங்களை அளித்தது: கேமராவின் முன் பேசுகையில், புதிதாகப் பிறந்த பெண் குழந்தைகளை எப்படி வழக்கமாகக் கொலை செய்தார்கள் என்பதை அவர்கள் விவரித்தனர். இந்த நேர்காணல்கள் இதுவரை யாரும் காணாதவை. கிராமப்புற இந்தியாவில் சிசுக்கொலையின் கவலையளிக்கக்கூடிய வரலாற்றை பிபிசி-ஐ ஆராய்கிறது.
அமெரிக்காவின் வாக்காளர்கள் தங்களது அடுத்த அதிபரைத் தேர்வு செய்வதற்காக எதிர்வரும் நவம்பர் 5-ஆம் தேதி வாக்களிக்க உள்ளனர். இப்போதிருக்கும் மிகப்பெரிய கேள்வி என்னவென்றால், இந்தத் தேர்தல் முடிவு என்னவாக இருக்கும்? டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்பாரா? அமெரிக்கா தனது முதல் பெண் அதிபரைப் பெறப் போகிறதா?
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களான கமலா ஹாரிஸ் - டொனால்ட் டிரம்ப் இடையிலான நேருக்கு நேர் விவாதம் தொடங்கியுள்ளது. வாக்காளர் மனதில் அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது என்பதால் இந்த விவாதம் உலகம் முழுவதுமே உற்றுநோக்கப்படுகிறது.
பூச்சிகளை ஆரோக்கியமான மற்றும் பசுமையான தேர்வாகக் கருதும் ‘பூச்சி உணவு ஆர்வலர்களின்’ கூற்றுப்படி, “அதிகமான மக்கள் தங்கள் அன்றாட உணவின் ஒரு பகுதியாக பூச்சிகளை உண்ண வேண்டும்.” ஆனால் பூமியைக் காப்பாற்ற உதவும் என்ற ஒரு காரணமே, உலக மக்கள் பலரையும் ‘பூச்சி உணவுகளை’ நோக்கி இழுப்பதற்கு போதுமானதா?
தமிழக சிறைகளில் கைதிகள் கொத்தடிமையாக நடத்தப்படுவதாக, அந்த கைதியின் வழக்கறிஞர் குற்றம் சுமத்துகிறார்.
சிறைச்சாலை அதிகாரியின் வீட்டுக்குள் நுழைந்து கைதி ஒருவரால் பணம், நகைகளைத் திருட முடியுமா? இந்த வழக்கின் பின்னணி என்ன?
சமீப காலமாக, திருப்பதியில் லட்டு விற்பனை சார்ந்த வீதிகளில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. சாமி தரிசனம் செய்பவர்களுக்கும், செய்யாதவர்களுக்கும் தனித்தனி விதிகள் அமல்படுத்தப்பட உள்ளன.
பஞ்சாப் மாநிலத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பல லட்சங்களை இழந்த ஒருவர், அதைத் தொடர்ந்து அதிர்ச்சி தரக்கூடிய ஒரு குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளார். அந்த நபரே தனது தந்தையைக் கொன்றுவிட்டு, கொள்ளையர்களால் அந்தக் கொலை நடந்ததாக எல்லோரையும் நம்பவைக்க ஒரு சதித்திட்டத்தையும் தீட்டியுள்ளார்.
கோவையில் முஸ்லிம் அல்லாத பெண்களை ஹிஜாப் அணியச் செய்து அவர்களின் அனுபவங்களை பெற்று யூடியூப் சேனலில் வெளியிட்டதாக இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர கிளம்பியுள்ளது. என்ன நடந்தது?
அமெரிக்காவில் 50 மாகாணங்கள் இருந்தாலும் குறிப்பிட்ட 7 மாகாணங்களே அடுத்த அதிபரை தீர்மானிக்கும் என்று கருதப்படுகின்றன. அந்த மாகாணங்களில் கமலா ஹாரிஸ் - டிரம்ப் இருவரில் முந்துவது யார்?
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஐபோன்களின் சிறப்பம்சங்கள் என்ன? இந்தியாவில் எப்போது. எந்த விலையில் கிடைக்கும்?
தற்போது சூரியன் தனது ‘அதிகபட்ச செயல்பாட்டு காலகட்டத்தில்’ உள்ளது. ஆனால் 14,000 ஆண்டுகளுக்கு முன்பு நமது பூமியைத் தாக்கிய ஒரு மிகப்பெரிய சூரிய நிகழ்வுடன் ஒப்பிடும்போது இது ஒன்றும் இல்லை. இன்று அத்தகைய ஒரு சூரிய நிகழ்வு ஏற்பட்டால், பூமியில் அதன் விளைவு பேரழிவை ஏற்படுத்தக்கூடும்.
ஆப்கானிஸ்தானில் 32 லட்சம் குழந்தைகளுக்குக் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளது. தாலிபன் அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த 3 ஆண்டுகளில் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபன் ஆட்சியில் என்ன நடக்கிறது?
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள 22 மாடி கட்டிடம் நொடிப்பொழுதில் வெடி வைத்து தகர்க்கப்பட்டது. இதற்கான காரணம் என்ன?
மேலும் விவரங்கள் காணொளியில்...
தனது முக்கிய எதிரியான இரானுடன் தொடர்புடையவை என்று கூறி சிரியாவின் இலக்குகள் மீது சமீபத்திய ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான தாக்குதல்களை நடத்தியதை இஸ்ரேல் இதற்கு முன்பாக ஒப்புக் கொண்டுள்ளது
செப்டம்பர் 11, 2001 நியூயார்க் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஃப்ளைட் 93 எனும் யுனைடெட் ஏர்லைன்ஸின் போயிங் 757 விமானத்தை அமெரிக்க நாடாளுமன்ற கட்டிடத்தின் மீது மோத முயற்சிகள் நடந்தன. அப்போது அதிலிருந்த பயணிகள் செய்தது என்ன?
ஆந்திரா, தெலங்கானாவில் வெள்ளம் ஏற்படுத்திய அழிவுகளை விவரிக்கவே முடியாது. அதே சமயம், தொலைந்து போன உறவுகள், உடமைகளை இழந்து, வாழ்வாதாரத்தை இழந்து, செய்வதறியாது நிற்பவர்களின் வேதனையையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது
இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்ற பிறகு ராகுல் காந்தி முதல் முறையாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கே மோதி, ஆர்.எஸ்.எஸ், பாஜக, வேலையில்லா திண்டாட்டம் பற்றி அவர் பேசியது என்ன?
மும்பையில் கடலைப் பார்த்தபடி இருந்த ஆஷிர்வாத் பங்களா இந்திய சினிமாவுக்கு முதல் சூப்பர் ஸ்டாரான ராஜேஷ் கண்ணாவைக் கொடுத்தது. பேய் பங்களா என்று அழைக்கப்பட்ட அந்த பங்களாவில் குடியேறியதும் ராஜேஷ் கண்ணாவுக்கு என்ன நடந்தது?
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் தனது போட்டியாளரான டிரம்பை நேருக்கு நேர் விவாதத்தில் எதிர்கொள்ள தயாராகி வருகிறார். கமலா ஹாரிஸின் உத்திகள் என்ன?
குரங்கம்மை(எம்பாக்ஸ்) பரவலை உலகளாவிய சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ள நிலையில், இந்தியாவில் ஒருவருக்கு அந்த நோய் பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அந்த நபர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
காஸாவின் தெற்கு எல்லையில் அமைந்துள்ள முக்கியமான பாதையில் இஸ்ரேலிய படைகள் தார்ச்சாலை அமைத்துவருகின்றனர். அப்பிரதேசத்தை விட்டு உடனடியாக முழுமையாக வெளியேறுவதற்கு இஸ்ரேலிய படைகள் தயாராக இல்லை என்பதற்கான சமிக்ஞையாக இதனை நிபுணர்கள் கருதுகின்றனர்.
``பனிப்போருக்குப் பின் நாம் இதுவரை கண்டிராத வகையில், சர்வதேச உலக ஒழுங்கு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது" என்று பிரிட்டன் மற்றும் அமெரிக்க உளவுத்துறை தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.