இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் இரண்டு முதியவர்கள் நேற்று(25) காலை புகலிடம் தேடி அகதிகளாக தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையை சென்றடைந்துள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் உணவு பொருட்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இதனால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இலங்கையில் இருந்து 272 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக சென்றுள்ளனர்.புகலிடம் தேடி
இந்நிலையில்...
அடுத்த மாத இறுதியில் நடைபெறவுள்ள அமெரிக்க ஆய்வுப் பயணத்தில் பங்கேற்க விசா வழங்குவதற்குத் தேவையான பாதுகாப்பு அனுமதி அறிக்கைகளைப் பெறுவதற்கு நீண்ட காலம் எடுக்கும்.எனவே அவரது பெயரை வேறு பெயருக்கு மாற்றுமாறு அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரத் வீரசேகர தெரிவித்தார்.அமெரிக்காவுக்கான பயணத்தில்
தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் என்ற வகையில், ஏனைய துறைசார் மேற்பார்வைக் குழுத் தலைவர்களுடன் இணைந்து அமெரி...
இம்பால்: மணிப்பூரில் மொய்தி இனத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் கொலை செய்யப்பட்டு கிடக்கும் புகைபடங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. மணிப்பூரில் ...
வட அயர்லாந்தை சேர்ந்த டேல் கில்லெஸ்பி என்ற 18 வயது இளைஞனின் வங்கி கணக்கில் திடீரென 92 கோடி பணம் வைப்புச் செய்யப்பட்டதால் அவர் இன்ப அதிர்ச்சியில் திகழ்ந்துள்ளார்.
வங்கியின் தவறால் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக பின்னர் தெரியவந்தது.
இவ்வாறான சம்பவத்தின் மூலம் தன்னுடைய வாழ்வில் மறக்க முடியாத அனுபவம் கிடைக்கும் என்று அவர் கற்பனை கூட செய்திருக்க மாட்டார்.
காசு தொகையை சோதனை செய்து பார்க்கும் போதுதன்னுடைய கணக்கில் உள்ள காசு தொகையை சோதனை செய்து பார்க்கும் போ...
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கொவிட் 19 பைசர் தடுப்பூசிகளில் 13 சதவீதமானவையே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் 80 சதவீதமானவை காலவாதியாகியுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
மேலும்,கொவிட் 19 தொற்றைக் கட்டுப்படுத்த இறக்குமதி செய்யப்பட்ட14.05 மில்லியன் ...
“யாழ்ப்பாணத்தில் சர்வதேச தர கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கும் எண்ணம் தனக்கு உண்டு என தெரிவித்துள்ளார் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.
தனியார் விருந்தினர் விடுதியில் ஊடகவியலாளர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே தெரிவித்துள்ளார்.
மேலும், யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் ஒக்டோபர் 21ஆம் திகதி மாபெரும் இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளதாகவும் இந்த இசை நிகழ்வு துவண்டு போய் உள்ள மக்களுக்கு உற்சாகம் தரும் வகையில் இருக்கும் என நம்பு...
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை என கலாநிதி ஓமல்பே சோபித தேரர் வலியுறுத்தியுள்ளார்.
அம்பிலிப்பிட்டி புனித மிக்கேல் தேவாலயத்தின் ஐம்பதாண்டுகளை முன்னிட்டு நடைபெற்ற பொன்விழா கொண்டாட்டங்களில் கர்தினால் மல்கம் ரஞ்சித் ,கலாநிதி ஓமல்பே சோபித தேரர் ஆகியோர் கலந்து கொண்டனர்.சர்வதேச தலையீடு அவசியம்
இங்கு ஓமல்பே சோபித தேரர் மற்றும் கர்தினால் மல்கம் ரஞ்சித் இருவரும் கருத்துரை வழங்கினர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நீதி...
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி விடுதலை செய்யப்பட்டுள்ள சாந்தனை இலங்கைக்கு மீள அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு சாந்தனின் தாயார் பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்து வருகிறார்.
பிரதமர் கொலை வழக்கில் கைதாகி 32 வருடங்களுக்கு மேலாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த நிலையில் கடந்த ஆண்டு இந்திய மத்திய அரசினால் விடுதலை செய்யப்பட்டார்.
விடுதலையின் பின்னர் இலங்கைக்கு மீள செல்வதற்கான உரிய ஒழுங்குகள் மேற்கொள்ள வேண்டும் என கூறி கடந்த 10...
சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா எல் -1 விண்கலம் தனது பயணத்தை வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சூரியனை ஆய்வு செய்வதற்காக கடந்த 2-ஆம் திகதி ஆதித்யா-எல் 1 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.
இதன்படி ஆதித்யா-எல்1 விண்கலம் தனது இலக்கை நோக்கி பயணத்தைத் தொடங்கியது.உயர்த்தப்பட்ட சுற்றுவட்டபாதைசெப்ர...
தியாகதீபம் திலீபனுடைய 36ஆம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி தாயக மற்றும், புலம்பெயர் நினைவேந்தல் குழுவினால் நடாத்தப்பட்ட மாபெரும் கவிதைப் போட்டியில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவன் பா.அறிவன் முதலிடம் பெற்றுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகளை சேர்ந்த, ஏற்கனவே போட்டிக்காக விண்ணப்பித்த மாணவர்களுக்கான கவிதைப்போட்டியானது கடந்த 24.09.2023 அன்று முல்லைத்தீவு, வள்ளிபுனம் பகுதிய...
தாய்வானில் திடீர் தீ விபத்து காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தீ விபத்தானது தாய்வானில் பிங்டங் நகரில் உள்ள தொழிற்பூங்காவில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான கோல்ப் பந்து தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்டுள்ளது.மேலதிக விசாரணை
குறித்த தீ விபத்து தொடர்பான தகவல் அற...
வடக்கு கிழக்கில் தியாகதீபம் திலீபனின் 36ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டு வருகிறது.நினைவேந்தலின் 11 ஆம் நாளான இன்று (25) நினைவேந்தல் நிகழ்வு வவுனியா தோணிக்கல்லில் இடம்பெற்றது.
குறித்த அஞ்சலி நிகழ்வானது போராளிகள் நலன்புரி சங்க அலுவலகத்தில் இடம்பெற்றிருந்தது.மலர் அஞ்சலி
இதன்போது த...
தனக்கு என்றாவது ஒரு நாள் அதிகாரம் கிடைத்தால் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு பாடம் புகட்டுவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ள கருத்திற்கு மைத்திரி பதிலளித்துள்ளார்.
“பொன்சேகாவின் செயற்பாடு, எந்நேரமும் காற்சட்டையயை ஈரம் செய்யும் சிசுவைப் போன்றது” என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். யாராவது உதவுவார்கள்
தன்மீதுள்ள அந்த...
ரஷ்ய அதிகாரிகளால் காவல் மையங்களில் மக்களை கொடுமைப்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளதாகவும் சில பகுதிகளில் மேற்கொள்ளப்படும் கொடுமைகளால் உயிர்பலிகளும் ஏற்படுவதாக உக்ரைனில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் சார்பில் எரிக் மோஸ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்திற்கு தெரிவயந்துள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையிலான யுத்தம் கட...
அவுஸ்திரேலியாவின் வடக்கு மாகாண முதலமைச்சரான பைல்ஸ் (45) தாக்கப்பட்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.
ஒரு கடைக்கு அருகில் நின்றிருந்த முதலமைச்சரை நோக்கி வங்கியிலிருந்து வந்த பெண்ணொருவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.தாக்குதல் நடத்திய பெண் கைது
சம்பவம் தொடர்பில் தாக்குததல் நடத்திய பெண்ணை காவல்துறையினர் ஐபிசி தமிழ்
பொது செய்திகள்
தென் சீனக் கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் மீன்பிடி படகுகள் நுழைவதைத் தடுக்க சீனாவால் அமைக்கப்பட்ட மிதக்கும் தடையை அகற்றியதாக பிலிப்பைன்ஸ் தெரிவித்துள்ளது.
ஸ்காபரோ ஷோலில் 300 மீ (1,000 அடி) தடையை வைத்து சீனா தனது மீன்பிடி உரிமையை மீறியதாக குற்றம் சாட்டப்படுள்ளது.
தென் சீனக் கடலின் 90% க்கும் அதிகமான பகுதியை சீனா உரிமை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.ம...
உலகில் பல அதிசயங்கள் நாளாந்தம் நடந்த வண்ணம் உள்ளன அந்தவகையில் பன்றியின் இதயத்தை மனிதனுக்கு பொருத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மனிதனுடைய இதயத்தை அறுவைசிகிச்சை மூலம் மாற்றுவதை கேள்விப்பட்டிருக்கின்றோம் ஆனால் பன்றியின் இதயத்தை இறக்கும் நிலையில் இருந்த நபர் ஒருவருக்கு பொருத்தி அவரது உயிரை காப்பாற்றி உள்ளனர்.
மேலும் இச் சம்பவம் உலகில் இரண்டாவது முறையாக இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அறுவை சிகிச்சை பெற்ற நோயாளி இரண்டு நாட்களுக்கு பின்
மகிழ்ச்சியாக பேசினார் என மேர...
தனது மூன்று குழந்தைகளை கொன்ற தந்தையை கைது செய்துள்ள தாய்லாந்து காவல்துறையினர் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
சந்தேகநபரான சோன்சக் சாங்சிங், தனது முந்தைய திருமணத்தில் இருந்த இரண்டு குழந்தைகளையும் கொன்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சமையலறையில் சிறுமி புதைப்புகடந்த வாரம் இரண்டு வயது சிறுமியின் சடலம் வீட்டின் சமை...
வளர்ந்த நாடுகளின் கல்வி முறைமைகளை கருத்திற்கொண்டு இந்த நாட்டில் தொழில் கல்வியை முழுமையாக மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஹங்வெல்ல ராஜசிங்க கல்லூரியில் இன்று (25) நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட போதே அதிபர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து அதிபர் குறித்த பாடசாலை மாணவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்....
சீக்கிய பயங்கரவாதிகள் படுகொலைக்கு பழிவாங்க கனடாவுக்கான 3 இந்திய தூதரக அதிகாரிகளை படுகொலை செய்ய அழைப்பு விடுத்து சீக்கியர்கள் கனடாவில் பேனர் கட்டியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் சீக்கியர்களுக்கு காலிஸ்தான் என்ற பெயரில் தனிநாடு அமைக்க வேண்டும் என்பது கனடா வாழ் சீக்கியர்களின் இலக்கு. இந்தியாவின் காலிஸ்தான் பயங்கரவாதம் அழித்தொழிக்கப்பட்டு முடிவுரை எழுதப்பட்டுவிட்டது. இந்த ரத்தம் தோய்ந்த அத்தியாத்தை மீண்டும் உருவாக்க வேண்டும் என்பதுதான் கனடாவில் பதுங்கி...
கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்தும் நிலவி வந்த ஆசிரியர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் கிழக்கில் 700 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்க மாகாண பொது சேவை ஆணைக்குழுவிடம் இன்று (25)கையொப்பம் இடப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் செந்தில் தொண்டமானால் கிழக்கு மாகாணத்தில் 633 ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தது.இந்நிலையில் தற்போது 700 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.கிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக...
அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் அமெரிக்க விஜயம் தொடர்பில் எதிர்க்கட்சி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவது எதிர்க்கட்சியின் கடமையை நிறைவேற்றவே அன்றி நாட்டின் மீதுள்ள அன்பினால் அல்ல என அதிபரின் காலநிலை மாற்றம் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.
நிலையான நாட்டிற்கு ஒரு வழி என்ற தொனிப்பொருளில் அதிபர் ஊடக மையத்தில் இன்று (25) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்தே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.உலக வங்கியின் தலைவர்
...
சமீப சில ஆண்டுகளாக எதிர்பாராத விதமாக மனித குலங்களைத் தாக்கும் பல்வேறு நோய்க் கிருமிகளின் பரவல், அடுத்ததாக வரவிருக்கும் டிசிஸ் எக்ஸ் (Disease X) மிகப்பெரிய ஆபத்துக்களை ஏற்படுத்துவதாக இருக்கலாம் என்று கொவிட் தொற்றுக்கு லண்டன் தடுப்பூசியைக் கண்டுபிடித்த Taskforce ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த கேட் பிங்க்ஹாம் தெரிவித்துள்ளார்.
டிசிஸ் எக்ஸ் (Disease X) என்பது கடந்த 2019 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து ...
தியாகதீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு, நடாத்தப்பட்ட மாபெரும் மென்பந்து துடுப்பாட்ட போட்டித் தொடரில் ரெட்பானா நியூபாரதி அணி வெற்றிவாகை சூடியது.குறித்த நினைவேந்தல் நிகழ்வின் ஒரு அங்கமாக, தாயக அரசியல் துறையினரின் ஒழுங்கமைப்பில் கடந்த 15.09.2023 அன்று ஆரம்பிக்கப்பட்ட மாபெரும் மென்பந்து துடுப்பாட்ட போட்டித் தொடரின் இறுதிப்போட்டி 24.09.2023 அன்று, மூங்கிலாறு தேராவில் புதியநிலா விளையாட்டுக்கழக மைதானத்தில் மிகச் சிறப்பாக இடப்பெற்றது.
குறிப்பாக தேராவில் புதியநிலா வ...
யாழ்ப்பாணத்தில் இளைஞனொருவன் இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டு கடுமையான தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
யாழ்ப்பாணம் மானிப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த சனிக்கிழமை (23) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த இளைஞன் வீதியில் சென்றவேளை மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் அவரை கடத்தி ஆள் அரவமற்ற பகுதிக்கு கொண்டு சென்று கடுமையாக தாக்கி அவரிடமிருந்த தொலைபேசி, மணிக்க...
தமிழ் தேசிய அரசியல் செயற்பாட்டாளர்களால் நேற்று (24) கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக ஆரம்பித்த தியாக தீபம் திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் எழுச்சி ஊர்தியின் இரண்டாம் நாள் பயணம் மாங்குளத்தில் இன்று (25) ஆரம்பிக்கப்பட்டது.
நேற்று (24) கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக ஆரம்பித்த தியாக தீபம் திலீபனின் 36 ம் ஆண்டு நினைவேந்தல் எழுச்சி ஊர்தி கொடிகாமத்தில் இருந்து முழங்...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய வெளிநாட்டு பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று(24) பிற்பகல் டோகாவிலிருந்து கட்டுநாயக்க வந்த கென்ய நாட்டைச் சேர்ந்த பெண்ணே கைது செய்யப்பட்டவராவார்.மூன்று பிஸ்கட் ரின்களில்
மூன்று பிஸ்கட் ரின்களில் அடைக்கப்பட்டு கொண்டுவரப்பட்ட சுமார் 300 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளுடன் இவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் போதைப்பொருள் மேலதிக விசாரணைகளுக்காக க...
பெங்களூரு,-தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு விவசாயிகள், கன்னட அமைப்பினர் பெங்களூரில், பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளதால் தமிழக ...
நாளை மங்கலகரமான சோபகிருது வருடம் புரட்டாதி மாதம் 12 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை (2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி).
ஒவ்வொரு ராசிகளுக்குமான நாளைய ராசி பலன்களை பிரபல ஜோதிடர் ஆச்சார்யா ஹரிஸ் ராமன் கூறுகின்றார்.
ஜோதிடத்தின் அடிப்படையான நவக்கிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக்கொண்டு இருக்கின்றன.
இதனால் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமாக நாளாந்த பலன்கள் மாறுபடுகின்றது.
இந்த நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கும...