தமிழகத்தை சேர்ந்த செஸ் வீராங்கனை ஆர்.வைஷாலி கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்றுள்ளார். இதன் மூலம் இந்தியாவின் மூன்றாம் பெண் கிராண்ட் மாஸ்டர் ஆகவும், தமிழ்நாட்டின் முதல் பெண் கிராண்ட்மாஸ்டர் ஆகவும் உயர்ந்து சாதனை படைத்துள்ளார் வைஷாலி.
நாகார்ஜுன சாகர் அணையில் இருந்து ஆந்திரப் பிரதேச போலீசார் தன்னிச்சையாக தண்ணீர் திறந்ததால், ஆந்திரப் பிரதேசத்துக்கும் தெலங்கானாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மத்திய அரசின் தலையீட்டை அடுத்து மோதல் தணிந்துள்ளது.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி சரியாக காலை 8 மணிக்குத் தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு, ராஜஸ்தான் மாநிலங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்கி பிடிபட்டதன் மூலம் ஒன்றிய பாஜக அரசின் அரசியல் கருவியான அமலாக்கத்துறையின் சாயம் வெளுத்து விட்டது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னையில் புயல் மீட்பு பணிகளில் 18 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை மற்றும் புயல் காற்று வீசும் என வானிலை
பொதுநலனை கருத்தில்கொண்டு 500 டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடியது தொடர்பான தமிழகஅரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், கடைகளை திறக்க உத்தரவிடக் கோரிகட்டிட உரிமையாளர்கள் தொடர்ந்தவழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது
உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் 1,25,000 இந்திய ரசிகர்கள், ஆர்பரிக்கும் நீலக்கடல் அலையை அமைதியாக்குவோம் என்று 2023 உலகக்கோப்பை இறுதிக்கு முன் கூறிய பாட் கமின்ஸ் சொன்னதைச் செய்தார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான கடைசி மற்றும்5-வது டி 20 கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.
ஆந்திராவின் விஜயவாடாவில் உள்ள ராமகோட்டையா உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வந்த யுடிடி தேசிய ரேங்கிங் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பெட்ரோலிய விளையாட்டு மேம்பாட்டு வாரியத்தை சேர்ந்த மானவ் தாக்குர் 4-2 என்ற கணக்கில் ஜி.சத்தியனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள 230 சட்டப்பேரவை தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ளன. இங்கு ஆளும் பாஜக ஐந்தாவது முறையாக ஆட்சியை தொடர முயல்கிறது. இதை முறியடிக்க எதிர்க்கட்சியான காங்கிரஸ் தீவிரமாக முயற்சி செய்துள்ளது. இங்கு இதரகட்சிகள் போட்டியிட்டாலும், பாஜக, காங்கிரஸுக்கு இடையே இருமுனைப் போட்டி நிலவியது.
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் இருந்து தனியாக தெலங்கானா மாநிலம் பிரிந்த பின்னரும், கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு பிரச்சினை இன்னமும் ஓயாமல் உள்ளது.இதற்காக கிருஷ்ணா நதி நீர் வாரியமும் ஏற்பாடு செய்யப்பட்டது. நாகார்ஜுன சாகர் அணையின் வலது புறத்தில் இருந்து ஆந்திராவுக்கு 50 டிஎம்சி நீர் திறந்து விட வேண்டி இருந்தது. ஆனால், தெலங்கானாவில் சட்டப்பேரவை தேர்தல்நடைபெற்றதால் இதனை அவர்கள்கண்டுகொள்ளவில்லை.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் தேர்தல்முடிவுகள் இன்று வெளியாகவுள்ள நிலையில், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார்காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சிதாவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூருவில் சொகுசு விடுதிகளை தயார் நிலையில் வைத்துள்ளார்.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்என்பது இன்று மதியத்துக்குள் தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெலங்கானா தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் ‘டீப் ஃபேக்’ (Deepfake) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளதாக பிஆர்எஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் (Election Commission) புகார் கொடுத்துள்ளது.
உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என்று 2019-ம் ஆண்டு நவம்பரில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி கோயில் கட்டுமான பணிக்காக ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அமைக்கப்பட்டது. 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ராமர் கோயில் கட்டுமான பணிக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. மிசோரம் மாநிலத்தில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெறும். இதனால் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் ஒருசில நாட்களுக்கு தேவையான உணவு, நீர் மற்றும் மருந்துகளை கையிருப்பில் வைத்துக் கொள்ளுமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.