மூன்று மாதங்களுக்கு முன்னரே ரயில் வழித்தட பகுதிகளில் சிக்னல் அமைப்பிலுள்ள குறைப்பாடுகள் குறித்து தென்மேற்கு ரயில்வே மண்டல அதிகாரி எச்சரிக்கை விடுத்தது தெரிய வந்துள்ளது.
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இன்று இரவு 7.20 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை - ஹவுரா மெயில் (12840) ரத்து செய்யப்படுகிறது. ஒடிஸாவில் பாலசோர் ரயில் நிலையம் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பெங்களூருவிலிருந்து ஹவுரா சென்ற சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் என 3 ரயில்கள் விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் இதுவரை
எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் சிஸ்டம் என்பது ஒரு ரயில் ஒரு வழித்தடத்தில் ஓடும்போது, அதன் வேகம், நிலை மற்றும் பிற தகவல்களை கண்டறிந்து சிக்னலிங் சிஸ்டத்திற்கு அனுப்பப்படுகிறது.
ஸ்வீடன்: ஸ்வீடன் நாடு உடலுறவை ‛செக்ஸ் போட்டியாக அங்கீகரித்துள்ளது. இதற்காக வரும் 8 ம் தேதி முதல்‛செக்ஸ் சாம்பியன் ஷிப் போட்டி தொடங்கி நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போட்டிக்கு வித்தியாசமான ரூல்ஸ் வகுக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கும், மேற்கத்திய கலாசாரத்தை பின்பற்றும் அமெரிக்கா, ஐரோப்பியா நாடுகளுக்கும் இடையே ஏராளமான வித்தியாசங்கள்ளன. அங்குள்ள கலாசாரமும், இந்திய கலாசாரத்துக்கும் இடையே அதிக
கர்நாடகத் தேர்தலின் வெற்றியைத் தொடர்ந்து தெலங்கானா மற்றும் மற்ற மாநிலங்களின் தேர்தல்களிலும் காங்கிரஸ் பாஜகவை வீழ்த்தும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மட்டுமின்றி மக்களும் பாஜகவின் வெறுப்பு கலந்த சித்தாந்தத்தை வெறுத்து அவர்களை தோற்கடிக்க தயாராகி விட்டதாகவும் அவர் தெரிவித்தார். வாஷிங்டன் மற்றும் சான் பிரான்ஸிஸ்கோ பயணத்தை முடித்துக் கொண்டு நியூயார்க் வந்தடைந்த அவர் இதனை தெரிவித்தார்.
இதையும் படிக்க: கிரிக்கெட் வீரர்களின் நேரத்தில் சர்வதேச கிரிக்கெட்டின் ஆதிக்கத்தை மாற்றிய ஐபிஎல்: பாட் கம்மின்ஸ்
இது குறித்து அவர் பேசியதாவது: நாங்கள் கர்நாடகத்தில் பாஜகவை அழிக்க முடியும் என காட்டியுள்ளோம். நாங்கள் பாஜகவை தோற்கடிக்கவில்லை, அழித்துள்ளோம். கர்நாடகத்தில் அவர்களை நாங்கள் நீக்கிவிட்டோம். பாஜகவிடம் ஒட்டுமொத்த ஊடகமும் இருந்தது. எங்களிடம் இருந்த பணத்தைக் காட்டிலும் பாஜவிடம் 10 மடங்கு அதிகமாக இருந்தது. அவர்களிடம் அரசாங்கமும் இருந்தது. அவர்களிடம் விசாரணை அமைப்புகளும் இருந்தன. அவர்களிடம் எல்லாமும் இருந்தன. இருந்தும் அவர்களை நாங்கள் அழித்துவிட்டோம். நான் உங்களுக்கு ஒன்றை தெரியப்படுத்த விரும்புகிறேன். அடுத்து தெலங்கானா தேர்தலில் அவர்களை நாங்கள் அழிக்க உள்ளோம். இந்த தேர்தலுக்குப் பிறகு தெலங்கானாவில் பாஜகவை பார்ப்பது மிகவும் கடினம்.
தெலங்கானா மட்டுமின்றி அடுத்தடுத்து நடைபெறவுள்ள ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத் தேர்தல்களிலும் பாஜகவை வீழ்த்துவோம். கர்நாடகத்தின் முடிவுகளைப் போலவே இந்த மாநிலங்களின் முடிவுகளும் இருக்கும். காங்கிரஸ் மட்டும் பாஜகவை தோற்கடிக்கப் போவதில்லை. இந்திய மக்கள் , மத்தியப் பிரதேச மக்கள், தெலங்கானா மக்கள், ராஜஸ்தான் மக்கள் மற்றும் சத்தீஸ்கர் மக்கள் பாஜகவினை தோற்கடிக்கப் போகிறார்கள். பாஜகவின் வெறுப்புணர்வு மிகுந்த கொள்கைகளை மக்கள் புரிந்து கொண்டனர்.
இதையும் படிக்க: எஸ்.ஜே.சூர்யா படத்தின் டிரைலரை வெளியிட்ட விஜய் பட இயக்குநர்!
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜவினை வீழ்த்துவோம். இது சித்தாந்தங்களுக்கு இடையிலான மோதல். ஒரு புறம் பாஜவின் வெறுப்புணர்வு நிரம்பிய சித்தாந்தமும், மறுபுறம் காங்கிரஸின் அன்பு நிரம்பிய சித்தாந்தமும் உள்ளன என்றார்.
ஒடிசாவில் 3 ரயில்கள் விபத்துக்குள்ளானதில் 275 பேர் உயிரிழந்ததாக அம்மாநில அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. முன்பு பலி எண்ணிக்கை 288 என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 275 என்று திருத்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
புவனேஸ்வர் : ஒடிசா ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் ஒடிசா மாநில தலைமை செயலர் பிரதீப் ஜெனா. சில உடல்கள் இரண்டு முறை எண்ணப்பட்டதால் 288 என்று கூறப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து ஜூன் 2 பிற்பகல் 3.20 மணிக்கு புறப்பட்ட ஷாலிமார் - சென்னை
புவனேஷ்வர்: ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக சிலர் மத ரீதியான கருத்துக்களை பகிர்ந்து கலவரத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். ஒடிசா ரயில் விபத்து இந்திய ரயில்வே விபத்துகளில் மிகப்பெரிய விபத்துகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 294 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் பலி எண்ணிக்கை 400 ஐ தாண்டலாம்
புவனேஷ்வர்: ரயில் விபத்தில் சிக்கிய தமிழர்களை மீட்கும் பணிக்காக ஒடிசாவுக்கு சென்றுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான குழு இன்று அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை சந்தித்து தமிழ்நாட்டு பயணிகளின் பாதுகாப்பு தொடர்பாக கலந்துரையாடினர். ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் நாட்டைச் சேர்ந்த மக்களுக்கு நிவாரணப் பணிகளையும், தேவையான நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில்
ஒடிசா மாநிலம் பாலசோரில் நடந்த ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்ஐசி ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கிளைமிற்கான பல விதிகளை தளர்த்தி தகவல் தெரிவிக்க ஹெல்ப்லைன் எண்ணையும் (022-68276827) வெளியிட்டுள்ளது
ஒடிசா மாநிலம் பாலசோரில் 3 ரயில்கள் விபத்துக்குள்ளான இடத்தில் நடைபெற்றுவரும் சீரமைப்புப் பணிகள் குறித்து மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுடன் தொலைப்பேசி வாயிலாக தொடர்புகொண்டு பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார்.
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இன்று காலை முதலே விபத்து நடந்த பாலசோர் பகுதியில் நேரில் முகாமிட்டு மறுசீரமைப்புப் பணிகளை பார்வையிட்டு வருகிறார்.
மேலும், விபத்தில் படுகாயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து அடிப்படை தேவைகளை கேட்டறிந்தார்.
ஒடிசாவின் பாலசோா் மாவட்டம், பஹாநகா் பஜாா் ரயில் நிலையம் அருகே ஜூன் 2ஆம் தேதி இரவு 6.50 மணியளவில் மூன்று ரயில்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சிக்கியவர்களை தேசிய பேரிடர் மீட்புப் படையினரும், விமானப் படையினரும் மீட்டனர். அவர்களுக்கு உள்ளூர் மக்களும் தன்னார்வலர்களும் உதவினர்.
இதுவரை 290 பேர் உயிரிழந்துள்ளனர். 800க்கும் அதிகமானோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், பாலசோர் பகுதியில் காலை முதலே சீரமைப்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதனை நேரில் பார்வையிட்டு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்,
ரயில் விபத்துக்கான காரணம் என்ன என்பது கண்டறியப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி விபத்து நடைபெற்ற இடத்தை நேற்று பார்வையிட்டார். சீரமைப்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
சீரமைப்புப் பணிகளை இன்று முழுவதுமாக முடிப்போம். ரயில் விபத்தில் சிக்கிய உடல்கள் அனைத்தும் இங்கிருந்து மருத்துவமனைக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. சீரமைப்புப் பணிகளை முழுமையாக முடித்து வரும் புதன்கிழமைக்குள் ரயில் சேவையை இந்த வழித்தடத்தில் மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.
இதனிடையே, சீரமைப்புப் பணிகள் குறித்து அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு தொலைப்பேசி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி தொடர்புகொண்டு கேட்டறிந்தார்.
இந்தியாவில் புதிதாக 202 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 3,343 ஆக குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: சீரமைப்புப் பணிகள் குறித்து கேட்டறிந்தார் பிரதமர் மோடி
இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில் கூறியதாவது: நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,31,880 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 2 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 4.49 கோடியாக உள்ளது. கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் சதவிகிதம் 0.01 ஆக உள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவோரின் சதவிகிதம் 98.81 ஆக உள்ளது. இதுவரை 220.66 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன எனக் கூறப்பட்டுள்ளது.
கொல்கத்தா : யஷ்வந்த்பூர் - ஹவுரா சூப்பர்ஃபாஸ்ட் ரயிலில் தனது சொந்த ஊருக்குச் சென்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர் 6.45 மணியளவில் குடும்பத்தினரிடம் போனில் பேசிய நிலையில், 7 மணியளவில் நடந்த விபத்தில் பலியாகியுள்ள சம்பவம், அவரது குடும்பத்தினரை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை செயல்பட்டு
புவனேஸ்வரம்: ஒடிஸா ரயில் விபத்து நடந்த ரயில் தண்டவாளத்தில் குழந்தைகள் பயன்படுத்திய ஓவிய புத்தகங்கள், பொம்மைகள், காதல் கடிதங்கள் சிதறி கிடந்த சம்பவம் மனதை உலுக்குகிறது. பெங்களூர்- ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகிய மூன்றும் ஒடிஸாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனகா பஜார் நிலையத்தில் தனித்தனி இடங்களில் விபத்தில்
புவனேஷ்வர்: ஒடிஷா ரயில் விபத்தில் பலியான நபர்களின் உடல்களை அங்கே மீட்பு படையினர் மோசமாக கையாள்வது கடும் விமர்சனங்களை சந்தித்து உள்ளது. ஒடிசா ரயில் விபத்து இந்திய ரயில்வே விபத்துகளில் மிகப்பெரிய விபத்துகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 294 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் பலி எண்ணிக்கை 400 ஐ
கொல்கத்தா: ஒடிஷா ரயில்கள் விபத்தில் 294 பேர் பலியான பெருஞ்சோகம் தேசத்தை மட்டுமல்ல உலகை உலுக்கிக் கொண்டிருக்கிறது.. ஆனால் இந்த துயரம் கொஞ்சமும் இல்லாமல் எரிகிற வீட்டில் கிடைத்தவரை லாபம் என்பதாக புவனேஸ்வர் மற்றும் கொல்கத்தாவில் இருந்து தென்னிந்திய நகரங்களுக்கு செல்லக் கூடிய விமான கட்டணங்களை பல மடங்கு உயர்த்திவிட்டன விமான நிறுவனங்கள். ஒடிஷாவின் பாலசோர் அருகே
Odisha Train Accident: ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் குறித்து தெரியவந்துவிட்டது எனவும், விரைவில் முழு அறிக்கை வெளியிடப்படும் என்றும் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்னாவ் தெரிவித்தார்.
ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களின் புகைப்படங்களை அம்மாநில அரசு இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. விபத்துக்குள்ளான ரயிலில் பயணித்தவர்களின் உறவினர்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில் இவ்வாறு செய்யப்பட்டுள்ளது.
இணையதளத்தில் இறந்தவர்களின் புகைப்படத்தில் எண்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த எண்கள் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள உடலிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அடையாளம் கண்ட நபர்களின் எண்களைக் கொண்டு அதிகாரிகளைத் தொடர்புகொண்டால், அந்த உடல் உரியவர்களிம் ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒடிசாவின் பாலசோா் மாவட்டம், பஹாநகா் பஜாா் ரயில் நிலையம் அருகே ஜூன் 2ஆம் தேதி இரவு 6.50 மணியளவில் மூன்று ரயில்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானது
படிக்க | 200 பேரை அடையாளம் காண முடியவில்லை: ஒடிசா அரசு
பஹாநகா் பஜாா் பகுதியில் சரக்கு ரயில் நிறுத்தப்பட்டிருந்த தண்டவாளத்தில் கோரமண்டல் ரயில் நுழைந்து, சரக்கு ரயிலின் மீது மோதியது. இதில் கோரமண்டல் ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டன. அவை, சரக்கு ரயில் மீதும், அருகில் இருந்த மற்றொரு தண்டவாளத்திலும் சிதறி விழுந்தன.
அப்போது, அந்த தண்டவாளத்தில் எதிா்த்திசையில் வந்த பெங்களூரு-ஹெளரா விரைவு ரயில், அந்தப் பெட்டிகள் மோதி தடம்புரண்டு கோர விபத்து நேர்ந்தது.
விபத்தில் சிக்கியவர்களை தேசிய பேரிடர் மீட்புப் படையினர், விமானப் படையினர் மீட்டனர். அவர்களுக்கு உள்ளூர் மக்களும் உதவி புரிந்தனர். இதில் 290 பேர் உயிரிழந்தனர். 800க்கும் அதிகமானோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மீட்கப்பட்ட உடல்கள் புவனேஸ்வர் எய்ம்ஸ் உள்பட அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. விபத்தில் உயிரிழந்தவர்களில் 70 - 80 பேரை மட்டுமே அடையாளம் காண முடிந்துள்ளதாகவும், சுமார் 200 பேரின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்துள்ளதாக ஒடிசா அரசு தெரிவித்துள்ளது.
படிக்க | ஒடிசா ரயில் விபத்து: தமிழகத்தைச் சேர்ந்தவர்களில் 7 பேரைக் காணவில்லை
ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களின் புகைப்படங்களை அம்மாநில அரசு இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. விபத்துக்குள்ளான ரயிலில் பயணித்தவர்களின் உறவினர்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில் இவ்வாறு செய்யப்பட்டுள்ளது.
www.srcodisha.nic.in, bmc.gov.in, osdma.org ஆகிய இணையதளங்களில் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இணையதளத்தில் இறந்தவர்களின் புகைப்படத்தில் எண்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த எண்கள் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள உடலிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அடையாளம் கண்ட நபர்களின் எண்களைக் கொண்டு அதிகாரிகளைத் தொடர்புகொண்டால், அந்த உடல் உரியவர்களிம் ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புவனேஸ்வர் : கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் பலியான பயணிகளில் சுமார் 70 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அடையாளம் காணப்படாத பயணிகளின் புகைப்படங்கள் மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் படங்கள் இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. புகைப்படங்களின் கோரத்தன்மை கருதி குழந்தைகள் பார்க்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் ஷாலிமாரில் இருந்து
புவனேஷ்வர்: ஒடிசாவில் விபத்தில் சிக்கிய ரயிலில் பயணித்த பயணிகள் வருவதற்காக இன்று மேலும் ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. பாதராக் ரயில் நிலையத்தில் இருந்து நண்பகல் 1 மணிக்கு இந்த ரயில் கிளம்புகிறது. தேவைப்பட்டால் பார்சல் வேனும் இணைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமார் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த
புவனேஸ்வர்: ஒடிசாவில் நடந்த பயங்கர ரயில் விபத்தில் சிக்கி 290க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். இந்த சோக வடு மறைவதற்குள் ரயில் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு கொல்கத்தா அழைத்து சென்ற பஸ்விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகே ஷாலிமாரில் இருந்து சென்னைக்கு கோரமண்டல் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம்போல்
புவனேஸ்வரம்: ஒடிஸா ரயில் விபத்து நடந்த பாலசோரில் மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் விடுத்திருந்தது. ஒடிஸாவில் கோரமண்டல் விரைவு ரயில் உள்பட 3 ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் இதுவரை 296 பேர் உயிரிழந்துவிட்டனர். 1000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பாலசோர் மாவட்டம் பஹாநகர் பஜார் ரயில் நிலையம் அருகே இரவு 6.50
ஒடிசா மாநிலம் பாலாசோர் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில் சுமார் 200 பேரின் உடல்களை அடையாளம் காண முடியவில்லை என ஒடிசா அரசு தெரிவித்துள்ளது.
இறந்த 290 பேரில் கிட்டத்தட்ட 70 - 80 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில், புவனேஸ்வர் எய்ம்ஸ் உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் உடல்கள் வைக்கப்பட்டுள்ளன.
ஒடிசாவின் பாலசோா் மாவட்டம், பஹாநகா் பஜாா் ரயில் நிலையம் அருகே ஜூன் 2ஆம் தேதி இரவு 6.50 மணியளவில் மூன்று ரயில்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானது.
பஹாநகா் பஜாா் பகுதியில் சரக்கு ரயில் நிறுத்தப்பட்டிருந்த தண்டவாளத்தில் கோரமண்டல் ரயில் நுழைந்து, சரக்கு ரயிலின் மீது மோதியது. இதில் கோரமண்டல் ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டன. அவை, சரக்கு ரயில் மீதும், அருகில் இருந்த மற்றொரு தண்டவாளத்திலும் சிதறி விழுந்தன.
அப்போது, அந்த தண்டவாளத்தில் எதிா்த்திசையில் வந்த பெங்களூரு-ஹெளரா விரைவு ரயில், அந்தப் பெட்டிகள் மோதி தடம்புரண்டு கோர விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் சிக்கியவர்களை தேசிய பேரிடர் மீட்புப் படையினர், விமானப் படையினர் மீட்டனர். அவர்களுக்கு உள்ளூர் மக்களும் உதவி புரிந்தனர்.
மீட்கப்பட்ட உடல்கள் புவனேஸ்வர் எய்ம்ஸ் உள்பட அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அதில் சுமார் 200 பேரின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்துள்ளதாக ஒடிசா அரசு தெரிவித்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களில் 70 - 80 பேரை மட்டுமே அடையாளம் காண முடிந்துள்ளதாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
பாலசோரில் விபத்துக்குள்ளான கோரமண்டல் விரைவு ரயிலில் பயணித்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களில் 7 பேரைத் தொடர்புகொள்ள முடியவில்லை என ஒடிசா சென்றுள்ள தமிழக குழு தெரிவித்துள்ளது.
கோரமண்டல் ரயிலில் பயணித்த 7 பேர் பற்றி தகவல் தெரிந்தால் உறவினர்கள் மாநில கட்டுப்பாட்டறைக்கு 1070 என்ற எண்ணுக்கு தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒடிசாவின் பாலசோா் மாவட்டம், பஹாநகா் பஜாா் ரயில் நிலையம் அருகே ஜூன் 2ஆம் தேதி இரவு 6.50 மணியளவில் மூன்று ரயில்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானது.
படிக்க | 200 பேரை அடையாளம் காண முடியவில்லை: ஒடிசா அரசு
பஹாநகா் பஜாா் பகுதியில் சரக்கு ரயில் நிறுத்தப்பட்டிருந்த தண்டவாளத்தில் கோரமண்டல் ரயில் நுழைந்து, சரக்கு ரயிலின் மீது மோதியது. இதில் கோரமண்டல் ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டன. அவை, சரக்கு ரயில் மீதும், அருகில் இருந்த மற்றொரு தண்டவாளத்திலும் சிதறி விழுந்தன.
அப்போது, அந்த தண்டவாளத்தில் எதிா்த்திசையில் வந்த பெங்களூரு-ஹெளரா விரைவு ரயில், அந்தப் பெட்டிகள் மோதி தடம்புரண்டு கோர விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சிக்கியவர்களை தேசிய பேரிடர் மீட்புப் படையினரும், விமானப் படையினரும் மீட்டனர். அவர்களுக்கு உள்ளூர் மக்களும் தன்னார்வலர்களும் உதவினர்.
இதுவரை 290 பேர் உயிரிழந்துள்ளனர். 800க்கும் அதிகமானோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
படிக்க | ஒடிசா ரயில் விபத்தில் தமிழர்கள் யாருக்கும் உயிரிழப்பில்லை: மா.சுப்ரமணியன் பேட்டி
சென்னை செல்லவிருந்த கோரமண்டல் ரயிலில் தமிழகத்தைச் சேர்ந்த பலர் பயணித்துள்ளனர். அவர்கள் குறித்து தகவல் அறிந்து உதவ தமிழகத்திலிருந்து அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழு ஒடிசா விரைந்தது.
அதன்படி, கோரமண்டல் ரயிலில் பயணித்தவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த 294 பேர் தனி ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் வந்தடைந்தனர். அதில் 8 பேர் படுகாயம் அடைந்திருந்தனர்.
இந்நிலையில், கோரமண்டல் ரயிலில் பயணித்த தமிழர்களில் 7 பேர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றும், அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோரமண்டல் ரயிலில் பயணித்த 7 பேர் பற்றி தகவல் தெரிந்தால் உறவினர்கள் மாநில கட்டுப்பாட்டறைக்கு 1070 என்ற எண்ணுக்கு தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புவனேஷ்வர்: ஒடிசா ரயில் விபத்துக்கு தொழில் நுட்ப கோளாறு காரணமா? அல்லது மனித தவறுகள் கரணமா என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ள நிலையில், மூன்று மாதங்களுக்கு முன்பே தென்மேற்கு ரயில்வே தலைமை செயல்பாட்டு மேலாளர் இந்திய ரயில்வேக்கு சிக்னல் அமைப்பில் குறைபாடுகள் இருப்பதை சுட்டிக்காட்டி கடிதம் எழுதியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநககர் கொல்கத்தா
புவனேஸ்வர் : ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் 11 தமிழர்களை அடையாளம் காண முடியவில்லை என்று தமிழ்நாடு அரசின் குழுவை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி பணீந்திர ரெட்டி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் பாலாசோர் அருகே ரயில் விபத்தில் சிக்கி இதுவரை 291 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், 900க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை
புவனேஸ்வரம்: எங்கள் வாழ்நாளில் இத்தனை உடல்களை பார்த்ததே இல்லை என ஒடிஸா தீயணைப்பு துறை அதிகாரி அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். பெங்களூர்- ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகிய மூன்றும் ஒடிஸாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனகா பஜார் நிலையத்தில் தனித்தனி இடங்களில் விபத்தில் சிக்கியது. இதில்
புவனேஸ்வர்: ஒடிசாவில் நடந்த பயங்கர ரயில் விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் தான் விபத்துக்கான மூலக்காரணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ரயில் விபத்து தொடர்பாக அவரை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்த நிலையில் அவர் இந்த தகவலை கூறியுள்ளார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகே ஷாலிமாரில் இருந்து
விதி வலியது என்பார்கள்... அல்லது இறைவன் போட்ட கணக்கு ஒரு போதும் தப்பாது என்பார்கள்.. இதை எல்லாம் உறுதிபடுத்தும் வகையில், கோராமாண்டல் ரயில் விபத்தில் அதிர்ஷ்டவசமாக தந்தை - மகள் உயிர் தப்பியதை கூறலாம்.