Dhanush D50 Update: ப பாண்டி படத்தை தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் உருவாகவுள்ளது டி50 படம். இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
டப்ஸ்மாஷ், டிக்டோக், ரீல்ஸ்களில் பிரபலமானவர் மிர்ணாளினி. பின்னர் தமிழில் சூப்பர் டீலக்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானார். ஜிகர்தண்டா தெலுங்கு ரீமேக்கிலும் நடித்திருந்தார். இந்தப் படத்தில் அவரது நடனம் வைரலானது. பின்னர் விஷாலின் எனிமி படத்திலும் அவர் ஆடிய நடனம் இணையத்தில் நல்ல வரவேற்பினை பெற்றது.
எம்ஜிஆர் மகன், ஜாங்கோ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். சாம்பியன் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.விக்ரமின் கோப்ரா படத்திலும் நடித்திருந்தார்.
தற்போது 2 தெலுங்கு படங்களில் நடித்து முடித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பவர் மிர்ணாளினி. இவரது புகைப்படங்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
இந்நிலையில் இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ள மிர்ணாளினி ரவி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். புதிய புகைப்படமொன்றுக்கு ரசிகர் ஒருவர் மிகப் பிரபலமான ஹாலிவுட் திரைப்படமான ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் திரைப்படத்தின் நாயகி மிச்செல் ரோட்ரிக்வெஸ் போலவே இருக்கிறார்கள் என கமெண்ட் செய்துள்ளார்.
இந்த புதிய புகைப்படங்களுக்கு பலரும் இதய எமோஜிக்களை கமெண்ட்டுகளில் பறக்கவிட்டு வருகின்றனர்.
"அரசியல் ரீதியான படங்களை வைத்து வணிக ரீதியான லாபத்தை ஈட்டுவது என்பது தமிழ்நாட்டில் மட்டும் தான்" என்று 'மாமன்னன்' ஆடியோ வெளியிட்டு விழாவில் பேசியுள்ளார் இயக்குநர் வெற்றி மாறன்.| Director vetrimaran speech in Maamannan Audio & Trailer Launch
நடிகர் கமல்ஹாசன் பிரபல மறைந்த பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்துக்கு நெகிழ்ச்சியாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
16 மொழிகளில் 40,000க்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார் எஸ்.பி.பி. தென்னிந்திய மொழிகளில் மட்டுமில்லாமல் ஹிந்தியிலும் முத்திரை பதித்து ஆச்சர்யப்படுத்தியவர். 2020ஆம் ஆண்டு கரோனா பாதிப்பினால் பாதிக்கப்பட்டு பின்னர் இதய நோயினால் உயிரிழந்தார். இருப்பினும் அவரது பாடல்கள் தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்திய ரசிகர்களின் மனதில் சாகாவரம் கொண்டு வாழ்கிறது.
இன்று எஸ்பிபி பிறந்தநாளினை முன்னிட்டு சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனும் நெகிழ்ச்சியாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
இருந்தும் இல்லாமல் இரு என்று மெய்யியல் சொற்றொடர் ஒன்று உண்டு. இல்லாமற் போயும் இருந்துகொண்டே இருப்பவர் என் அன்னய்யா எஸ்பி பாலசுப்ரமணியம். இனிய குரலாக, இளைக்காத நகைச்சுவையாக, எண்ணும்தோறும் பண்பாக நம்மோடு இருந்துகொண்டே இருக்கும் பாலு அன்னய்யா பிறந்த நாளுக்கு என் மனமார்ந்த வாழ்த்து.
Vikatan Awards Celebrate Tamil Cinema's Finest: A Glittering Night of Recognition. From Best Actors to Outstanding Technicians, the Event Pays Tribute to the Talent and Dedication of the Industry. A Stellar Showcase of Tamil Cinema's Achievements
தனித்துவமான இயக்குநராக இருந்த இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா. நடிப்பின் மீது ஆர்வம் கொண்டதால் தற்போது நடிகராக மட்டுமே நடித்து வருகிறார். மாநாடு படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. வதந்தி இணையத் தொடர் நல்ல வரவேற்பினை பெற்றது.
எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் பொம்மை. கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.
இதையும் படிக்க: இன்ஸ்டாகிராமில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா!
இப்படத்தை மொழி, அபியும் நானும் ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ராதா மோகன் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ரிச்சர்டு எம். நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தில் சாந்தினி, டவுட் செந்தில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் கடந்த ஆண்டு வெளியாகியது.
இதையும் படிக்க: சிஎஸ்கே வீரர் ருதுராஜ் திருமணம்: யார் இந்த உட்கர்ஷா பவார்?
பொம்மை திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் 16 ஆம் தேதி பொம்மை படம் வெளியாக உள்ளதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விஜய்யின் 68வது படத்தினை இயக்கும் இயக்குநர் வெங்கட் பிரபு பொம்மை படத்தின் 2வது டிரைலரை வெளியிட்டுள்ளார்.
Happy to release the second trailer of #Bommai https://t.co/lqdNyoXWSc Congrats to @Radhamohan_Dir Saar, young Maestro @thisisysr thambi , my favorite @iam_SJSuryah saar & team! Do watch #Bommai on June 16th in theatres!
— venkat prabhu (@vp_offl) June 4, 2023
தனித்துவமான இயக்குநராக இருந்த இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா. நடிப்பின் மீது ஆர்வம் கொண்டதால் தற்போது நடிகராக மட்டுமே நடித்து வருகிறார். மாநாடு படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. வதந்தி இணையத் தொடர் நல்ல வரவேற்பினை பெற்றது.
இதையும் படிக்க: சிஎஸ்கே வீரர் ருதுராஜ் திருமணம்: யார் இந்த உட்கர்ஷா பவார்?
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்திலும் எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. வாரிசு படத்தில் சிறிய கதாபாத்திரம் செய்திருந்தார். தற்போது கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டா 2 படத்திலும் விஷாலின் மார்க் ஆண்டனி படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
இதையும் படிக்க: பிரசாந்த் நீல் பிறந்தநாள்: விடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த சலார் படக்குழு!
ட்விட்டரில் 1.8 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள்.ரசிகர்களை பாராட்டி உடனுக்குடன் ரிப்ளை செய்து வருபவர் எஸ்.ஜே.சூர்யா. தற்போது இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார்.
View this post on Instagram
A post shared by SJ Suryah (@iam__sjsuryah)
சமீபத்தில் நடிகர் விஜய் இன்ஸ்டாகிராமில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. சமூக ஊடகமான இன்ஸ்டாகிராம் ரீஸ்ஸ், புகைப்படங்களுக்கென ப்ரத்யேகமான அப்ளிகேஷனாகும்.
இந்தியாவின் தலைசிறந்த பின்னணிப் பாடகர்களில் ஒருவரான் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பிறந்த நாள் இன்று. கோடான கோடி இசை ரசிகர்களின் மனங்களிலிருந்து நீங்கவே முடியாத அந்தப் பெரும் பாடகன் இந்த மண்ணுலகை விட்டு நீங்கிய பிறகு வரும் முதல் பிறந்த நாள் இது.
இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிப்பில் உருவான கேஜிஎஃப் திரைப்படம் வசூலில் புதிய சாதனையை அடைந்ததுடன் வெளியான நாளிலிருந்து தற்போது வரை அந்த படத்தின் பிரமாண்டம் குறித்து பலரும் பாராட்டி பேசி வருகின்றனர். இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் ரூ.1,200 கோடி வசூலையும் அடைந்தது.
அதனைத் தொடர்ந்து, இயக்குநர் பிரஷாந்த் நீல் தற்போது நடிகர் பிரபாஸை நாயகனாக வைத்து ‘சலார்’ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடிக்கிறார். பிரித்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சலார் 2023 - செப்டம்பர் 28 ஆம் தேதி திரைக்கு வரும் என அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹொம்பலே ஃபிலிம்ஸ் அறிவித்திருந்தது.
இந்நிலையில் படக்குழு விடியோவை வெளியிட்டு இயக்குநர் பிரசாந்த் நீல்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது. நடிகர் பிரபாஸும், “டார்லிங் நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்து” என தெரிவித்துள்ளார். மேலும் பல சினிமா பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Warmest birthday wishes to the incredibly talented director #PrashanthNeel.
From the sets of @SalaarTheSaga #HBDPrashanthNeel #Prabhas #Salaar
pic.twitter.com/TF3B1cuPMj
— Hombale Films (@hombalefilms) June 4, 2023
இந்த ஜூன் முதல் வாரம் தியேட்டர் மற்றும் ஓ.டி.டி-யில் என்னென்ன படைப்புகள் வெளியாகியிருக்கின்றன என்று பார்க்கலாம்... | What to watch on Theater & OTT: What movie to watch in the first week of June?!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் மற்றும் விஜய்சேதுபதி, பகத்பாசில் உள்ளிட்டோர் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த விக்ரம் திரைப்படம் வெளியாகி ஒரு வருடத்தை நிறைவு செய்திருக்கிறுது
காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழில் 2008இல் அறிமுகமானவர் நடிகை சுனைனா. தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக விஷாலின் லத்தி படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தன.
இதையும் படிக்க: நீங்க ஏன் ஹீரோயினா நடிக்கக் கூடாது?: அஞ்சனாவின் அழகிய புகைப்படத்தினால் மயங்கிய ரசிகர்!
தெறி படத்தில் நடிகர் விஜய்யுடன் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நிலா நிலா ஓடி வா, பிங்கர்டிப், சதுரங்கம், மீட் க்யூட் ஆகிய இணையத் தொடர்களிலும் நடித்துள்ளார்.
இதையும் படிக்க: 2018 படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?
நேரம், பிரேமம் படத்தில் துணைக் கதாபாத்திரமாக நடித்த அனந்த் நாக் உடன் சுனைனா நடித்துள்ள படம்தான் ரெஜினா. இதில் நிவாஸ் ஆதித்தன், விவேக் பிரசன்னா, பவா செல்லதுரை உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
சதிஷ் நாயர் தயாரித்துள்ள இந்தப் படத்தினை இயக்குகிறார் டோமின் டி செல்வா. யுகபராதி எழுதிய பாடல் எழுதியுள்ளார். தயாரிப்பாளரான சதிஷ் நாயர் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பான் இந்தியப் படமாக ரிலீஸாக உள்ளது. சமீபத்தில் இதன் டீசர் நல்ல வரவேற்பினை பெற்றது.
இந்நிலையில் விஜய்யின் 68வது படத்தினை இயக்கும் இயக்குநர் வெங்கட் பிரபு ஜூன் 5ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு வெளியிட உள்ளார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக இரு கிரிக்கெட் வீரர்கள் நுழையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூன்று சீசன்கள் முடிவடைந்த நிலையில், தற்போது நான்காவது சீசன் ஒளிப்பரப்பாகி வருகிறது. சமையல் போட்டியை நகைச்சுவையுடன் கலந்து ஒளிபரப்பப்படுவதால் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கடந்த சீசன்களை போலவே சமையல் கலைஞர்கள் தாமு, வெங்கடேஷ் பட் நடுவர்களாக பங்கேற்றுள்ளனர். ரக்சன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
கோமாளிகளாக புகழ், சுனிதா, தங்கதுரை, சிங்கபூர் தீபன், பிரபல யூடியூபர் ஜி.பி.முத்து, ஓட்டேரி சிவா, சிங்கப்பூர் தீபன், மோனிஷா, சின்னத்திரை நடிகை ரவீனா தாகா ஆகியோர் பங்கேற்று வருகின்றனர்.
குக்குகளில் கிஷோர் ராஜ்குமார், ராஜ ஐயப்பா, விஜே விஷால், காளையன், ஷெரின், கஜேஷ் வெளியேறியுள்ள நிலையில், தற்போது சிவாங்கி, விசித்ரா, ஆன்ட்ரியன், மைம் கோபி, சுருஸ்டி, கிரண் ஆகியோர் குக்குகளாக பங்கேற்று வருகின்றனர்.
சமீபத்தில் வெளியான ப்ரோமோவில், முதல் இறுதிப் போட்டியாளராக சிவாங்கி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சக்கரவர்த்தி அருண் மற்றும் வெங்கடேஷ் ஐயர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: இந்தக் கருவி இருந்திருந்தால் ஒடிசா ரயில் விபத்தை தவிர்த்து இருக்கலாம்!
பிரபல தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக தமிழக மக்களிடம் அறிமுகமானவர் விஜே அஞ்சனா. அவர் பல தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். கயல் படத்தின் ஹீரோ சந்திரனை 2016இல் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளார். தற்போது அஞ்சனா படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அஞ்சனா அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவார். சில வருடங்கள் முன்பு சைபர் காவல்துறையிடம் புகாரிடும் அளவுக்கு ஆபாச செய்திகளை பயனர்கள் அஞ்சனாவிற்கு அளித்ததாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் நேற்று பதிவிட்ட சேலையில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
பலரும் “மிகவும் அழகாக இருக்கிறது”, “தேவதை போல இருக்கிறீர்கள்” என புகழ்ந்து வரும் நிலையில் ரசிகர் ஒருவர், “நீங்க ஏன் ஹீரோயின்னா நடிக்க கூடாது?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
விஜே அஞ்சனா முன்பொருமுறை நேர்காணல் ஒன்றில், “நான் நடிகையாக விரும்பவில்லை. நினைத்தால் நடிப்பேன். பல வாய்ப்புகள் வந்தது. ஆனால் எனக்குதான் விருப்பமில்லை” எனத் தெரிவித்திருந்தார்.
சின்னத்திரையில் இருந்து வாணி போஜன், பிரியா பவானி ஷங்கர் போன்ற நடிகைகள் சினிமாவில் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றனர். தற்போது ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று விஜே அஞ்சனா சினிமாவில் நடிக்க வருவாரா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை மையமாக வைத்து உருவான திரைப்படம் 2018. இதில், டோவினோ தாமஸ், குஞ்சக்கோ போபன், ஆசிக் அபு, வினீத் ஸ்ரீனிவாசன், நரேன், லால் உள்ளிட்ட மலையாள நடிகர்கள் பட்டாளமே நடித்திருந்தது.
இதையும் படிக்க: டெஸ்டில் 11,000 ரன்களை கடந்த ஜோ ரூட்!
இடுக்கி அணை திறக்கப்பட்டபோது ஏற்பட்ட வெள்ளச்சேதத்தில் இளைஞர்கள், மீனவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எப்படியெல்லாம் உதவினார்கள் என்பதை தத்ரூபமாக காட்சிப்படுத்தியிருந்தார் இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப்.
இதையும் படிக்க: பாயும் ஒளி நீ எனக்கு: ரிலீஸ் தேதி அறிவிப்பு!
கேரளத்தில் மே 5 ஆம் தேதி வெளியான இப்படம் அதிவேகமாக ரூ.100 கோடி வசூலைக் கடந்து அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் மிகப்பெரிய வரவேற்பைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.
தற்போது இந்தப் படம் ஜூன் 7ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பார்க்கலாம்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் தயாரித்து நடித்த விக்ரம் திரைப்படம் கடந்த ஆண்டு ஜூன் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பெரும் வசூல் சாதனையைப் படைத்தது. அதனைத் தொடர்ந்து ஓடிடியில் வெளியானாலும் தமிழைத் தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதையும் படிக்க: 2018 படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?
இந்தப் படம் 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனிடையே விக்ரம் திரைப்படம் 100 நாள் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது.
இன்றோடு விக்ரம் திரைப்படம் ரிலீஸாகி ஓராண்டாகியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் நடிகர் கமல்ஹாசன் அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றமாக நடித்திருந்தாலும் அவருக்கும் நல்ல வரவேற்பினை தந்தது. தற்போது ட்விட்டரில் லோகேஷ் கனகராஜ், ரோலக்ஸ் (சூர்யா), ஃபகத் ஃபாசில், விக்ரம், கமல்ஹாசன் ஆகிய பெயர்கள் டிரெண்டிங்கில் உள்ளது.
#1YearofRolexSir
Most Talked
Most Reached
One Of The People Favourite Character of 2022
Still #Rolex Craze is Never Ending#1YearOfRolexMania @Suriya_offl #Vikram #LokeshKanagaraj#Kanguva #VaadiVaasal pic.twitter.com/4nb6PTKy9c
— Sathish (@Sreesathish3) June 3, 2023
லோகேஷ் தற்போது விஜய்யுடன் ‘லியோ’ படத்தினை இயக்கி வருகிறார். கமல் ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். சூர்யா ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார்.
@Suriya_offlna oru cameo role thaan pannaru Last 10 Minutes ...................
THE WHOLE THEATRE ERUPTED#Rolex #1YearofRolex #1YearOfIndustryHitVikram pic.twitter.com/lnO9bt44u6
— Karthikn (@karthivijay2207) June 3, 2023
சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் ரோலக்ஸ் மக்களின் மனதை வென்றதாக ரசிகர்கள் ட்விட்டரில் ரோலக்ஸ் ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.
தயாரிப்பாளர்கள் சங்கம் என்பது பெரிய அமைப்பு. 1200 உறுப்பினர்களைக் கொண்டது. அங்கே பெரிய பொறுப்புகள் இருக்கும். உதவித்திட்டங்கள், பொறுப்புகள்னு நிறைய விஷயங்கள் நடக்கும். ஆனால், எங்க சங்கம் சின்ன அமைப்புதான். - டி.சிவா |news about tamil film producers association
‘மாமன்னன்’ ஆடியோ வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் நடிகர் வடிவேலு இணைந்து மேடையில் பாடிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
டாணாக்காரன், பொன்னியின் செல்வன் படங்களின் வெற்றிகளுக்குப் பிறகு விக்ரம் பிரபு வாணி போஜன், விவேக் பிரசன்னா ஆகியோருடன் நடிக்கும் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தினை இயக்குகிறார் கார்திக் அத்வைத். இப்படத்தினை எழுதி இயக்குவது மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார் கார்த்திக் அத்வைத்.
இப்படம் ஆக்ஷன் திரில்லராக இருக்கும் என டீசரிலிருந்து தெரியவருகிறது. இந்தப்படத்திற்கு இசை- சாகர், பாடலாசிரியர்- கார்த்திக் நேத்தா, ஸ்டன்ட் மாஸ்டர்- தினேஷ் காசி.
இந்தப் படத்திற்கு சமீபத்தில் தணிக்கைச் சான்றிதழ் யு/ஏ கிடைத்தது. இந்நிலையில் இந்தப் படம் ஜூன் 23ஆம் தேதி திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.
தனுஷ் ரசிகர்களும் சரி, இயக்குநர் வெற்றிமாறனின் ரசிகர்களும் சரி, அதிகம் எதிர்பார்த்துக் காத்திருப்பது `வடசென்னை 2'க்குத்தான். இந்தப் படமும் வடசென்னையை மையப்படுத்திய கதை என்பதால்...| D50: Dhanush 50th movie exclusive updates
நலனின் படத்திற்கு இன்னமும் டைட்டில் வைக்கவில்லை. கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பும் சென்னையில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. | From Japan to Kaithi 2 - Here is the list of upcoming movies of Karthi
சமீபத்தில் மறைந்த மனோபாலாவின் தயாரிப்பில் உருவான 'சதுரங்க வேட்டை 2' படம் சில காரணங்களால் வெளியாகாமல் இருக்கிறது. அதனை விரைவில் ரிலீஸ் செய்வதற்கான வேலைகளில் மனோபாலாவின் நண்பர்கள் இறங்கியுள்ளனர். | Trisha upcoming movies line up details