வேலூரில் 13 வயது சிறுமி மது போதையில் இருந்தவர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 13 வயது சிறுமிக்கு கூட பாதுகாப்பு வழங்காத இந்த அரசு இனியும் பதவியில் நீடிக்க எந்த தகுதியும் இல்லை என்றும் அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கூகுள் மேப் மூலம் பொதுமக்கள் தாங்கள் இருக்குமிடத்தில் காற்றின் தரம் எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும். இதுதொடர்பான புதிய வசதி சமீபத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இதற்கு "ஏர் வியூவ் பிளஸ்" என்று பெயர் வைத்துள்ளனர். இந்த வசதி குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்படும் நிலையில் திருச்செந்தூரில் 6 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதால் கோவிலுக்குள் மழை நீர் புகுந்தது அதனால் பக்தர்கள் அவதி
லஞ்சம் கொடுத்து அமெரிக்க முதலீடுகளை ஈர்த்தாக தொழில் அதிபர் கவுதம் அதானி மீது நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் கவுதம் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானிக்கு எதிராக பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Today Gold Rate : சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய ஏற்ற இறக்கங்களை அடைந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
Tamil top 10 News: மருத்துவ மாணவர்களுக்கு புதிய சலுகை, 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், தங்கம் விலை உயர்வு உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகளை டாப் 10 தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.
ஆன்லைன் புதுப்பிப்புகளுடன் இன்றைய தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகளைக் கண்டறியவும். தமிழ்நாட்டின் அரசியல், நிகழ்வுகள் மற்றும் முக்கியச் செய்திகள் மற்றும் தமிழ்நாட்டிலிருந்து வரும் பல நிகழ்வுகளைப் பற்றிய இன்றைய செய்திகளை HT தமிழில் படித்து தெரிந்துகொள்ளுங்கள். Stay informed with Latest Tamil Nadu toda
குறுக்கு வழியில் போலியான சான்று பெற்று தேர்வு எழுதி வெற்றி பெறுவது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது ஏழை மாணவர்களின் கனவை புதைக்கும் செயலாகும் என்று
நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுவது தொடர்பாக அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இதற்கேற்ப மாணவ, மாணவிகள் தயாராக வேண்டியது அவசியமாகிறது.
வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் நிலங்களை மீட்பதற்கு மேலும் 2 மாதம் அவகாசம் அளித்தும், கோவில் நிலங்களை மீட்கவிடாமல் தடுக்கும் அதிகாரம் மிக்கவர்களின் பட்டியலை தாக்கல் செய்ய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மோசமான வானிலை காரணமாக அமைச்சர் எ.வ.வேலு சென்ற விமானம் மதுரை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக செல்ல வேண்டிய நகரில் வானிலை சரியில்லாததால் வானில் சில நிமிடங்கள் வட்டமடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் பிரபல ரவுடி சப்போ செந்திலின் கூட்டாளிகள் இருவர், திருந்தி வாழ வாய்ப்பு கேட்டு காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்.
இக்கோயில் அருகில் உள்ள வீடு ஒன்றில் விலங்குகள் நல ஆர்வலர், நாய்களுக்கு உணவளித்து வந்துள்ளார். இந்த நாய்கள், அசைவ உணவை உண்டுவிட்டு, எலும்புகளை விநாயகர் கோயிலில் போட்டு அசுத்தம் செய்வதாக புகார் எழுந்தது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஈகுவார்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கோங்கல்மேடு பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக 46 மலைக்குறவர் இன குடும்பங்கள் வசித்து வருகின்றன.
சாலையோரத்தில் அடிபட்டு கிடக்கும் விலங்குகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் சாலை ஓரங்களில் அனாதையாக அடிபட்டு கிடக்கும் விலங்குகளை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ரயில்களில் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் முன்பதிவில்லா ரயில் பெட்டிகளை சேர்க்கும் திட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. தெற்கு ரயில்வே நிர்வாகம் இதுவரை எடுத்துள்ள நடவடிக்கை, வரும் டிசம்பர் மாதத்திற்குள் எடுக்கப் போகும் நடவடிக்கை உள்ளிட்டவை பெரிதும் கவனம் பெற்றுள்ளன.
தமிழக குற்ற வழக்கு தொடர்(வு)த்துறை இயக்குநராக உயர் நீதிமன்ற அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஜி. கிருஷ்ணராஜாவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.