இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தாக்குதலை நடத்தக்கூடாது என்று ஈரானை அமெரிக்கா எச்சரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த ஒக்டோபர் 2 ஆம் திகதி ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஆதரவாக, ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில், அந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்விதமாக, ஈரான் இராணுவ நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் கடந்த வாரம் தாக்குதல் மேற்கொண்டது.அமெரிக்காவின் எச்சரிக்கை
இதன்போது, ஈரானின் தெஹ்ர...
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட வரப்பிரசாதங்களை நீக்க வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) கோரிக்கை விடுத்துள்ளார்.மாத்தளையில் (Matale) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.அத்துடன் தனக்கு எந்தவித சலுகைகளும் தேவையில்லை எனவும் ஏனைய ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமெனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.ரணில் கோரிக்கை...
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த(Lohan Ratwatte) கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த கைது நடவடிக்கை இன்று காலை (31.10.2024) இடம்பெற்றுள்ளது.கைது நடவடிக்கை
நுகேகொடை, மிரிஹானை பகுதியில் உள்ள அவரது மனைவியின் வீட்டிலிருந்து இலக்க தகடு இல்லாத சொகுசுரக வாகனம் ஒன்று மீட்கப்பட்டமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், அவர் கண்டியிலுள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையி...
போரை முடிவுக்கு கொண்டு வந்த மகிந்த ராஜபக்சவிற்கு பாதுகாப்பு வழங்குவது அவசியம் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) அநுர அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.மாத்தளையில் (Matale) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ரணில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அதன்போது, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை ரத்து செய்யக்கூடாது என முன்னாள் ஜனாதிபதி ரணில் மேலும் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி சலுகைகள்தொடர்ந்...
நாட்டில் எரிபொருள் விலை மாதாந்த விலை சூத்திரத்தின் பிரகாரம் இன்று (31) நள்ளிரவு முதல் திருத்தப்பட வேண்டும்.
எனினும், எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என தற்போதைய அரசாங்கம் இதுவரை எவ்வித அறிவித்தலையும் வெளியிடவில்லை.புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட உள்ள இரண்டாவது எரிபொருள் விலைத் திருத்தம் இதுவாகும்.எரிபொருள் விலைமுதல் திருத்தமாக கடந்த மாதம் எரிபொருள் விலை ஓரளவு குறைக்கப்பட்டது. அந்தவகையில், மாதாந்த விலை சூத்திரத...
நாட்டிலுள்ள அரிசி வியாபாரிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.அதன்படி, கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்பனை செய்யாவிட்டால் எதிர்காலத்தில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஏற்பாட்டில் நேற்று (30) மாத்தறையில் (Matara) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.மின் கட்டணம் குறைக்கப்படும்
மாலைத்தீவின் (Maldives) ஜனாதிபதி விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்ய எதிர்பார்த்துள்ளதாக
அந்நாட்டின் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க மற்றும் மாலைதீவு உயர்ஸ்தானிகர்
மசூத் இமாத் ஆகியோருக்கு இடையிலான சிநேகபூர்வ சந்திப்பு நேற்று (30) பிற்பகல்
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போதே, மசூத் இமாத் மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு இலங்கைக்கான விஜயம் தொடர்பில்
தெரிவித்துள்ளார்.நீண்டகால நட்பு
குறித்த சந்திப்பில், ...
யாழ். காங்கேசன்துறை - கொழும்பு குளிரூட்டப்பட்ட தொடருந்து சேவை இன்று விசேட சேவையை ஆரம்பித்துள்ளது .தீபாவளியை முன்னிட்டு மேலதிகமாக தொடருந்துகள் 31.10.2024 மற்றும் 01.11.2024 ஆகிய தினங்களில் சேவையில் ஈடுபட உள்ளது.எனினும்
குளிரூட்டப்பட்ட தொடருந்து சேவை சனி மற்றும் ஞாயிறு தினங்களில் மட்டும் சேவை இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டணமாக 3200 ரூபாய் அறவிடபடவுள்ளது.இதேவேளை, நாடளாவிய ரீதியாக தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் முன்னெடுத்திருந்த தொழிற்சங்க நடவடிக்கை நேற்று (...
யாழ்ப்பாணம் (Jaffna) காங்கேசன்துறை மற்றும் நாகப்பட்டினத்திற்கிடையான கப்பல் சேவையின் சுங்கத்தில் ஊழல் செயற்பாடுகள் இடம்பெறுவதுடன் திட்டமிட்ட பயண இடையூறுகளை
சுங்க அதிகாரிகள் ஏற்படுத்துவதாக பயணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
குறிப்பாக காங்கேசந்துறை சுங்கத்தில் இரண்டு கருமபீடங்கள் மாத்திரமே
காணப்படுவதாகவும் இந்தியாவில் இருந்து வரும் பயணிகளிடம் நீண்ட நேர விசாரணைகள்
மேற்கொள்வதாகவும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, நபர் ஒருவருக்கு 35 தொடக்கம் 40 நிமிடம் வரை விசாரணை
செயற்பா...
எதிர்வரும் நாடாளுமன்றத்தில் எந்தவொரு அமைச்சருக்கும் அரசாங்கம் கொழும்பில் வீடுகளை வழங்காது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், கிராமிய வறுமையை ஒழிப்பதே தற்போதைய அரசாங்கத்தின் முக்கியமான பணி என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாத்தறையில் இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.மக்களின் பிரச்சினை
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான இணைப்பாக தனது பங்கை மாற்ற...
தீபாவளி என்பது ஒளிகளின் திருவிழா. இது தீமைக்கு எதிராக நன்மையை கொண்டாடும் பண்டிகையாகும், மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் மகிழ்ச்சியுடனும் வண்ணங்களுடனும் கொண்டாடப்படுகிறது.
இந்த தீபாவளிப் பண்டிகையானது உங்கள் வாழ்க்கையில் அனைத்து பிரார்த்தனைகளும் நிறைவேற்றி சிறந்த எதிர்காலத்தை பெற்றுக்கொடுக்கும் ஆரம்பமாக அமையவேண்டும் என அனைத்து வாசகர்களுக்கும் ஐபிசி தமிழ் செய்தித் தளம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
தீபங்களின் ஒளி உங்கள் வாழ்வில் நம்பிக்கை, நலன், நறுமணம் என அனைத்...
அஞ்ஞானத்தின் இருளை போக்க மெய்ஞ்ஞானத்தின் ஒளியினால் மட்டுமே முடியும் என்ற தொனியில் தீபங்களை ஏற்றி இலங்கையர்களாக புதிய புரட்சிக்கு வழிவகுப்பதாக இம்முறை தீபாவளி பண்டிகையை கொண்டாடுவோம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.உலகளாவிய ரீதியில் இன்றைய தினம் (31.10.2024) கொண்டாடப்பட்டு வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே மேற்குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த செய்தியில் அவர் மேலும் குறிப்பிட...
யாழ்ப்பாணத்தில் (Jaffna) ஹெரோயின் போதைப்பொருளை அதிகளவில் உள்ளெடுத்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ். உரும்பிராயில் நேற்றுமுன்தினம் இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், உயிரிழந்த இளைஞர் ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையாக இருந்தார். மேலதிக விசாரணை
சிறிது காலம் திருந்தி வாழ்ந்த அவர் நேற்றுமுன்...
இலங்கையின் ஐந்து மாகாணங்களிலுள்ள சகல தமிழ் பாடசாலைகளுக்கு நாளை (01.11.2024) விடுமுறை வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குறித்த விடுமுறை வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, கிழக்கு, மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் உள்ள சகல தமிழ் பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்குவதற்கு அந்தந்த மாகாணங்களுக்கான கல்வி அமைச்சுகள் (Ministry of Education) தீர்மானித்துள்ளன. கல்விச் செயற்பாடுகள்
இன்...
இலங்கையில் தேங்காய் உற்பத்தி வீழ்ச்சி அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வரை தொடரும் என தேங்காய் ஆராய்ச்சி நிறுவனம் (Coconut Research Institute) தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தில் தேங்காய் உற்பத்தியில் சடுதியான வீழ்ச்சி காணப்படுவதாக அதன் பணிப்பாளர் நயனி ஆராச்சிகே (Nayani Arachchige) தெரிவித்துள்ளார்.
தென்னை உற்பத்தி குறைவ...
யாழில் மது போதையில் வீடொன்றில் உள்நுழைந்து நபர் ஒருவரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (31.10.2024) யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வீட்டில் இருந்த வேளை மதுபோதையில் அத்துமீறி உள்நுழைந்து தாக்குதல் நடத்த முயற்சித்ததுடன் குடும்பஸ்தரின் மனைவி, பிள்ளைக்கும் கத்தியால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.மோட்டார் சைக்கிளின் மீது தாக்குதல்
அத்துடன், வீட்டிற்கு ...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரிகள் சார்பாக செயற்படவே ரவி செனவிரத்ன மற்றும் சானி அபேசேகர தலைமையில் விசாரணைகளை முன்னெடுக்க அநுர அரசாங்கம் முயற்சிக்கிறது என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில(Udaya Gammanpila) சுட்டிக்காட்டியுள்ளார்.
புறக்கோட்டை பகுதியில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் நேற்று(30.10.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்
மேலும் அவர் தெரிவிக்கையில், “...
மக்கள் தொகை அடர்த்தி மிகுந்த நாடுகளில் ஒன்றான பாகிஸ்தானின் (Pakistan) லாகூர் உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.180 மில்லியன் மக்கள்தொகை கொண்ட பாகிஸ்தான் ஆறாவது மிகுந்த மக்கள்தொகையுடைய நாடாகும்.இந்நிலையில், லாகூரில் காற்றுத் தரக் குறியீடு ஆபத்தான நிலையாக 690 ஆக பதிவாகி உள்ளதால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.மோசமான காற்றின் தரம் <...
கொழும்பில் (Colombo) பிரசார பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனின் (Mano Ganesan) வாகன சாரதி மற்றும் தற்போதைய தனிப்பட்ட பாதுகாவலர் இருவர் மீதும் பாரந்தூக்கி ஒன்று மோதியதில் விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
குறித்த விபத்து சம்பவம் நேற்று (30.10.2024) இரவு இடம்பெற்றுள்ளது.
இதன்போது விபத்துக்கு உள்ளான இருவரும் தற்போது கொழும்பு ஆதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைஇந்நிலையில் விபத...
மட்டக்களப்பு (Batticaloa) - ஆரையம்பதி பகுதியில் தேர்தல் சட்டத்தை மீறி பிரச்சாரச் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த இரண்டு ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம் (30.10.2024) ஆரையம்பதி பிரதான வீதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளரின் தேர்தல் பிரச்சாரச் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த அந்தக் கட்சியின் ஆதரவாளர்களே இதன்போது கைது செய்யப்பட்டுள்...
விண்வெளியில் இருந்தவாறே பெண் விஞ்ஞானி சுனிதா வில்லியம்ஸ்(sunita williams) தீபாவளி வாழ்த்து தெரிவித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
பூமிக்கு வெளியே சுமார் 260 மைல் தொலைவிலிருந்து தீபாவளி கொண்டாட்டங்களைக் கண்டுகளிக்கவிருப்பத...
இந்தியாவின் (India) அதானி நிறுவனத்துடன் (Adani Group) ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் மன்னாரில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தை நிர்மாணிக்கும் பணி தொடர்பில கலந்துரையாடல்களை நடத்த எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்ட குழுவொன்று புதுடில்லி (New Delhi) செல்ல உள்ளது.
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் மன்னாரில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையமொன்றை அமைப்பதற்கான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டு ஆரம்பகட்ட பணிகளும் முன்னெடுக்கப்பட்டன. இத்திட்டத்தின் ஊடாக 250 மெகாவா...
2020 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கோட்டபய ராஜபக்ச(gotabaya rajapaksa) முறையற்ற வகையில் செயற்பட்டதன் விளைவையே இன்று சிரேஷ்ட அரசியல்வாதிகள் எதிர்கொள்கின்றனர் என்ற உண்மையை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திசாநாயக்க(s b dissanayake) தெரிவித்தார்.
கொழும்பில் புதன்கிழமை (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு ...
காசா (Gaza) மற்றும் லெபனானில் (Lebanon) உள்ள மோதல்களைத் தீர்ப்பதில் முன்னேற்றம் காண இராணுவம் உள்ளிட்ட அமெரிக்காவின் (United States) உயர் பாதுகாப்பு அதிகாரிகள் குழு மத்திய கிழக்கு நோக்கிச் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லெபனான், காசா, ஈரான், பணயக்கைதிகள் மற்றும் பிற பிராந்திய விவகாரங்கள் பற்றி விவாதிக்க குறித்த குழுவின் விஜயம் அமையும் என கூறப்படுகிறது.
அமெரிக்க மத்தியஸ்தர்கள் இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையிலான பகைமையை நிறுத்த அமெரிக்க மத்தியஸ...
கனடாவில்(canada) இருந்து செயல்படும் சீக்கிய பிரிவினைவாத அமைப்பினரைக் குறிவைக்கும் சதித்திட்டத்தில் இந்திய(india) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின்(amith shah) பங்கு இருந்தது என்ற தகவலை கனடா அதிகாரிகள் கசியவிட்டதாக வோஷிங்டன் போஸ்ட் நாளிதழ் தெரிவித்துள...
இஸ்ரேல் (Israel) போரை நிறுத்த முடிவு செய்தால், நாங்கள் அதை ஏற்றுக்கொள்கிறோம் என ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்பின் புதிய தலைவர் நைம் காசிம் (Naim Qassem) தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் (Hamas)அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே, ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி புவாத் ஷுகர் உள்ளிட்ட பலர் படுகொலை செய்யப்பட்டனர்.
சமீபத்தில், ஹமாஸ் அமைப்பின் மூளையாகச் செயல்பட்ட யாஹியா சின்வார் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
புதிய தலைவர்
ஹிஸ்புல்லா அ...
பதின்ம வயதுடைய இரண்டு மாணவிகளை வன்புணர்விற்கு உள்ளாக்கிய கராத்தே பயிற்றுவிப்பாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கம்பகா(gampaha), தொம்பே கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தொம்பே காவல்துறையினர் தெரிவித்தனர்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புகள் நாடளாவிய ரீதியில்
இடம்பெற்றவேளை கிளிநொச்சியிலும்(kilinochchi) சுமுகமான முறையில் இடம்பெற்றதாக மாவட்ட அரசாங்க அதிபர் முரளிதரன் தெரிவித்தார்
காவல்துறையினர் தமது தபால் மூல வாக்குகளை அளிக்க விசேட தினம...
கிழக்கு ஸ்பெயினில் (Spain) ஏற்பட்ட மிக மோசமான திடீர் வெள்ளத்தினால் இதுவரை 72 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த செவ்வாயன்று பெய்த கடும் மழை காரணமாக வீதிகள் மற்றும் நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதன் விளைவாக வீதியில் நிறுத்திவைக்கப்பட்ட வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.குறித்த வெள்ளத்தில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மோசமான பாதிப்புமோசமான பாதிப்புக்குள்ளான ப...
கொட்டுக்கச்சியவைச் சேர்ந்த மெணிக்ஹாமி என்பவர், தனது பிள்ளைகள், பேரக்குழந்தைகளுடன் இணைந்து, தனது நூறாவது பிறந்தநாளை மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளார்.1924ஆம் ஆண்டு பிறந்த மெணிக்ஹாமியின் சொந்த ஊர் மஹகும்புக்கடவல, சொஹொன்கல்ம்ப எனும் கிராமம்.அவர் கொட்டுக்கச்சியை சேர்ந்த ஏ.எம். பண்டாப்பு என்பவரை திருமணம் செய்து நூறு ஆண்டுகள் வாழ்ந்த பெருமையைப் பெற்றுள்ளார்.அவரத...