வேலூரில் 13 வயது சிறுமி மது போதையில் இருந்தவர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 13 வயது சிறுமிக்கு கூட பாதுகாப்பு வழங்காத இந்த அரசு இனியும் பதவியில் நீடிக்க எந்த தகுதியும் இல்லை என்றும் அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கூகுள் மேப் மூலம் பொதுமக்கள் தாங்கள் இருக்குமிடத்தில் காற்றின் தரம் எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும். இதுதொடர்பான புதிய வசதி சமீபத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இதற்கு "ஏர் வியூவ் பிளஸ்" என்று பெயர் வைத்துள்ளனர். இந்த வசதி குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்படும் நிலையில் திருச்செந்தூரில் 6 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதால் கோவிலுக்குள் மழை நீர் புகுந்தது அதனால் பக்தர்கள் அவதி
லஞ்சம் கொடுத்து அமெரிக்க முதலீடுகளை ஈர்த்தாக தொழில் அதிபர் கவுதம் அதானி மீது நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் கவுதம் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானிக்கு எதிராக பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுவது தொடர்பாக அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இதற்கேற்ப மாணவ, மாணவிகள் தயாராக வேண்டியது அவசியமாகிறது.
வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் நிலங்களை மீட்பதற்கு மேலும் 2 மாதம் அவகாசம் அளித்தும், கோவில் நிலங்களை மீட்கவிடாமல் தடுக்கும் அதிகாரம் மிக்கவர்களின் பட்டியலை தாக்கல் செய்ய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மோசமான வானிலை காரணமாக அமைச்சர் எ.வ.வேலு சென்ற விமானம் மதுரை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக செல்ல வேண்டிய நகரில் வானிலை சரியில்லாததால் வானில் சில நிமிடங்கள் வட்டமடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
ரயில்களில் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் முன்பதிவில்லா ரயில் பெட்டிகளை சேர்க்கும் திட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. தெற்கு ரயில்வே நிர்வாகம் இதுவரை எடுத்துள்ள நடவடிக்கை, வரும் டிசம்பர் மாதத்திற்குள் எடுக்கப் போகும் நடவடிக்கை உள்ளிட்டவை பெரிதும் கவனம் பெற்றுள்ளன.
சாலையோரத்தில் அடிபட்டு கிடக்கும் விலங்குகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் சாலை ஓரங்களில் அனாதையாக அடிபட்டு கிடக்கும் விலங்குகளை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
அரசு கல்லூரிகளில் மாணவ, மாணவிகளின் வசதிக்காக உயர்கல்வித்துறை முக்கிய ஏற்பாட்டில் இறங்கியுள்ளது. அதாவது, கற்றல் தேவைகளை ஒட்டி இணைய சேவையை வழங்க முடிவு செய்துள்ளது. இதனை எந்தெந்த கல்லூரிகளில் அமல்படுத்தவுள்ளனர் என்றும், யாருக்கெல்லாம் கிடைக்கும் என்றும் தெரிந்து கொள்ளலாம்.
CBSE Date Sheet 2025 : மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) பாடத்திட்டம் முறையில் நடைபெறும் பொதுத் தேர்வு அட்டவணையை வெளியாகவுள்ளது. சிபிஎஸ்இ-யின் https://www.cbse.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு பிப்ரவரி 15-ம் தேதி முதல் தொடங்குகிறது.
கோவையில் விவசாய நிலங்களின் வழியாக எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சூலூர் விமானப்படைத்தளம் முன்பாக மறியலில் ஈடுபட்டனர். மறியல் காரணமாக திருச்சி சாலையில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது
அரசு பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளதற்கும் ஓசூரில் நீதிமன்ற வளாகத்தில்வழக்கறிஞருக்கு வெட்டப்பட்டுள்ளதற்கும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு எங்கே? என்றும் முதலமைச்சர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
2019 ஆண்டு குரூப்-1 தேர்வில் தமிழ் வழியில் பயின்றோருக்கான இட ஒதுக்கீட்டில் முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரிய வழக்கில் போலிச் சான்று கொடுத்த விவாகாரத்தில் விசாரணை செய்ய லஞ்ச ஒழிப்பு துறைக்கு மீண்டும் இரண்டு மாத கால அவகாச வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ஜார்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று (நவம்பர் 20) நிறைவடைந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.