மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 2 ஆண்டுகள் உயர்த்தப்படுவதாக செய்திகள் வைரலாகி வருகின்றன. இதுதொடர்பாக இந்தியா டுடே சார்பில் மேற்கொள்ளப்பட்ட உண்மை கண்டறியும் சோதனை குறித்து விரிவாக இங்கே காணலாம்.
அமெரிக்க நீதிமன்றம் பிடி வாரண்ட் பிறப்பித்துள்ள நிலையில் கவுதம் அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராமில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப பூங்காவை (டைடல் பார்க்) தமிழக முதல்வர் ஸ்டாலின் நாளை (நவம்பர் 22) திறந்து வைக்க உள்ளார்.
பாக்கியலட்சுமி சீரியல் நாடகத்தில் இன்றைய எபிசோட்டில் ஜாமீனில் ஸ்டேஷனை விட்டு வெளியில் வருகிறான் கோபி. இதனையடுத்து நேராக கடும் கோபத்துடன் பாக்யாவின் வீட்டுக்கு கிளம்பி வருகிறான்.
வேலூரில் 13 வயது சிறுமி மது போதையில் இருந்தவர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 13 வயது சிறுமிக்கு கூட பாதுகாப்பு வழங்காத இந்த அரசு இனியும் பதவியில் நீடிக்க எந்த தகுதியும் இல்லை என்றும் அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கூகுள் மேப் மூலம் பொதுமக்கள் தாங்கள் இருக்குமிடத்தில் காற்றின் தரம் எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும். இதுதொடர்பான புதிய வசதி சமீபத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இதற்கு "ஏர் வியூவ் பிளஸ்" என்று பெயர் வைத்துள்ளனர். இந்த வசதி குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்படும் நிலையில் திருச்செந்தூரில் 6 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதால் கோவிலுக்குள் மழை நீர் புகுந்தது அதனால் பக்தர்கள் அவதி
லஞ்சம் கொடுத்து அமெரிக்க முதலீடுகளை ஈர்த்தாக தொழில் அதிபர் கவுதம் அதானி மீது நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் கவுதம் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானிக்கு எதிராக பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுவது தொடர்பாக அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இதற்கேற்ப மாணவ, மாணவிகள் தயாராக வேண்டியது அவசியமாகிறது.
மோசமான வானிலை காரணமாக அமைச்சர் எ.வ.வேலு சென்ற விமானம் மதுரை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக செல்ல வேண்டிய நகரில் வானிலை சரியில்லாததால் வானில் சில நிமிடங்கள் வட்டமடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் நிலங்களை மீட்பதற்கு மேலும் 2 மாதம் அவகாசம் அளித்தும், கோவில் நிலங்களை மீட்கவிடாமல் தடுக்கும் அதிகாரம் மிக்கவர்களின் பட்டியலை தாக்கல் செய்ய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சாலையோரத்தில் அடிபட்டு கிடக்கும் விலங்குகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் சாலை ஓரங்களில் அனாதையாக அடிபட்டு கிடக்கும் விலங்குகளை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.