இஸ்ரோவின் GSLV Mark 3 (எல்.வி.எம்-3) ராக்கெட், 36 தொலை தொடர்பு செயற்கைக் கோள்களுடன் இன்று காலை 9 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இது இஸ்ரோவின் 6ஆவது GSLV Mark 3 வகை விண்கலம் என தெரிவிக்கப்படுகிறது.நாட்டின் வளர்ச்சிக்காகவும் தொலைத்தொடர்புக்காகவும் செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டு வந்த நிலையில், உலக அளவில் வளர்ந்த நாடுகள், வணிகப் பயன்பாட்டிற்கு செயற்கை கோள்களை செலுத்தி வருகிறது. அந்த வரிசையில் க
சிறுபான்மையினர் நலத்திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதில் 14 சதவிகிதம் மட்டுமே செலவினம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரான சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.சிறுபான்மையினர் நலத்திட்ட நிதி பற்றி கேள்வி எழுப்பிய எம்பி சு.வெங்கடேசன்!நாடாளுமன்ற உறுப்பினரான சு. வெங்கடேசன் எம். பி (சி.பி.எம்) சிறுபான்மை மக்கள் நலனு
பிரபல போஜ்புரி நடிகை அகன்ஷா துபே உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.அகன்ஷா துபே 2019 ஆம் ஆண்டில் மேரி ஜங் மேரா ஃபைஸ்லா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்தப் படத்தில் அவர் ஒரு சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார். இதற்குப் பிறகு, நடிகை முஜ்சே ஷாதி கரோகி மற்றும் சாஜன் போன்ற படங்களில் தனது அற்புதமான நடிப்புத் திறனைக் காட்டி இருந்தார்..
சாரசு கொக்கை பராமரித்து வந்த ஆரிப் கான் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி பகுதியைச் சேர்ந்தவர் ஆரிப் கான் குர்ஜர். சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் தனது தோட்டத்தில் கொக்கு வகையை சார்ந்த சாரசு கொக்கு என்றழைக்கப்படும் பறவை ஒன்று அடிபட்ட நிலையில் இருந்ததை அவர் பார்த்துள்ளார். அதனை மீட்ட அவர், உடல்நலன் தேர்ச்சி பெறவும் உதவியுள்ளார்.
வாஷிங்டனில் இந்திய பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ‘வாரிஸ் பஞ்சாப் டி அமைப்பின் தலைவராக அம்ரித்பால் சிங் பொறுப்பேற்றது முதல் பஞ்சாப் மாநிலத்தில் காலிஸ்தான் பிரிவினைவாதக் கொள்கைகள் தலைதூக்கின. இதையடுத்து அவரை கைது செய்ய பஞ்சாப் காவல்துறை முனைப்பு காட்டிவருகிறது. அதைக் கண்டித்து அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம்
அவதூறு வழக்கில் ஈராண்டு சிறை தண்டனை அறிவிக்கப்பட்டதால் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்காக கர்நாடகாவின் கோலார் பகுதியில் நடந்த பரப்புரையின் போது “ ‘நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பொதுவான பெயரே இருக்கிறது” என ராகுல் காந்தி பேசியிர
ராகுல் காந்தியை பதவி நீக்கம் செய்தது ஜனநாயக படுகொலை என தெரிவித்து புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து திமுக மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இன்றைய அலுவலில், ராகுல்காந்தியின் எம்.பி பதவியை தகுதி நீக்கம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து
ஹத்ராஸ் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க உத்தரவிட்ட அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிரான உத்தரபிரதேச அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில், தலித் சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிலையில் இது தொடர்பாக தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்த அலகாபாத் உயர்நீதிமன்றம், ‘பாதி
பில்கிஸ் பானோ என்ற கர்ப்பிணியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததோடு, 3 வயது குழந்தை உட்பட 7 பேரை கொடூரமாக கொன்ற வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு சிறை தண்டனை பெற்ற 11 பேரும் கடந்த ஆண்டு ‘முன்கூட்டியே’ விடுதலை செய்யப்பட்டனர். அதில் ஒருவரான சைலேஷ் சிமன்லால் குஜராத்தில் நடந்த அரசு விழாவில் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏக்களுக்கு நிகராக மேடையில் அமர்ந்திருந்த நிகழ்வு தற்போது பெரும் சர்ச்சையை
நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடரில் இணைவதாக ஆஸ்திரேலிய அணியின் ஸ்டாண்ட் இன் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில், கொல்கத்தா அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு, அந்த அணி ரசிகர்கள் ட்வீட் செய்து ட்ரெண்டாக்கி வந்தனர். இந்நிலையில், அந்த அணியின் கேப்டனாக நிதிஷ் ராணா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.இந்தியாவில் முதல்முறையாக மகளிர் ப்ரீமியர் லீக் கடந்த 4-ம் தேதி துவங்கி நேற்
லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் கர்நாடக பாஜக எம்.எல்.ஏ. விருப்பக்ஷப்பா கைது செய்யப்பட்டுள்ளார். விருப்பக்ஷப்பா முன் ஜாமீன் மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.என்ன வழக்கு? யார் விசாரிக்கிறார்கள்?கர்நாடக மாநிலம் தாவங்கரே மாவட்டத்தில் உள்ள சன்னகிரி தொகுதி எம்எல்ஏவாக இருப்ப
கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா வீடு மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஜன மனஷா மையத்தின் பரிந்துரையை எதிர்த்து ஷிகாரிபுரா தாலுகா பஞ்சாரா சமாஜ் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டம் தீவிரமடைந்ததால் போராட்டக்காரர்கள் எடியூரப்பா வீடு மீது கற்களை வீச
அதானி குழுமத்தில் செய்துள்ள முதலீடுகளால் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்பதால் PF சேமிப்பிற்கான வட்டி குறையுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.இந்தியாவில் உள்ள 27.73 கோடி ஊழியர்களின் பி.எப் சேமிப்பு பணத்தை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) நிர்வகித்து வருகிறது. அந்த தொகையில் ரூ.1.57 லட்சம் கோடி அளவுக்கு ஷேர் மார்க்கெட் (ETF ) வழியாக முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. மேலும், நடப்பு நிதியாண்டி
பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக கலாஷேத்ரா நிறுவனத்தின் நடவடிக்கைகள் ஏமாற்றமளிப்பதாகவும், புகாரின் முக்கியத்துவம் கருதாமல் நிர்வாகம் நடந்துகொண்டுள்ளதாகவும், அந்நிறுவனத்தின் சேர்மன் ராமதுரைக்கு பிரபல கர்நாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணா கடிதம் எழுதியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கலாஷேத்ரா அறக்கட்டளையின் மூத்த ஆசிரியர் ஒருவர் மீது அங்கு படிக்கும் மாணவர்கள் சிலர் பாலியல் குற்றச்சாட்டை வைத்துள்ளது
புதுச்சேரியில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கூலி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.புதுச்சேரி வில்லியனூர் பொறையூரை சேர்ந்த பழனி என்பவரின் மகன் பிரதீஷ் (23). இவர் அப்பகுதியில் பழக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார், அப்போது பேருந்தில் பள்ளிக்கு செல்லும் 17 வயது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு அவரை காதலித்து கல்யாணம்
அரசு நிர்வாகத்துறைகளான மாநகராட்சி, நகராட்சிகள் விதிக்கும் வரிகளை கட்ட முடியாமல் போனால் பலகட்ட எச்சரிக்கைகளுக்கு பிறகு பைக், டிராக்டர் போன்றவையோ, சமயங்களில் வீட்டையே ஜப்தி செய்வதும் வாடிக்கை. ஆனால் குடிநீருக்கான வரியை கட்டாமல் இருந்தவரின் எருமை மாட்டை நகராட்சி நிர்வாகத்தினர் பறிமுதல் செய்த நிகழ்வு மத்திய பிரதேசத்தில் நடந்திருக்கிறது.குவாலியரில் உள்ள தலியான்வாலா பகுதியைச் சேர்ந்த பால்கிஷன் பால்
கடந்த 24 மணி நேரத்தில் 1,573 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்தியாவில் தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் , நேற்று முன்தினம் 1,805 ஆக இருந்த ஒரு நாள் பாதிப்பு , கடந்த 24 மணி நேரத்தில் 1,573 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது. ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு 10,300 ல் இருந்து 10,981 ஆக உயர்ந்தது.கடந்த
அமெரிக்க கடற்படைக் கப்பல் மேத்யூ பெர்ரி இந்தியாவில் சென்னைக்கு அருகே பழுதுபார்க்கப்பட்ட பின்னர் இந்தோ-பசிபிக் கடல் பகுதிக்குத் திரும்பியது.அமெரிக்க கடற்படையின் லூயிஸ் மற்றும் கிளார்க் வகை உலர் சரக்குக் கப்பலான யுஎஸ்என்எஸ் மேத்யூ பெர்ரி, சென்னைக்கு அருகில் காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள எல் அண்டு டி ஷிப்யார்டு என்று அழைக்கப்படும் லார்சன் அண்ட் டூப்ரோ லிமிடெட் நிறுவனத்தின் கப்பல் பணிமனையில் மார்ச் 11
ஏப்ரல் முதல் அத்தியாவசிய மருந்துகளின் விலை 12 சதவீதத்துக்கு மேல் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.மொத்த விற்பனை விலைக் குறியீட்டின் (WPI) அடிப்படையில் மருந்துகளின் விலைகளை ஒவ்வொரு ஆண்டும் 10 சதவிகிதம் வரை உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்கியிருக்கிறது இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் . அந்த வகையில் வலி நிவாரணிகள், தொற்று எதிர்ப்பு மருந்துகள், இதய நோய் மருந்துகள், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்
தொழில்நுட்ப வசதிகள் எந்த அளவுக்கு நமக்கு உதவியாக இருக்கும் என்பது இக்கட்டான சூழலில்தான் தெரிந்துகொள்ள முடியும் என்பது பெங்களூருவில் கணவன் ஒருவர் மனைவியால் நேர்ந்த சம்பவத்தின் மூலம் உணர்ந்திருக்கிறார்.வாழ்க்கையில் முக்கியமான முடிவை எடுக்க காரில் பொருத்தப்பட்டிருந்த ஜி.பி.எஸ். கருவி அந்த நபருக்கு உதவியிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? அப்படி என்ன நடந்தது என்பதை காணலாம்.இல்லறத்தை மீறிய உறவுகள் பலவும
ஆங்கிலேயரால் இந்தியாவிற்கு ரயில் தடங்கள் அமைந்தாலும் இந்திய அரசாங்கமானது அதை விரிவு படுத்தி மக்களுக்கு பயணம் சுலபமாகும் வரையில் பல்வேறு விதங்களில் வழி தடங்களை அமைத்து பயணத்தை எளிமை படுத்தி வருகிறது. அதன் படி போக்குவரத்து நெரிசலை சரி செய்ய முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் பயன்பாட்டிற்கு வந்துக்கொண்டிருக்கும் இந்நேரத்தில், ஜம்மு காஷ்மீரின் தலைநகரான ஸ்ரீநகரில் உலகின் மிக உயரமான ரயில்வே பாலத்தை இந்திய
பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான காலக்கெடு வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான காலக்கெடு மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைய இருந்தது. இந்நிலையில், பொதுமக்களின் வசதிக்காக இந்த காலக்கெடுவை மேலும் 3 மாதங்கள் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை பான்
போலீசாரால் தேடப்பட்டு வரும் பஞ்சாப் அமிர்தசரஸைச் சேர்ந்த அம்ரித்பால் சிங், தற்போது தலைப்பாகை இல்லாமல் வெளியேறும் புதிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.பஞ்சாப் அமிர்தசரஸைச் சேர்ந்த அம்ரித்பால் சிங், காலிஸ்தான் ஆதரவு அமைப்பான வாரிஸ் பஞ்சாப் தே தலைவராக உள்ளார். சீக்கிய மதகுரு என்று தன்னைத்தானே அறிவித்துக்கொண்டார். கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி, பஞ்சாப்பில் உள்ள அஜ்னாலா காவல்நிலையத்தை முற்றுகையிட்ட வார
கர்நாடகாவில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. அங்கு, தேர்தல் களம் சூடுபிடிப்பதற்கு முன்பாகவே இடஒதுக்கீட்டு விவகாரங்கள் சூடுபிடித்துள்ளன. தற்போது, அங்கு பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், அதைத் தக்கவைக்க பாஜக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன் ஒரு பகுதியாக, கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜ
பிரதமர் நரேந்திர மோடி படத்தைக் கிழித்த காங்கிரஸ் எம்.எல்.ஏவுக்கு ரூ.99 அபராதம் விதித்து குஜராத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.குஜராத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வேளாண் கல்லூரி மாணவர் போராட்டத்தின்போது துணைவேந்தர் அறைக்குள் நுழைந்து, அவரது மேசையில் இருந்த பிரதமர் மோடியின் புகைப்படத்தை கிழித்தெறிந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ அனந்த் படேல் என்பவருக்கு ரூ.99 அபராதம் விதித்துள்ளது குஜராத் நீதிமன்றம். இந்த வழக்கில்
கர்நாடகாவில் தேர்தல் பேரணியின்போது காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், மக்களிடம் பணத்தை அள்ளி வீசியதாக வீடியா காட்சி வெளியாகி உள்ளது.கர்நாடக மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டுள்ள நிலையில், அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரமும் சூடுபிடித்துள்ளது. ஆளும் பா.ஜ.க. ஆட்சியை தக் வைக்க வியூகங்களை வகுத்து செயல்பட்டு வருகிறது. காங்கி
கேரளாவில் பெண்கள் போல் வேடமிட்டு ஆண்கள் பங்கேற்கும் கோவில் திருவிழாவில் பல்லாயிரக் கணக்கானோர் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கோட்டங்குளங்கர ஸ்ரீதேவி ஆலயத்தில் பல தலைமுறைகளாக சமைய விளக்கு என்னும் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்தக் கோவிலில் முதலில் பெண்கள் தான் வழிபாடு செய்து வந்துள்ளனர். பின்பு அம்மனின் சக்தியை தெரிந்து கொண்டதால் ஆண்களும் - பெண்கள் போல
மின்சார கட்டணத்தை கட்டவில்லை என்பதால் தலித் மூதாட்டி பெண்ணை அரை நிர்வாணமாக பொதுவெளியில் மின்வாரிய ஊழியர்கள் ஓடச் செய்திருக்கிறார்கள். மத்திய பிரதேசத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் கடும் கண்டனத்தை பெற்றிருக்கிறது.மத்திய பிரதேசத்தின் கிழக்கு மாகாணத்தில் உள்ள சாகர் மாவத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. அதன்படி 19 ஆயிரம் ரூபாய்க்கான மின் கட்டணத்தை கட்டாத
சனாதன தர்மத்தை சீர்குலைக்கும் விதமாக நடந்துகொண்டதாக நடிகை டாப்சி பன்னு மீது மும்பையில் பாஜக சட்டமன்ற உறுப்பினரின் மகன் புகார் கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.மும்பையில் கடந்த மார்ச் 12ம் தேதியன்று பிரபல காஸ்மெட்டிக் நிறுவனமான லாக்மியின் ஃபேஷன் வீக் 2023 என்ற பெயரிலான ராம்ப் வாக் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ், தெலுங்கு, இந்தி என பல நடித்து வரும் நடிகை டாப்சி பன்னு சிவப்பு நிற கவு
“அதிமுகவில் ஒரு லட்சம் துரோகிகள் இருப்பதாக அவர்களே ஒத்துக் கொள்கின்றனர்” என அமமுக பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்தார்.திருச்சியில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பதவி வெறியாலும், ஒரு சிலரின் சுயநலத்தாலும் அதிமுக பலவீனமாகி இருக்கிறது. அதிமுகவில் ஒரு லட்சம் துரோகிகள் இருப்பதாக அவர்களே ஒத்துக் கொள்கின்றனர். அமமுக பொற