மகாராஷ்டிராவில் ஒரே கட்டமாக நடைபெற்று வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நண்பகல் 1 மணி நிலவரப்படி 32.18% வாக்குகளும், ஜார்க்கண்ட்டில் 47.92% வாக்குகளும் பதிவாகி உள்ளன.
ஆசியான் மாநாட்டில் பங்கேற்க லாவோஸ் சென்றுள்ள பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று சீன வெளியுறவு அமைச்சருடன் டோங் ஜுனுடன் பிரதிநிதிகள் அளவிலான பேச்சுவார்த்தை நடத்தினார்.
கடந்த 2006-ம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ஏர்செல் நிறுவனத்தில் மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் ரூ.3,500 கோடி முதலீடு செய்ய அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதி கோரியது.
மணிப்பூரில் அமலில் இருக்கும் இன்னர் லைன் பெர்மிட் (ஐஎல்பி) முறைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அம்மாநில அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் 8 வார கால அவகாசம் அளித்துள்ளது.
காற்று மாசின் அளவு அபாய கட்டத்தை தாண்டியுள்ளதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அலுவலகங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்களில் 50 சதவீதம் பேர் வீட்டில் இருந்தே பணிபுரியும்படி டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
எக்ஸ் தளத்தில் சர்ச்சைக்குரிய பதிவு தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்குமாறு கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் மணிப்பூர் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
தன்னுடைய புகைப்படங்களை மனைவியும், காங்கிரஸ் எம்எல்ஏவுமான அனுபா முஞ்சாரே பயன்படுத்துவதற்கு மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பகுஜன்சமாஜ் கட்சித் தலைவர் கங்கர் முஞ்சாரே ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.
வளர்ச்சி பணிகளுக்கு மக்கள் வாக்களிப்பர் என்பதால், மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெறும் என மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் ஒரே கட்டமாக நடைபெற்று வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மாலை 3 மணி நிலவரப்படி 58.22% வாக்குகளும், ஜார்க்கண்ட் இரண்டாம் கட்ட தேர்தலில் 67.59% வாக்குகளும் பதிவாகி உள்ளன. வாக்குப்பதிவுக்கான நேரம் முடிவடைந்துவிட்டதால், வாக்குகளை பதிவு செய்வது தற்போது முடிவடைந்துள்ளது.
பல்வேறு முறைகேடுகள் நடப்பது ஊர்ஜிதம் செய்யப்பட்டதால், தமிழகம், புதுவை உட்பட மேலும் பல்வேறு மாநில சுற்றுலா துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் முறையை ரத்து செய்வதாக திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் இன்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பெங்களூருவை சேர்ந்த பாஜக எம்எல்ஏ முனிரத்னா நாயுடு மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் அவருக்கு உடந்தை யாக இருந்ததாக போலீஸ் இன்ஸ்பெக்டரை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கழுதைப் பண்ணை வைத்தால் பெரும்லாபம் அடையலாம் என ஏமாற்றி ஹைதராபாத்தில் சுமார் ரூ.100 கோடி வரை மோசடி செய்ததாக சென்னையை சேர்ந்த போலி கழுதைப் பண்ணை நிர்வாகிகள் மீது புகார் எழுந்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் ஜான்சியில் உள்ள மகாராணி லட்சுமிபாய் கல்லூரியின் பிறந்த குழந்தைகளுக்கான அவசர சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். 16 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உத்தரப்பிரதேசத்தின் ஜான்சியில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடியும், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத்தும் நிவாரண உதவிகளை அறிவித்துள்ளனர்.
ஒரு காலத்தில் பயங்கரவாதம் இந்திய மக்களை பாதுகாப்பற்றதாக உணர வைத்தது, ஆனால் இன்று பயங்கரவாதிகள் பாதுகாப்பற்ற உணர்வுக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தூத்துக்குடி தாமிர ஆலைக்கு விதிக்கப்பட்ட தடையை மறு ஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவின் பணக்கார மாநில சட்டப்பேரவைத் தேர்தல், அதன் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. நவம்பர் 20-ம் தேதியன்று அடுத்து தங்களை யார் ஆள வேண்டும் என மகாராஷ்டிரா மக்கள் தீர்மானிக்க இருக்கிறார்கள். ஆட்சியைத் தக்கவைக்க மகாயுதி கூட்டணியும், அதனைத் தட்டிப் பறிக்க மகா விகாஸ் அகாடி கூட்டணியும் தீவிரமாக களமாடி வருகின்றன.
மணிப்பூரில் கடந்த சில நாட்களாக பாதுகாப்புச் சூழல் பலவீனமாக இருப்பதால், அமைதியை நிலைநாட்ட தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி அங்குள்ள பாதுகாப்பு படையினருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தேர்தல் நடத்தை விதிமீறல் புகார்கள் தொடர்பாக பாஜக, காங்கிரஸ் கட்சிகள் திங்கள்கிழமை மதியத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.