திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான கூட்டம் வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு, கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட கொலைகளுக்கும் சட்டம் ஒழுங்குக்கும் சம்பந்தமில்லை. இதனை எடப்பாடி பழனிசாமி புரிந்துக் கொள்ள வேண்டும் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார் .
இளம் பெண் மீது சரமாரி தாக்குதல், தமிழ்நாட்டுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட், ஆசிரியை ரமணியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி என இன்றைய முக்கிய டாப் 10 செய்திகளை பார்க்கலாம்.
தமிழ்நாடு செய்திகள் November 21, 2024 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
கடை வாடகை மீதான ஜிஎஸ்டி வரியை முறையாக மறு ஆய்வு செய்து வணிகர்களோடு கலந்து பேசி அதன் பின்னர் அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தி உள்ளது.
ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் “வாழ வைக்கும் வாழை” எனும் பிரம்மாண்ட பயிற்சி மற்றும் கருத்தரங்கு திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் உள்ள ஸ்காட் கல்லூரியில் நவ. 24-ம் தேதி நடைபெற உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியின் தற்காலிக ஆசிரியை ரமணி படுகொலை செய்யப்பட்டதற்கு இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பிலும் வேலூர் மாவட்ட அனைத்து வகை ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பிலும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கதரையும் கைகலப்பையும் என்றைக்குமே பிரிக்கமுடியாது என்பதை நீண்ட இடைவெளிக்குப் பிறகு கோவை காங்கிரஸார் பொதுவெளியில் மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள். கோவை காங்கிரஸானது கோவை மாநகர், கோவை வடக்கு, கோவை தெற்கு என மூன்று மாவட்டங்களாக உள்ளது.
அத்தை கனிமொழியுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் என்னதான் விட்டுக் கொடுத்துப் போனாலும் இவர்கள் இருவரையும் முன்னிறுத்தி அவ்வப்போது எழும் அரசியல் சர்ச்சைகள் மட்டும் ஓய்ந்தபாடில்லை.
வேலூரில் 13 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை துன்புறுத்தலுக்கு ஆளான விவகாரத்தில் மூன்று பேர் கைதாகி உள்ளனர். இந்நிலையில், அது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது:
கள்ளக்குறிச்சியில், கள்ளச் சாராய உயிரிழப்புகள் வழக்கின் தீர்ப்பின் மூலம் திறமையற்ற ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது என்பதும், இதுதான் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு சீரழிவுக்குக் காரணம் என்பதும் தெளிவாகி உள்ளது என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
Today Gold Rate : சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய ஏற்ற இறக்கங்களை அடைந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
Tamil top 10 News: மருத்துவ மாணவர்களுக்கு புதிய சலுகை, 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், தங்கம் விலை உயர்வு உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகளை டாப் 10 தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.
ஆன்லைன் புதுப்பிப்புகளுடன் இன்றைய தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகளைக் கண்டறியவும். தமிழ்நாட்டின் அரசியல், நிகழ்வுகள் மற்றும் முக்கியச் செய்திகள் மற்றும் தமிழ்நாட்டிலிருந்து வரும் பல நிகழ்வுகளைப் பற்றிய இன்றைய செய்திகளை HT தமிழில் படித்து தெரிந்துகொள்ளுங்கள். Stay informed with Latest Tamil Nadu toda
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் பிரபல ரவுடி சப்போ செந்திலின் கூட்டாளிகள் இருவர், திருந்தி வாழ வாய்ப்பு கேட்டு காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்.
இக்கோயில் அருகில் உள்ள வீடு ஒன்றில் விலங்குகள் நல ஆர்வலர், நாய்களுக்கு உணவளித்து வந்துள்ளார். இந்த நாய்கள், அசைவ உணவை உண்டுவிட்டு, எலும்புகளை விநாயகர் கோயிலில் போட்டு அசுத்தம் செய்வதாக புகார் எழுந்தது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஈகுவார்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கோங்கல்மேடு பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக 46 மலைக்குறவர் இன குடும்பங்கள் வசித்து வருகின்றன.
தமிழக குற்ற வழக்கு தொடர்(வு)த்துறை இயக்குநராக உயர் நீதிமன்ற அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஜி. கிருஷ்ணராஜாவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மருத்துவமனை இயக்குநர் ஆர்.மணி தலைமையில் நடந்த பேரணியில் நரம்பியல் சிகிச்சை பிரிவு துறை தலைவர் ஆர்.எம்.பூபதி உட்பட மருத்துவர்கள், செவிலியர் மாணவிகள் பங்கேற்றனர். பின்னர், விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பல்லுயிர்வாழிட பாரம்பரிய தலத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு உரிமம் அளிப்பதா? என்றும் தமிழ்நாடு அரசு இதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
நீதிக்கட்சியின் வாரிசுகளாய், நமது உரிமைகளை மீட்டெடுத்து நிலைநாட்டும் பயணத்தில் தொடர்ந்து உழைப்பை செலுத்துவோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சிறந்த பங்களிப்பை அளிக்கிறது. குறிப்பாக, நம்பகமான, திறமையான நகர்ப்புற போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையிலும், சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைப்பதை நோக்கமாக கொண்டும் செயல்படுகிறது.
தமிழியக்கம், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக தமிழியல் மற்றும் பண்பாட்டுப்புலம் சார்பில் சிந்து சமவெளி ஆய்வு நூற்றாண்டு விழா கருத்தரங்கம் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள திறந்தநிலை பல்கலைக்கழக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.
சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 12 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக விமான சேவைகள் திடீர் திடீரென ரத்து செய்யப்பட்டு வருகின்றன.
கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று தமிழக சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறினார்.
கோயம்பேடு சந்தை செயல்படாத நேரத்திலும் வாயில் கதவை திறந்துவைக்க வலியுறுத்தி வியாபாரிகள் நேற்று முன்தினம் இரவு சந்தை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோயம்பேடு சந்தையில் மலர், காய், கனி அங்காடிகள் தனித்தனி பிரிவாக செயல்பட்டு வருகின்றன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று பிற்பகலில் ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக அம்மாவட்டத்தில் பல இடங்களில் அதிகனமழை கொட்டித்தீர்த்தது. அதிகபட்சமாக ராமேசுவரத்தில் 41 செமீ மழை பதிவாகியுள்ளது.