“எதிலும் உறுதியில்லா உதிரிகளா நமது எதிரிகள்? ஆதாரம் ஏதுமின்றி இவர்கள் பரப்பும் அவதூறுகளா நம்மை அசைக்கும் ஆயுதங்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ள திருமாவளவன், “ஆதாரமில்லாத அவதூறுகளைப் புறம்தள்ளுவோம்” என்று வி.சி.க-வினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணையை வரவேற்ற இ.பி.எஸ் தன் மீதான புகாரில் சி.பி.ஐ விசாரணையை எதிர்ப்பது ஏன்? என ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பினார்.
குறுக்கு வழியில் போலியான சான்று பெற்று தேர்வு எழுதி வெற்றி பெறுவது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது ஏழை மாணவர்களின் கனவை புதைக்கும் செயலாகும் என்று
நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
‘கலைஞர் 100 வினாடி வினா’ நிகழ்ச்சிக்கு வருகை தருமாறு தி.மு.க தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை அவரது முகாம் அலுவலகத்தில் தி.மு.க எம்.பி கனிமொழி கருணாநிதி நேரில் சந்தித்து அழைப்பிதழை வழங்கினார்.
முந்தைய அ.தி.மு.க ஆட்சியின்போது பணம் பெற்றுக்கொண்டு உரிய கல்வித் தகுதி இல்லாத 40 பேரை பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்களில் அமர்த்தியதாக எழுந்த புகாரில் துணைவேந்தர் திருவள்ளுவன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆசிரியை கொலை நடந்த மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியை ஆய்வு செய்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை விடப்படுவதாகவும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் அளித்த பிறகே பள்ளி திறக்கப்படும் என்று கூறினார்.
தேனி மாவட்டம், பெரியகுளம் வருவாய் கோட்டத்தில் உள்ள 39 மண், கல் குவாரிகளில் கனிமவளக் கொள்ளையில் ஈடுபட்ட 58 பேருக்கு அபராதத்துடன் ரூ.138.4 கோடி செலுத்த பெரியகுளம் சார் ஆட்சியர் ரஜத் பீடன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு: கோவை மாவட்டத்தில் கனமழை பெய்ததால், செங்குளம் நிறைந்து தண்ணீர் ஊற்றெடுத்து குடியிருப்பு பகுதியை சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
"தி.மு.க. ஆட்சியில் கொலை என்பது சர்வசாதாரணம் என்ற அவல நிலை வரும் அளவிற்கு நிர்வாகத் திறனற்ற தி.மு.க. அரசு சட்டம் ஒழுங்கைக் காக்கத் தவறி உள்ளது." என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
தமிழ்நாடு: மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் இனக்கலவரம் வெடித்துள்ள நிலையில், நீதிபதி டி.கிருஷ்ணகுமார் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ளார்.
தமிழ்நாடு: ஒசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞரை அவருடைய நண்பனே சரமாரியாக அரிவாளல் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த வழக்கறிஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குழந்தை என்ன சாப்பிட்டாலும் உடல் எடை கூடவில்லை என கவலைப்பட இனி தேவையில்லை. உணவில் சற்று கவனம் செலுத்தினாலே போதும். குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் கூடிய உணவை தானாகவே விரும்பி சாப்பிடும்.
தமிழ்நாடு: பராமரிப்பு பணிகளுக்காக சென்னை கடற்கரை இரயில் நிலையத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் இரயில்கள் சிங்கப்பெருமாள் கோயில் வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு: தமிழகத்தில் இன்றைய தினம் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ள காரணத்திற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளதற்கு, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு: தஞ்சாவூரில், வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்தவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.