முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் மீதான சொத்து குவிப்பு வழக்கு கடந்த 2012-ம் ஆண்டு கைவிடப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
“சட்டவிரோத குவாரிகள் தொடர்பாக புகார் வந்தால் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லாவிட்டால் தங்களது பணியை இழக்க நேரிடும்” என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை காவல்துறைக்கு எச்சரிக்கை தெரிவித்துள்ளது.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அரசு விழாக்களில் உதயநிதி தமிழ் கலாசார உடை அணிய வேண்டும் என உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில், “'இனி இன்னும் கடுமையாக நம்மை விமர்சிப்பார்கள்; அண்ணா தந்த ஆயுதத்தை கையில் எடுப்போம்” என்று விஜய் தனது தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு: தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, 20 சதவீதம் போனஸ் வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு: ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டியது ரூ.3000 கோடி, ஒதுக்கியதோ ரூ.372 கோடி: யானைப்பசிக்கு சோளப்பொறி போடுவதால் என்ன பயன்? என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
செம்மஞ்சேரியில் நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, “அமெரிக்கா சென்று சிகிச்சை எடுத்திருந்தால் ஜெயலலிதா உயிரோடு இருந்திருப்பார்” என்று உருக்கமாகப் பேசியிருப்பது கவனத்தைப் பெற்றுள்ளது.
தமிழ்நாடு: தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்கப்படுமா எனவும், அதிமுக குறித்து விஜய் விமர்சிக்காதது ஏன் எனவும் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு வரும் அக்டோபர் 31-ஆம் தேதியன்று இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தீபாவளி மற்றும் அதற்கு மறுதினங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் தற்காலிக பேருந்து நிலையத்தில், தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் சோனா மீனா திரையரங்கு எதிரே தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
தமிழ்நாடு; "பாசிச எதிர்ப்பு என்பது தமிழ்நாட்டை அல்லது இந்தியாவைப் பொறுத்தவரையில் பாஜக எதிர்ப்பு தான். அவரோ "அவங்க பாசிசம் என்றால் நீங்க பாயசமா " என்று பாசிச எதிர்ப்பாளர்களை நையாண்டி செய்துள்ளார்." என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
விஜய்யின் பேச்சு, தனக்கு பிடித்திருக்கிறது என்று காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் பதிவிட்ட நிலையில், ஆட்சியில் பங்கு வேண்டும் என்று காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் இரா சரவணன் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாடு: 'அவர்கள் நம்மிடையே இல்லை என்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. ஈடு செய்யவே இயலாத, தாங்கொணா இத்துயரில் இருந்து வெளிவரவே இயலாமல் மனம் தவிக்கிறது.' என்று த.வெ.க. தலைவர் விஜய் கூறியுள்ளார்
தமிழ்நாடு: அம்பேத்கர் எழுத்துகளை படிக்காவிட்டால், அவரை சாரமற்ற வெற்றுக் குறியீடாக பயன்படுத்துவதில் போய் முடிந்துவிடுமென தவெக தலைவர் விஜய்க்கு, விசிக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் அறிவுறுத்தியுள்ளார்.
1000 கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். காலியிடங்களின் எண்ணிக்கையை 8 ஆயிரமாக அதிகரித்து, ஒத்திவைக்கப்பட்ட போட்டித்தேர்வுகளை உடனடியாக நடத்தி நிரந்தர உதவிப் பேராசிரியர்களை நியமிக்க வேண்டும் – பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ்
தமிழ்த் தாய் வாழ்த்து விவகாரம் தொடர்பாக, அண்ணா பல்கலைக்கழகத்தில் நடபெற்ற பட்டமளிப்பு விழாவையும் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் புறக்கணித்தார்.