கர்நாடகத் தேர்தலின் வெற்றியைத் தொடர்ந்து தெலங்கானா மற்றும் மற்ற மாநிலங்களின் தேர்தல்களிலும் காங்கிரஸ் பாஜகவை வீழ்த்தும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மட்டுமின்றி மக்களும் பாஜகவின் வெறுப்பு கலந்த சித்தாந்தத்தை வெறுத்து அவர்களை தோற்கடிக்க தயாராகி விட்டதாகவும் அவர் தெரிவித்தார். வாஷிங்டன் மற்றும் சான் பிரான்ஸிஸ்கோ பயணத்தை முடித்துக் கொண்டு நியூயார்க் வந்தடைந்த அவர் இதனை தெரிவித்தார்.
இதையும் படிக்க: கிரிக்கெட் வீரர்களின் நேரத்தில் சர்வதேச கிரிக்கெட்டின் ஆதிக்கத்தை மாற்றிய ஐபிஎல்: பாட் கம்மின்ஸ்
இது குறித்து அவர் பேசியதாவது: நாங்கள் கர்நாடகத்தில் பாஜகவை அழிக்க முடியும் என காட்டியுள்ளோம். நாங்கள் பாஜகவை தோற்கடிக்கவில்லை, அழித்துள்ளோம். கர்நாடகத்தில் அவர்களை நாங்கள் நீக்கிவிட்டோம். பாஜகவிடம் ஒட்டுமொத்த ஊடகமும் இருந்தது. எங்களிடம் இருந்த பணத்தைக் காட்டிலும் பாஜவிடம் 10 மடங்கு அதிகமாக இருந்தது. அவர்களிடம் அரசாங்கமும் இருந்தது. அவர்களிடம் விசாரணை அமைப்புகளும் இருந்தன. அவர்களிடம் எல்லாமும் இருந்தன. இருந்தும் அவர்களை நாங்கள் அழித்துவிட்டோம். நான் உங்களுக்கு ஒன்றை தெரியப்படுத்த விரும்புகிறேன். அடுத்து தெலங்கானா தேர்தலில் அவர்களை நாங்கள் அழிக்க உள்ளோம். இந்த தேர்தலுக்குப் பிறகு தெலங்கானாவில் பாஜகவை பார்ப்பது மிகவும் கடினம்.
தெலங்கானா மட்டுமின்றி அடுத்தடுத்து நடைபெறவுள்ள ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத் தேர்தல்களிலும் பாஜகவை வீழ்த்துவோம். கர்நாடகத்தின் முடிவுகளைப் போலவே இந்த மாநிலங்களின் முடிவுகளும் இருக்கும். காங்கிரஸ் மட்டும் பாஜகவை தோற்கடிக்கப் போவதில்லை. இந்திய மக்கள் , மத்தியப் பிரதேச மக்கள், தெலங்கானா மக்கள், ராஜஸ்தான் மக்கள் மற்றும் சத்தீஸ்கர் மக்கள் பாஜகவினை தோற்கடிக்கப் போகிறார்கள். பாஜகவின் வெறுப்புணர்வு மிகுந்த கொள்கைகளை மக்கள் புரிந்து கொண்டனர்.
இதையும் படிக்க: எஸ்.ஜே.சூர்யா படத்தின் டிரைலரை வெளியிட்ட விஜய் பட இயக்குநர்!
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜவினை வீழ்த்துவோம். இது சித்தாந்தங்களுக்கு இடையிலான மோதல். ஒரு புறம் பாஜவின் வெறுப்புணர்வு நிரம்பிய சித்தாந்தமும், மறுபுறம் காங்கிரஸின் அன்பு நிரம்பிய சித்தாந்தமும் உள்ளன என்றார்.
ஒடிசா மாநிலம் பாலசோரில் 3 ரயில்கள் விபத்துக்குள்ளான இடத்தில் நடைபெற்றுவரும் சீரமைப்புப் பணிகள் குறித்து மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுடன் தொலைப்பேசி வாயிலாக தொடர்புகொண்டு பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார்.
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இன்று காலை முதலே விபத்து நடந்த பாலசோர் பகுதியில் நேரில் முகாமிட்டு மறுசீரமைப்புப் பணிகளை பார்வையிட்டு வருகிறார்.
மேலும், விபத்தில் படுகாயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து அடிப்படை தேவைகளை கேட்டறிந்தார்.
ஒடிசாவின் பாலசோா் மாவட்டம், பஹாநகா் பஜாா் ரயில் நிலையம் அருகே ஜூன் 2ஆம் தேதி இரவு 6.50 மணியளவில் மூன்று ரயில்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சிக்கியவர்களை தேசிய பேரிடர் மீட்புப் படையினரும், விமானப் படையினரும் மீட்டனர். அவர்களுக்கு உள்ளூர் மக்களும் தன்னார்வலர்களும் உதவினர்.
இதுவரை 290 பேர் உயிரிழந்துள்ளனர். 800க்கும் அதிகமானோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், பாலசோர் பகுதியில் காலை முதலே சீரமைப்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதனை நேரில் பார்வையிட்டு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்,
ரயில் விபத்துக்கான காரணம் என்ன என்பது கண்டறியப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி விபத்து நடைபெற்ற இடத்தை நேற்று பார்வையிட்டார். சீரமைப்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
சீரமைப்புப் பணிகளை இன்று முழுவதுமாக முடிப்போம். ரயில் விபத்தில் சிக்கிய உடல்கள் அனைத்தும் இங்கிருந்து மருத்துவமனைக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. சீரமைப்புப் பணிகளை முழுமையாக முடித்து வரும் புதன்கிழமைக்குள் ரயில் சேவையை இந்த வழித்தடத்தில் மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.
இதனிடையே, சீரமைப்புப் பணிகள் குறித்து அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு தொலைப்பேசி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி தொடர்புகொண்டு கேட்டறிந்தார்.
இந்தியாவில் புதிதாக 202 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 3,343 ஆக குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: சீரமைப்புப் பணிகள் குறித்து கேட்டறிந்தார் பிரதமர் மோடி
இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில் கூறியதாவது: நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,31,880 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 2 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 4.49 கோடியாக உள்ளது. கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் சதவிகிதம் 0.01 ஆக உள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவோரின் சதவிகிதம் 98.81 ஆக உள்ளது. இதுவரை 220.66 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன எனக் கூறப்பட்டுள்ளது.
ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களின் புகைப்படங்களை அம்மாநில அரசு இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. விபத்துக்குள்ளான ரயிலில் பயணித்தவர்களின் உறவினர்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில் இவ்வாறு செய்யப்பட்டுள்ளது.
இணையதளத்தில் இறந்தவர்களின் புகைப்படத்தில் எண்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த எண்கள் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள உடலிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அடையாளம் கண்ட நபர்களின் எண்களைக் கொண்டு அதிகாரிகளைத் தொடர்புகொண்டால், அந்த உடல் உரியவர்களிம் ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒடிசாவின் பாலசோா் மாவட்டம், பஹாநகா் பஜாா் ரயில் நிலையம் அருகே ஜூன் 2ஆம் தேதி இரவு 6.50 மணியளவில் மூன்று ரயில்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானது
படிக்க | 200 பேரை அடையாளம் காண முடியவில்லை: ஒடிசா அரசு
பஹாநகா் பஜாா் பகுதியில் சரக்கு ரயில் நிறுத்தப்பட்டிருந்த தண்டவாளத்தில் கோரமண்டல் ரயில் நுழைந்து, சரக்கு ரயிலின் மீது மோதியது. இதில் கோரமண்டல் ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டன. அவை, சரக்கு ரயில் மீதும், அருகில் இருந்த மற்றொரு தண்டவாளத்திலும் சிதறி விழுந்தன.
அப்போது, அந்த தண்டவாளத்தில் எதிா்த்திசையில் வந்த பெங்களூரு-ஹெளரா விரைவு ரயில், அந்தப் பெட்டிகள் மோதி தடம்புரண்டு கோர விபத்து நேர்ந்தது.
விபத்தில் சிக்கியவர்களை தேசிய பேரிடர் மீட்புப் படையினர், விமானப் படையினர் மீட்டனர். அவர்களுக்கு உள்ளூர் மக்களும் உதவி புரிந்தனர். இதில் 290 பேர் உயிரிழந்தனர். 800க்கும் அதிகமானோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மீட்கப்பட்ட உடல்கள் புவனேஸ்வர் எய்ம்ஸ் உள்பட அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. விபத்தில் உயிரிழந்தவர்களில் 70 - 80 பேரை மட்டுமே அடையாளம் காண முடிந்துள்ளதாகவும், சுமார் 200 பேரின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்துள்ளதாக ஒடிசா அரசு தெரிவித்துள்ளது.
படிக்க | ஒடிசா ரயில் விபத்து: தமிழகத்தைச் சேர்ந்தவர்களில் 7 பேரைக் காணவில்லை
ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களின் புகைப்படங்களை அம்மாநில அரசு இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. விபத்துக்குள்ளான ரயிலில் பயணித்தவர்களின் உறவினர்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில் இவ்வாறு செய்யப்பட்டுள்ளது.
www.srcodisha.nic.in, bmc.gov.in, osdma.org ஆகிய இணையதளங்களில் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இணையதளத்தில் இறந்தவர்களின் புகைப்படத்தில் எண்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த எண்கள் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள உடலிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அடையாளம் கண்ட நபர்களின் எண்களைக் கொண்டு அதிகாரிகளைத் தொடர்புகொண்டால், அந்த உடல் உரியவர்களிம் ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாலசோரில் விபத்துக்குள்ளான கோரமண்டல் விரைவு ரயிலில் பயணித்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களில் 7 பேரைத் தொடர்புகொள்ள முடியவில்லை என ஒடிசா சென்றுள்ள தமிழக குழு தெரிவித்துள்ளது.
கோரமண்டல் ரயிலில் பயணித்த 7 பேர் பற்றி தகவல் தெரிந்தால் உறவினர்கள் மாநில கட்டுப்பாட்டறைக்கு 1070 என்ற எண்ணுக்கு தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒடிசாவின் பாலசோா் மாவட்டம், பஹாநகா் பஜாா் ரயில் நிலையம் அருகே ஜூன் 2ஆம் தேதி இரவு 6.50 மணியளவில் மூன்று ரயில்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானது.
படிக்க | 200 பேரை அடையாளம் காண முடியவில்லை: ஒடிசா அரசு
பஹாநகா் பஜாா் பகுதியில் சரக்கு ரயில் நிறுத்தப்பட்டிருந்த தண்டவாளத்தில் கோரமண்டல் ரயில் நுழைந்து, சரக்கு ரயிலின் மீது மோதியது. இதில் கோரமண்டல் ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டன. அவை, சரக்கு ரயில் மீதும், அருகில் இருந்த மற்றொரு தண்டவாளத்திலும் சிதறி விழுந்தன.
அப்போது, அந்த தண்டவாளத்தில் எதிா்த்திசையில் வந்த பெங்களூரு-ஹெளரா விரைவு ரயில், அந்தப் பெட்டிகள் மோதி தடம்புரண்டு கோர விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சிக்கியவர்களை தேசிய பேரிடர் மீட்புப் படையினரும், விமானப் படையினரும் மீட்டனர். அவர்களுக்கு உள்ளூர் மக்களும் தன்னார்வலர்களும் உதவினர்.
இதுவரை 290 பேர் உயிரிழந்துள்ளனர். 800க்கும் அதிகமானோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
படிக்க | ஒடிசா ரயில் விபத்தில் தமிழர்கள் யாருக்கும் உயிரிழப்பில்லை: மா.சுப்ரமணியன் பேட்டி
சென்னை செல்லவிருந்த கோரமண்டல் ரயிலில் தமிழகத்தைச் சேர்ந்த பலர் பயணித்துள்ளனர். அவர்கள் குறித்து தகவல் அறிந்து உதவ தமிழகத்திலிருந்து அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழு ஒடிசா விரைந்தது.
அதன்படி, கோரமண்டல் ரயிலில் பயணித்தவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த 294 பேர் தனி ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் வந்தடைந்தனர். அதில் 8 பேர் படுகாயம் அடைந்திருந்தனர்.
இந்நிலையில், கோரமண்டல் ரயிலில் பயணித்த தமிழர்களில் 7 பேர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றும், அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோரமண்டல் ரயிலில் பயணித்த 7 பேர் பற்றி தகவல் தெரிந்தால் உறவினர்கள் மாநில கட்டுப்பாட்டறைக்கு 1070 என்ற எண்ணுக்கு தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒடிசா மாநிலம் பாலாசோர் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில் சுமார் 200 பேரின் உடல்களை அடையாளம் காண முடியவில்லை என ஒடிசா அரசு தெரிவித்துள்ளது.
இறந்த 290 பேரில் கிட்டத்தட்ட 70 - 80 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில், புவனேஸ்வர் எய்ம்ஸ் உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் உடல்கள் வைக்கப்பட்டுள்ளன.
ஒடிசாவின் பாலசோா் மாவட்டம், பஹாநகா் பஜாா் ரயில் நிலையம் அருகே ஜூன் 2ஆம் தேதி இரவு 6.50 மணியளவில் மூன்று ரயில்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானது.
பஹாநகா் பஜாா் பகுதியில் சரக்கு ரயில் நிறுத்தப்பட்டிருந்த தண்டவாளத்தில் கோரமண்டல் ரயில் நுழைந்து, சரக்கு ரயிலின் மீது மோதியது. இதில் கோரமண்டல் ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டன. அவை, சரக்கு ரயில் மீதும், அருகில் இருந்த மற்றொரு தண்டவாளத்திலும் சிதறி விழுந்தன.
அப்போது, அந்த தண்டவாளத்தில் எதிா்த்திசையில் வந்த பெங்களூரு-ஹெளரா விரைவு ரயில், அந்தப் பெட்டிகள் மோதி தடம்புரண்டு கோர விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் சிக்கியவர்களை தேசிய பேரிடர் மீட்புப் படையினர், விமானப் படையினர் மீட்டனர். அவர்களுக்கு உள்ளூர் மக்களும் உதவி புரிந்தனர்.
மீட்கப்பட்ட உடல்கள் புவனேஸ்வர் எய்ம்ஸ் உள்பட அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அதில் சுமார் 200 பேரின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்துள்ளதாக ஒடிசா அரசு தெரிவித்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களில் 70 - 80 பேரை மட்டுமே அடையாளம் காண முடிந்துள்ளதாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவம் தன்னை சிறை அடைக்கும் நோக்கத்துடன் தனது கட்சியை அழிக்கும் வகையில் செயல்படுகிறது என பாகிஸ்தான் மாஜி பிரதமர் இம்ரான் கான் குற்றம் ...
சியோல்: தென் கொரியாவில் 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஆசிய விளையாட்டு போட்டி நடந்து வருகிறது. இதில் வட்டு எறிதலில் இந்தியாவின் பரத்ப்ரீத் சிங் என்பவர் தங்கம் வென்றார். அதேபோல், 400 ...
வாஷிங்டன்: இந்தியாவில் நடந்த ரயில் விபத்தைக் கண்டு மனம் உடைந்தது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து தொடர்பாக ஜோ பைடன் வெளியிட்ட அறிக்கை: ...
மூன்று மாதங்களுக்கு முன்னரே ரயில் வழித்தட பகுதிகளில் சிக்னல் அமைப்பிலுள்ள குறைப்பாடுகள் குறித்து தென்மேற்கு ரயில்வே மண்டல அதிகாரி எச்சரிக்கை விடுத்தது தெரிய வந்துள்ளது.
ஒடிஷாவின் பாலசோரில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு சனிக்கிழமையன்று நான் சென்றபோது, பிணவறை எங்கு உள்ளது என்று தேடினேன். அங்கிருந்தவர்களிடம் பிணவறை எங்கு உள்ளது என்று கேட்டேன்.
புதுடில்லி: ஒடிசாவில் நடந்த வேதனையான சம்பவத்திற்கு பிறகும், பொறுப்பு ஏற்க முடியமல் பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஓடிவிட முடியாது என காங்கிரஸ் முன்னாள் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.இது ...
அமராவதி: ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் ...
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இன்று இரவு 7.20 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை - ஹவுரா மெயில் (12840) ரத்து செய்யப்படுகிறது. ஒடிஸாவில் பாலசோர் ரயில் நிலையம் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பெங்களூருவிலிருந்து ஹவுரா சென்ற சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் என 3 ரயில்கள் விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் இதுவரை
எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் சிஸ்டம் என்பது ஒரு ரயில் ஒரு வழித்தடத்தில் ஓடும்போது, அதன் வேகம், நிலை மற்றும் பிற தகவல்களை கண்டறிந்து சிக்னலிங் சிஸ்டத்திற்கு அனுப்பப்படுகிறது.
ஒடிசா ரயில் விபத்து எதிரொலியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இன்று இரவு 7.20 மணிக்குப் புறப்படும் சென்னை-ஹவுரா ரயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
புவனேஸ்வர்: ரயில் விபத்து பலி எண்ணிக்கை 288 அல்ல 275 பேர் என ஒடிசா அரசு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது.இது குறித்து, ஒடிசா அரசு தலைமை செயலாளர் பிரதீப் ஜெனா நிருபர்களுக்கு அளித்த ...
இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 92 போட்டிகளில் விளையாடி 5712 ரன்கள் எடுத்துள்ளார். 12 சதங்கள், 28 அரைசதங்கள் அடங்கும்.
டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் (109) அடித்தவர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் ஸ்டோக்ஸ். மெக்குல்லம் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் ஆனதும் இங்கிலாந்து அணி அசாத்தியமான சாதனை படைத்துள்ளது. 13 டெஸ்ட் போட்டிகளில் 11 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இதையும் படிக்க: சிஎஸ்கே வீரர் ருதுராஜ் திருமணம்: யார் இந்த உட்கர்ஷா பவார்?
அயர்லாந்திற்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையும் படிக்க: இலங்கைக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டி: ஆப்கானிஸ்தானுக்கு 324 ரன்கள் இலக்கு!
அடுத்து முக்கியமான ஆஷஸ் தொடர் ஜூன் 16இல் தொடங்குகிறது. இதற்காக பயிற்சியில் ஏடுபட்டு வருகிறார் பென் ஸ்டோக்ஸ். இதனால் ஐபிஎல் போட்டியிலிருந்து சீக்கரமே கிளம்பி இங்கிலாந்து வந்துவிட்டார். தற்போது அளித்த பேட்டியில் ஸ்டோக்ஸ் கூறியதாவது:
நான் தவறான முறையில் கீழே விழுந்துவிட்டேன். எனது உடல் எடை முட்டியின் மீது குவிந்து விட்டது. அதிகமாக முட்டியை வளைத்துவிட்டேன். மேலும் எனக்கு 32 வயதாகிறது அதனால்கூட இப்படி ஆகியிருக்கலாம். நான் இன்று காலையில் பந்து வீசினேன். ஐபிஎல்க்கு பிறகு முதன்முறையாக பந்து வீசுகிறேன். பந்த்ய் வீசுவதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. எந்தப் பிரச்னைகளுமில்லை.
Dhanush D50 Update: ப பாண்டி படத்தை தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் உருவாகவுள்ளது டி50 படம். இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
டப்ஸ்மாஷ், டிக்டோக், ரீல்ஸ்களில் பிரபலமானவர் மிர்ணாளினி. பின்னர் தமிழில் சூப்பர் டீலக்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானார். ஜிகர்தண்டா தெலுங்கு ரீமேக்கிலும் நடித்திருந்தார். இந்தப் படத்தில் அவரது நடனம் வைரலானது. பின்னர் விஷாலின் எனிமி படத்திலும் அவர் ஆடிய நடனம் இணையத்தில் நல்ல வரவேற்பினை பெற்றது.
எம்ஜிஆர் மகன், ஜாங்கோ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். சாம்பியன் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.விக்ரமின் கோப்ரா படத்திலும் நடித்திருந்தார்.
தற்போது 2 தெலுங்கு படங்களில் நடித்து முடித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பவர் மிர்ணாளினி. இவரது புகைப்படங்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
இந்நிலையில் இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ள மிர்ணாளினி ரவி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். புதிய புகைப்படமொன்றுக்கு ரசிகர் ஒருவர் மிகப் பிரபலமான ஹாலிவுட் திரைப்படமான ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் திரைப்படத்தின் நாயகி மிச்செல் ரோட்ரிக்வெஸ் போலவே இருக்கிறார்கள் என கமெண்ட் செய்துள்ளார்.
இந்த புதிய புகைப்படங்களுக்கு பலரும் இதய எமோஜிக்களை கமெண்ட்டுகளில் பறக்கவிட்டு வருகின்றனர்.
ஸ்வீடன்: ஸ்வீடன் நாடு உடலுறவை ‛செக்ஸ் போட்டியாக அங்கீகரித்துள்ளது. இதற்காக வரும் 8 ம் தேதி முதல்‛செக்ஸ் சாம்பியன் ஷிப் போட்டி தொடங்கி நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போட்டிக்கு வித்தியாசமான ரூல்ஸ் வகுக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கும், மேற்கத்திய கலாசாரத்தை பின்பற்றும் அமெரிக்கா, ஐரோப்பியா நாடுகளுக்கும் இடையே ஏராளமான வித்தியாசங்கள்ளன. அங்குள்ள கலாசாரமும், இந்திய கலாசாரத்துக்கும் இடையே அதிக
"அரசியல் ரீதியான படங்களை வைத்து வணிக ரீதியான லாபத்தை ஈட்டுவது என்பது தமிழ்நாட்டில் மட்டும் தான்" என்று 'மாமன்னன்' ஆடியோ வெளியிட்டு விழாவில் பேசியுள்ளார் இயக்குநர் வெற்றி மாறன்.| Director vetrimaran speech in Maamannan Audio & Trailer Launch
ஒடிசாவில் 3 ரயில்கள் விபத்துக்குள்ளானதில் 275 பேர் உயிரிழந்ததாக அம்மாநில அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. முன்பு பலி எண்ணிக்கை 288 என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 275 என்று திருத்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 15 ஆண்டுகளில் பல ரயில்வே அமைச்சர்கள் பதவிக்கு வந்த பிறகும் இந்தியாவில் ரயில் விபத்துகள் நிற்கவில்லை. ஜீரோ ரயில் விபத்து என்ற இலக்கை எட்டுவது எப்போது?
ஓடிசா செல்வதற்கும், அம்மாநிலத்தில் இருந்து நாட்டின் பிற பகுதிகளுக்கு செல்வதற்குமான டிக்கெட் கட்டணம் தாறுமாறாக உயர்த்தப்பட்டிருப்பதற்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.